Skip to main content

கிடாம்பி ஆச்சானும், ராகு கேது தோஷமும்

எம்பெருமானார் ஸ்ரீரங்கத்துல் கத்ய த்ரயம் சாதித்து, கோயிலில் பல மாறுதல்களை செய்து உயர்ந்து நின்ற சமயம். ஸ்ரீரங்கத்தில் சிலருக்கு இது மிகுந்த பொறாமையையும், எரிச்சலையும் கொடுத்தது. அந்த அஸுயை அவர்களை கொலை செய்யவும் தூண்டியது.
அவரது பிக்ஷையில் விஷம் கலந்து கொடுக்க அதிலிருந்து தப்பினார். அமைதியாக நஞ்சு கலந்த அன்னத்தை திருக்காவிரியில் கரைத்து உபவாசம் மேற்கொண்டார். இதை கேள்விப்பட்ட திருகோட்டியூர் நம்பி உடனே திருவரங்கம் விரைந்தார். தனக்கு உபதேசம் செய்த ஆசாரியரை எதிர்கொண்டு அழைக்க காவேரிக் கரைக்கு எழுந்தருளினார் எம்பெருமானார்.
கொதிக்கும் வெயிலில் கொதித்துக்கொண்டு இருந்த மணலில் நம்பிகள் திருவடிகளிலே தண்டம் சமர்பித்தார். ஆசாரியன் “எழுந்திரு” என்று சொல்லும் போது தான் எழுந்திருக்க வேண்டும் என்பது மரபு. ஆனால் நம்பியோ ஒன்றும் சொல்லாமல் அப்படியே இருக்க அங்கிருந்த கிடாம்பி ஆச்சான் “ஐயோ இது என்ன ஆசாரிய சிஷ்ய லட்ஷணம் ? நெருப்பில் இட்ட இளந்தளிர்போல சூடு மணலில் கிடக்க அதை பார்த்துக்கொண்டு இருக்க முடியுமா ? “ என்று ஓடி பரிவுடன் அவரைத் தூக்கிவிட நம்பி “ஆச்சான், உம்மை போல் தான் அவர் திருமேனியில் பரிவுடைய ஒருவரை அறியவே காத்திருந்தோம். இன்று முதல் நீரே அவருக்கு அமுது செய்வித்து சமர்பிக்க வேண்டும்” என்று நியமித்தார். அன்று முதல் கிடாம்பி ஆச்சானே ஸ்வாமிக்கு மடப்பள்ளி கைங்கரியத்தை சிரத்தையுடன் செய்தார்.
போன வருஷம் ஸ்ரீராமானுஜரின் 1000வது திருநட்சத்திரம் ஆரம்பத்தில் ஸ்ரீபெரும்புதூரில் ஒரு நாள் முழுக்க வேறு எந்த வேலையும் செய்யாமல் உடையவரையே பார்த்துக்கொண்டே இருந்தேன். எதோ கியூவில் உடையவரை கிட்டே தரிசிக்க வேண்டும் என்ற ஆசையால் போக திடீர் என்று கூட்டம் தள்ளியது. எப்போது என்னை அவதார மண்டபத்துக்கு உள்ளே தள்ளி வெளியே பூட்டிவிட்டார்கள்.
ஸ்ரீராமானுஜரின் அவதார மண்டபத்தில் அவரின் சீடர்களான 74 சிம்மாசன அதிபர்களுடன் 360 டிகிரியில் கையால் தொட்டு பார்க்கும் தூரத்தில் பெரும்புதூர் வள்ளலைச் எந்த அலங்காரமும் இல்லாமல் அந்த திருமேனியை சேவிக்கும் பாக்கியம் பெற்றேன். அந்த திருமேனி பற்றி சிறுகுறிப்பு...
“நடந்த கால்கள் நொந்தவோ” என்றபடி ஸ்ரீராமானுஜர் தன் கடைசி காலத்தில் படுத்துக்கொண்டு இருந்தார். எம்பார், வடுக நம்பி முதலான சிஷ்யர்கள் அவரை சுற்றி இருந்தார்கள். அப்போது அவருடைய மருமகனாரின் திருக்குமாரரர் கந்தாடையாண்டான் “தேவரீர் அவதரித்த ஸ்ரீபெருபுதூர் ஸ்தலத்தில் ஸர்வ காலத்திலும் வரும் சந்ததியினர் எல்லோரும் சேவிக்கும்படி தேவரீருடைய ஒர் அர்ச்சா திருமேனி விக்ரஹம் ஏறியருளப் பண்ண வேண்டும்” என்று விண்ணப்பம் செய்ய எம்பெருமானாரும் ”அப்படியே செய்யும்” என்று அனுமதி அளித்தார்.
கந்தாடையாண்டானும் உடனே சிற்பியை அழைத்து அப்போதைய திருமேனி வடிவத்தை எம்பெருமானார் முன்பு அந்த விக்ரஹத்தை கொண்டு வந்து வைக்க உடையவர் திருக்கண் சாத்தி, தன் திருக்கையை ஸ்பர்சமும் செய்வித்து, தம்முடைய திவ்யசக்தி நிலைபெறும்படியாக நன்கு அணைத்து பூஷ்ய மாஸத்தில் குரு பூஷ்யத்தில் ப்ரதிஷ்டை செய்யவும் என்று திருமுகம் எழுதி குறித்து அனுப்பினார்.
கந்தாடையானும் அப்படியே திருப்ரதிஷடையும் செய்வித்தார். ( திருப்ரதிஷ்டை வைகாசன ஆகம முறைப்படி நடந்தது ). அங்கே ப்ரதிஷ்டையான அதே தினத்தில் அங்கு கோயிலில் எம்பெருமானாரின் திருமேனியில் தளர்ச்சி ஏற்பட்டது.

“இது என்ன நாள் ?” என்று உடையவர் கேட்க கந்தாடையானுக்கு எழுதிக் கொடுத்த நாளாயிருக்க உடையவரும் வியப்புற்றவராய் அவரை விரைந்து வர செய்தி அனுப்பினார். கந்தாடையான் ஓடி வந்து உடையவரை சேவிக்க மற்ற அந்தரங்கமான முதலிகள் எல்லோரும் சேவித்துக்கொண்டு இருக்க... உடையவர் தம்முடைய ஆசாரியர்களையும், பேரருளாளனையும் நம்பெருமாளையும் நினைத்து பரமபதம் சென்றடைந்தார்.
எப்பேர்பட்ட திருமேனி !.
இந்த நூற்றாண்டு தொடக்கத்தில் ஸ்ரீபெரும்பூதூர் எம்பெருமானாருக்கு பாலைக் கொண்டு திருமஞ்சனம் ( பாலாபிஷேகம் ) செய்தால் ராகு கேது கிரகங்களால் ஏற்படும் என்று தவறான செய்தி வந்த பிறகு பலர் பால் திருமஞ்சனம் செய்ய ஆசைப்பட்டார்கள் 

“சரணாகதி மோட்சத்தை பெறுவதற்கு ஓர் உபாயம் ஆகும்” என்கிறார் ஸ்ரீவேதந்த தேசிகர்.
“தமது கத்யத்ரயத்தில் பிதரம் மாதரம்” என்று தொடங்கும் ஸ்லோகத்தில் “உற்றார் உறவினர் ஆகிய அனைவரையும் எல்லாச் செல்வங்களையும் எல்லாச் சாதனங்களையும் எம்பெருமானை அடைவதைத் தவிர மற்ற எல்லாப் பயன்களையும் கைவிட்டு உலகளந்த திருவடியை உபாயமாக கொள்கிறேன்” என்று சரணாகதி செய்கிறார்.

சரணாகதி என்பதை ஆழமாக உபதேசித்து கத்ய த்ரயம் கொண்டு அதை சாதித்து அதையே எம்பெருமானார் தரிசனம் என்று கொண்டாட வேண்டும்.

ஓர் உதாரணம் சொல்கிறேன்.

ஒருவன் சுவற்றில் இரண்டு ஓட்டை போட்டுக்கொண்டு இருந்தான். ஒன்று பெரியது, மற்றொன்று சிறியது.
“எதுக்கு இரண்டு ஓட்டை ?” என்றான் நண்பன்
“ஓ அதுவா புனை அதுவழியாக போக”
“சரி எதுக்கு இரண்டு - அதுவும் ஒன்று பெரிதாக இன்னொன்று சின்னதாக ?”
“பெரிய பூனை போவதற்கு பெரிய ஓட்டை, அதனுடைய குட்டி போவதற்கு சின்ன ஓட்டை”
”அட முட்டாளே பெரிய ஓட்டை ஒன்று போதுமே அதிலேயே சின்ன பூனை செல்லலாமே!”

மோட்சத்தை அடைய பெரிய ஓட்டை போட்டு கொடுத்தவரிடம் நாம் சின்ன ஓட்டையான விஷயங்களை (  ராகு கேது தோஷம்அ - ல்லது வேறு ஏதோ தோஷம்) கேட்பது எவ்வளவு அபத்தம் ?

அவர் சுலபமாக காட்டிக்கொடுத்த விசிஷ்டாத்வைத ஸித்தாந்தத்திற்கு இழைக்கப்படும் அநீதி. இதை நாம் பலருக்கு உணர்த்தி புரியவைக்க வேண்டும். பெருமாளுக்கு தத்யோதன்னத்தோட நாகப்பழம் சேர்த்து கண்டருள  செய்ததால் ஜலதோஷம் பிடித்துள்ளது என்று கண்டுபிடித்து கஷாயம் கொடுத்த எம்பெருமானார் !.
இவ்வளாவு பால் திருமஞ்சனம் செய்தால் அவர் திருமேனி தாங்குமா ?

நம் எல்லோரும் கிடாம்பி ஆச்சான் ஆகிவிட முடியாது, ஆனால் அதிகமான பாலை அவர் மீது உற்றாமல் இருக்கலாம்.

6.3.2017
திருகச்சி நம்பி திருநட்சத்திரம்

பிகு:  கட்டுரை மாற்றி எழுதப்பட்டது. யாரையும் குற்றம் சொல்லும் நோக்கில் கட்டுரை எழுதப்படவில்லை. 

Comments

  1. பெருமாளின் அர்ச்சாவதாரம் வெறும் கவ்வினால் வடிக்கப்பட்ட பிரதிமை அன்று, அது அவனே என்பது ராமானுஜர் காலத்திலும் அதற்கு முன்பு திருமழிசையாழ்வார் காலத்திலும் ஸ்தாபிக்கபட்ட ஒன்றுதான் (இருமுறை மூலவர் அரங்கநாதர் பவளவாய் திறந்து பேசியதும், திருமழிசை ஆழ்வார் "பைந்நாகப்பாய்", "கிடந்தவாறெழுந்து" போன்ற செய்திகளிலும் அறிவது). பெரும்புதூரிலும் எம்பெருமானாரே அங்கு எழுந்தருளியிருப்பது. ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க.

    ராகு, கேது தோஷங்களைப் போக்குவது குரு அல்லவா? ராமானுசனைச் சரண் புகும் வழியாக இந்தப் பரிகாரத்தைச் சொல்லியிருக்கிறார். அபிஷேகம் செய்யும் நேரம் நிதானமாக அவரின் மேனியைப் பார்க்கும் வாயப்பு உள்ளதே. அந்த சமயத்தில் அவரின் காரேய் கருணை சித்திக்கலாமல்லவா? அவரின் திருமேனி பாங்கு கெடாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டியதும் நம் கடமைதான்.

    ReplyDelete
  2. அருமையான பகிர்வு....

    ஜோதிடர் சொன்னார் என்று அவரை நம்பி பரிகாரம் செய்வது எவ்வளவு அப்பத்தம்.....அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டிய விஷயம்...

    ReplyDelete
  3. "உடையவர் தம்முடைய ஆசாரியர்களையும், பேரருளாளனையும் நம்பெருமாளையும் நினைத்து பரமபதம் சென்றடைந்தார்" - பெரும்புதூரில் ப்ரதிஷ்டை நடந்த தினத்திலிருந்து 10-12 நாட்களுக்குள் ராமானுஜர் பரமபதித்திருக்க வேண்டும். ஸ்ரீரங்கம் கோவில் பாஞ்சராத்ர ஆகமத்தில் இருக்கும்போது, ஸ்ரீபெரும்புதூர் வைகானச ஆகமத்தில் அமைந்திருப்பதும் கவனிக்கத்தக்கது. இதை எதையொட்டி முடிவு செய்கின்றனர்?

    ReplyDelete
  4. Dear Sir,

    I understand your sentiments behind writing this message. However, Sri AMR is not responsible for packet milk thirumanjanam. In fact several times he has written vehemently condemning such packet milk thirumanjanams and advised both Archakas and the Temple authorities to not use pasteurized milk for thirumanjanam. He has written editorials asking archakas and the Temple authorities to protect Swami Bhashyakarar's Thirumeni. Twenty years back Sri Udayavar Sannithi was in a dirty and dilapidated condition without much revenue under a poor maintenance. Hundreds of SriVaishnavites used to pass through SriPerumbhudhur for many festival occasions to Kanchipuram during the Uthsavam season at Kanchi. But they had no time to spend a couple hours to worship Sri Ramanuja. Many kainkaryams including the Big Temple Car (Ther) and prakaram lightings were completed by the readers after reading the appeals made by Sri AMR in Kumudam Jothidam magazine. You can verify the truth of these statements by checking with the Temple the authorities. After Sri AMR wrote about Sri Bhashyakarar's perumai in his writings thousands of people started coming to Sri Perumbhudhur to get Swami Emperumanar's anugraham. If the avarice of the Temple Authorities who are mostly political appointments, continue to accept packet milk in spite of severe opposition by Sri AMR himself, it will be fair on your part if you place the responsibility on the Temple authorities and not on Sri AMR. He only advocated Saranagathi to Sri Ramanuja and never referred to the Great Acharya as a pariharam for Graha Doshams. Please ascertain the facts thoroughly before making such unkind allegations.

    Kannan AMR, New York

    ReplyDelete
    Replies
    1. Dear Mr.Kannan
      I have modified the article and also written another one here. http://sujathadesikan.blogspot.in/2017/03/blog-post_13.html

      Delete
  5. Very deep thinking.you are practicing srivaishnavisim in every aspect of life thats great.

    ReplyDelete
  6. உடையவர்சிம்மாசனபெரியவர்களின்சேவைஉள்வாங்கியதங்களின்பாததரிசனம்கிடைத்து

    ReplyDelete
  7. எப்படி எம்பெருமானாரை பிரதிஷ்டை செய்து வைத்தது வைகானஸ ஆகமம் என்று கூறியுள்ளார் அதற்கு ஆதாரம் உள்ளதா? ஒரு காலத்தில் திருவேங்கடம், திருப்பெரும்புதூர் ஆகிய இரண்டுமே பாஞ்சராத்ரம் தான் பிற்காலத்தில் மாறி3.

    ReplyDelete

Post a Comment