Skip to main content

சந்திரஹாசம் - புத்தக விமர்சனம்

”சந்திரஹாசம் புத்தக வடிவில் ஒரு சினிமா!” என்று கடந்த இரண்டு மாதங்களாக ரஜினி, கமல், இளையராஜா ... என்று பல பிரபலங்கள் கையில் வைத்துக்கொண்டு விளம்பரப்படுத்தினார்கள். சினிமாகாரகள் அடாச தமிழ் படத்தையே இந்த மாதிரி படத்தை பார்த்தில்லை என்று சொல்பவர்கள்... ... ஆனால் காமிக் படிப்பவர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் என்று எல்லொரும் புகழ ... 1500 புத்தகம் வெறும் 1000 ரூபாய்க்கு ... ஒரு வித பிரஷர் - ஆடர் செய்து சில வாரங்களுக்கு முன் வந்து சேர்ந்தது.

பேக்கிங் அருமையாக. இந்த மழை வெள்ளத்திலும் ஓரம் நசுங்காமல் கற்புடன் வந்தது வியப்பை தந்தது. ஆர்வமாக பிரித்தேன். வடிவமைப்பு நன்றாக இருக்கிறது. சரசரவென்று பிரித்து படிக்க ஆரம்பித்தேன். முதலில் ஓவியங்கள் நன்றாக ...போக போக சுமாராக பிறகு ரொம்ப சுமாராக இருப்பதாக எனக்கு தோன்றியது.

ஒரே ஓவியம் சில இடங்களில் கட் & பேஸ்ட் எரிச்சலை தந்தது. கொடுத்த காசுக்கு தரமான ஒரு புத்தகத்தை எதிர்ப்பாப்பது தவறு இல்லையே. லாங் ஷாட் ஓவியங்கள் நிறைய. ஆனால் அது மட்டும் நிறைய இருந்தால் ஏதோ ஆல்பம் பார்க்கும் எண்ணமே வருகிறது. உற்று நோக்கினால் எல்லா ஓவியங்களிலும் ஏதோ ஒன்று ரிப்லிகேட் ஆகியிருக்கிறது. குதிரை, படை வீரர்கள், யானை, மாட்டுவண்டி. வீடு, கூடாரம்...

பெண்கள் படங்கள் எல்லாம் சூர்ப்பனகைக்கு மேக்கப் போட்ட மாதிரி இருக்க ஆண்களின் படங்களை பற்றி நான் ஒன்றும் சொல்ல போவதில்லை. மரம் செடி கொடிகள் தப்பித்தது. ஒரே ஒவியர் எல்லா ஓவியங்களையும் தீட்டவில்லை என்று தெரிகிறது. எல்லாம் வேற வேற ஸ்ட்ரோக் ... பார்க்கும், படிக்கும் வாசகருக்கு சின்ன ஜெர்க்கை தருகிறது.

அமர் சித்ர கதைகள், டிண்டின், ஆஸ்டரிக்ஸ் முழுவதும் படித்த எனக்கு இந்த புத்தகம் படிக்கும் போது காமிக் படிக்கும் எண்ணமே வரவில்லை. காரணம் சரியான Story Board இல்லை. அல்லது அதற்கு உழைக்கவில்லை. உதாரணம் இரண்டு படங்களை பெரிதாக போட்டுவிட்டு “புனிதப் பல் இருக்கும் புத்தர் கோயிலுக்குள் நுழையும் பாண்டியர் படை” என்று போட்டிருக்கிறார்கள். படிக்கும் போது கதையா அல்லது கட்டுரையா என்று கண்டுபிடிக்க முடியாதபடி இருக்கிறது. ”புனிதப் பல் இருக்கும் புத்தர் கோயிலுக்குள் பாண்டிய படை நுழைந்தது....” என்று சின்ன மாற்றம் செய்தால் படிக்க நன்றாக இருந்திருக்கும்.

புத்தகத்தை முழுவதும் படித்த பிறகு விலை கொஞ்சம் அதிகமோ என்று தோன்றியது... கொடுத்த காசுக்கு எவ்வளவு பக்கங்கள் என்று பார்த்தேன்.... விகடன் தாத்தா புத்திசாலி பக்க எண்களே இல்லை..

ஆக மொத்தம் இந்த புத்தகம் வெளியே லூயி பிலிப்பி சட்டை உள்ளே கிழிஞ்ச பனியன்

பாகுபலி போல அடுத்த பாகம் வருகிறதாம்.... அவசரமே இல்லை மெதுவாக வரட்டும்... சந்திரawesome ஆக இருக்க அட்வான்ஸ் வாழ்த்துகள்..

Comments

  1. ஒரே வரி விமரிசனம்: "ஆக மொத்தம் இந்த புத்தகம் வெளியே லூயி பிலிப்பி சட்டை உள்ளே கிழிஞ்ச பனியன்" அருமை!

    ReplyDelete
  2. ம்... என்ன சொல்ல?

    புத்தகத்தை வாங்கிப் படித்தால்தான் சொல்ல முடியும்!

    (வாங்கலாமா? வேண்டாமா?)

    ReplyDelete

Post a Comment