Skip to main content

Posts

Showing posts from June, 2013

தாத்தாவுக்குக் கடிதம்

தாத்தாவுக்கு அந்த முக்கியமான கடிதத்தை நான் ஏழாம் வகுப்பு படிக்கும் போது எழுதினேன். தபால் பெட்டியில் போட்ட கொஞ்ச நேரத்தில் அதை திரும்ப எடுக்க வேண்டியிருந்தது. ஏன் என்று தெரிந்து கொள்ள எனது சுயபுராணம் கொஞ்சம்… மின்னஞ்சல், செல்பேசி, வீட்டுக்கு வீடு தொலை பேசி என்று எதுவும் இல்லாத அந்தக் காலத்தில் செகந்திராபாத்தில் இருக்கும் என் தாத்தாவுக்கு மாதம் ஒருமுறை ‘இன்லாண்ட்’ கடிதம் எழுதுவேன். இன்லாண்டில் நிறைய சௌகரியங்கள்; ஸ்டாம்ப் ஒட்ட வேண்டாம்; எழுத நிறைய இடம் இருக்கும்; முக்கியமாக தாத்தாவைத் தவிர வேறு யார் கையில் கிடைத்தாலும் போஸ்ட் கார்ட் மாதிரி பிரிக்காமலே படிக்க முடியாது. மாதா மாதம் என்ன எழுதினேன் என்று தெரியாது. சேகரித்து வைத்திருந்தால் ‘தாத்தாவுக்கு எழுதிய கடிதங்கள்’ என்று ஒரு புத்தகம் போட்டிருக்கலாம். இன்லாண்ட் லெட்டரில் எழுதுவதில் உள்ள ஒரே சவால், அது ‘அன்ரூல்ட்’. அதனால் முதலில் பென்சிலில் லேசாகக் கோடு போட்டு எழுதிவிட்டு பின்னர் கோடுகளை அழித்துவிடுவேன். எழுத்துத் திறமை என் ரத்தத்திலேயே ஊறியது என்று தப்புக் கணக்கு போடாமல் இருக்க நான் எழுதிய ஒரு கடித நகலைக் கொடுத்துள்ளேன்.

எஸ்.ராஜகோபாலன்

எழுத்தாளர் சுஜாதாவின் சகோதரர் திரு எஸ்.ராஜகோபாலன் வியாழன் நள்ளிரவு ஸ்ரீரங்கத்தில் ஆசாரியன் திருவடியை அடைந்தார். குமுதம் பக்தி பத்திரிகையில் வந்த பிரம்மசூத்திரத்திற்கு இவருடைய பங்கு நிறைய. பல விஷயங்களை படித்தவர் சரளமான ஆங்கிலம், தமிழில் மிக கஷ்டமான விஷயங்களையும் எளிதில் சுவைப்பட சொல்லக்கூடியவர். போன முறை அவரை சந்தித்த போது தொடர்ந்து 5 மணி நேரம் நம்மாழ்வார், அரசியல், சுஜாதா என்று பல விஷயங்களை பேசிக்கொண்டு இருந்தோம். சில வாரங்களுக்கு முன்பு பேசிய போது "என்ன தேசிகன் எங்களையும், ஸ்ரீரங்கத்தையும் மறந்தாச்சா?" எப்ப வருவீர்கள் என்று கேட்டார். என்னுடைய சிறுகதை தொகுப்பிற்கு 72 வயசிலும் முழுவதும் படித்துவிட்டு முன்னுரை எழுதி தந்தது என் பாக்கியம். சில விஷயங்கள் குறித்து இவரிடம் சந்தேகம் கேட்டால், அதை பற்றி அறிந்துக்கொண்டு 3-4பக்கம் எழுதி தபாலில் அனுப்பிவிடுவார். சில இக்கட்டான நேரங்களில் இவருடன் பேசினால் ஒரு தெளிவு கிடைக்கும். இனி அது கிடைக்கப் போவதில்லை என்று நினைக்கும் போது வருத்தமாக இருக்கிறது. சமீபத்தில் எழுத்தாளர் கடுகு இவருக்கு நாலாயிர திவ்யபிரபந்தம் புத்தகம் அனுப்பினா