Skip to main content

பித்துக்குளி முருகதாஸ்

இன்றும் பசுமையாக நினைவிருக்கிறது. 1981-82 என்று நினைக்கிறேன். என் சித்தி பையனின் உபநயனத்துக்கு சென்றிருந்தேன். குமார போஜனத்துக்கு என்னை உட்கார வைத்தார்கள். என் மனம் முழுவதும் இலையில் இல்லாமல், சற்று நேரத்துக்கு முன் உபநயனத்துக்கு வந்திருந்த ஒருவர் கையடக்க டேப்ரிக்கார்டரின் மீது இருந்தது. அப்போது டேப்ரிகார்டர் புதுசாக வந்திருந்த சமயம்.
குமார போஜனம் போட்டோவிற்கு போஸ் கொடுத்த பின் ”பசி இல்லை” என்று எழுந்து அந்த டேப்ரிக்கார்டர் மாமாவை தேடி போனேன்.

“என்ன என்றார்?”

“டேப்ரிக்கார்டர்... “

“ஆமாம் டேப்ரிக்கார்டர்.. அதுக்கு என்ன?”

“இப்ப போட்டீங்களே அந்த பாட்டு யார் பாடியது?”

“எந்த பாட்டு ?” என்று தன் பையை பெருமையாக திறந்து தன் கலக்‌ஷனை காண்பித்தார் அதில் ஏகபட்ட கேஸ்சட்... இதில் எப்படி தேடுவது ?

“அலைபாயுதே கண்ணா...”

“ஓ அதுவா அது பித்துக்குளி முருகதாஸ்.. “ என்று கேஸ்சட் படத்தை காண்பித்தார்.
டேப்ரிக்கார்டரை பார்க்காமல் அந்த கேஸ்சட்டை பார்த்தால் அவருக்கு கொஞ்சம் ஏமாற்றம்... தாம்பூலப் பையை வாங்கிக்கொண்டு சென்றுவிட்டார்

”Lord Krishna - Pithukuli Murugadas"

பித்துகுளி என்ற பெயரை முதல் முறை அன்று தான் கேட்டேன்.

திருச்சிக்கு வந்து முதல் வேலையாக அலைந்து திரிந்து அந்த கேசட்டை தேடி வாங்கினேன். அந்த ஒரு பாடல் என்னை இன்றும் வசிகரிக்கிறது.

எவ்வளவு முறை கேட்டிருப்பேன் என்று எனக்கு தெரியாது. இன்னும் கேட்டுக்கொண்டே இருக்கிறேன். ஏன் என்னை அவர் பாட்டு ஈர்த்தது

இந்தப் பாடலில் கடைசியில் அவர் எப்படி உருகிறார் என்று பாருங்கள்... தானும் உருகி, கேட்பவர்களையும் உருக வைக்கும் வசீகரக்குரல்...அந்த மேதைக்கு என் அஞ்சலிகள்.

Comments

  1. அந்த இனிய பாடலும், திருச்சி பற்றிய தங்களின் நினைவலைகளும் மிக அருமை.

    குறிப்பாக இன்று இதனை பகிர்ந்து கொண்டுள்ளதற்கு என் நன்றிகள்.

    இசை மேதையான அவருக்கு என் அஞ்சலிகளும்.

    ReplyDelete
  2. முருக பக்தரான அவரின் மறைவு இன்று கார்த்திகை மாதப்பிறப்பு + முருகனுக்கு உகந்ததான சஷ்டி திதி + செவ்வாய்க்கிழமை + கிருத்திகை + சூர சம்ஹார தினம் ஆகியவை சேர்ந்துள்ள தினத்தில் நிகழ்ந்துள்ளது மிகவும் ஆச்சர்யமாகவே உள்ளது.

    ReplyDelete

Post a Comment