Skip to main content

Posts

Showing posts from 2008

பெண்களூர்-0 9

"சார், உங்களிடம் வேலை செய்யும் குமார் (பெயர் மாற்றப்படுள்ளது, அவர் ஒரு பெங்காலி) பக்கத்தில் இருக்கும் அப்போலோ ஆஸ்பத்திரியில் இருக்கிறார், அவருக்கு அடிப்பட்டிருக்கிற‌தாம்" "என்ன ஆயிற்று?" "என்னவென்று தெரியவில்லை. ஆனால் காரை பார்க்கிங்கிலிருந்து எடுத்துக்கொண்டு வெளியே வரும் போது, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் மோதிவிட்டார்களாம்" [%image(20080729-bangalore_dna.jpg|225|158|null)%] புதன் கிழமை மாலை 6:40க்கு செல்பேசியில் இந்த சம்பாஷனை நடைபெற்றது. நான் அந்த சமயம் மீட்டிங்கில் இருந்தேன். மீட்டிங்கை விட்டுவிட்டு எங்கள் அலுவலகம் பக்கத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு விரைந்தேன். குமார் அங்கு டாக்டரிடம் பேசிக்கொண்டிருந்தார். அவர் கண்ணில் கலவரம் தெரிந்தது. "என்ன ஆச்சு குமார்?" "காரை வெளியிலே எடுக்கும் போது ஸ்கூட்டரில் வேகமாக வந்த இருவர் மோதி கீழே விழுந்துவிட்டார்கள். எனக்கு ஒன்றும் ஆகவில்லை, ஆனால் அவர்களுக்கு கை, காலில் சின்ன அடி," என்றார். அடிப்பட்டவர்கள் முதலுதவி பெற்றுக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு 45 வயசுக்கு மேல் இருக்கும். என்ன காயம் என

எலக்டரானிக்ஸ் கனவுகள்

பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எடுத்த புத்தர் எப்படி இருப்பாரோ அதுபோல் பாதியளவு புத்தர்சிலை திருச்சியில் எங்கள் வீட்டு எதிர்ப்புறம் உள்ள அருங்காட்சியக வாசலில் மழையிலும் வெயிலிலும் கூட சிரித்துக்கொண்டு அமைதியாக இருக்கும். காவிரி ஆற்று மணலில் கண்டெடுத்தது என்று தினத்தந்தி பேப்பரில் நான்காம் பக்கம் படத்துடன் செய்தி வந்தது நினைவிருக்கிறது. புத்தர் வந்த அதே சமயம் 'நானோ எலக்ட்ரானிக்ஸ்' என்ற சின்ன கடையும் எதிர்ப்புறத்தில் 'ரேடியோ, '2-In-One, டிவி ( Solidare, Dynora, JVC, Sony, Panasonic ) மற்றும் எலக்ட்ரானிக்ஸ் ஐட்டங்கள் சிறந்த முறையில் ரிப்பேர் செய்து தரப்படும்' என்ற போர்டுடன் வந்தது. ரிப்பேர் என்பது தவறான‌ பிரயோகம், 'சிறந்த முறையில் பழுது பார்த்துத் தரப்படும்' என்று இருக்க வேண்டும். புத்தருக்கும் எனக்கும் தமிழ் படிக்கத் தெரிந்திருந்தால் அன்றே சொல்லியிருப்போம். ஒரு முறை எங்கள் வீட்டு டேப் ரிக்கார்டர் பழுதான போது, அங்கே எடுத்துச் சென்றேன். கடையில் இருந்தவர் அதை திறந்து பார்த்து, "தம்பி பெல்ட் அறுந்துபோச்சு. இரண்டு ஹவர் கழித்து வாப்பா," என்றார். திரும்

நட்சத்திர எழுத்தாளர் (1935 - 2008) - குவளைக் கண்ணன்

1979, 80இல் ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூ படிக்கும்போது என் வகுப்புத் தோழனான ஸ்ரீதர் வீட்டுக்குப் போக ஆரம்பித்தேன். அந்த வீடு எனக்குப் பெரிய ஆச்சரியத்தை வைத்திருந்தது. வீட்டின் பல இடங்களில் சுவரை மறைத்துக்கொண்டு புத்தகங்கள் நிரம்பிய கண்ணாடி வைத்த மர அலமாரிகள் நின்றன. மேசை நாற்காலிகள்மீது பக்க அடையாளம் வைக்கப்பட்ட புத்தகங்கள் கிடந்தன. பாடப் புத்தகங்களைத் தவிர வேறெந்தப் புத்தகமும் இல்லாத வீட்டில் வளர்ந்த என்னைப் புத்தகங்கள் நிரம்பிய அந்த வீடு கவர்ந்தது. ப்ளஸ் டூ முடித்துவிட்டு ஸ்ரீதரும் நானும் ஒரே கல்லூரியில் இளங்கலை வணிகவியல் சேர்ந்தோம். ஸ்ரீதரின் அப்பா டாக்டர் எஸ். கிருஷ்ணமாச்சாரி M.D., DMRD, சேலம் அரசு மருத்துவமனையில் ரேடியாலாஜிஸ்டாக இருந்தார். அந்த வீட்டோடு நெருக்கம் அதிகரித்தது. அந்த வீட்டில் இருக்கும் புத்தகங்களை எடுத்துப் பார்க்க ஆரம்பித்திருந்தேன். புத்தகங்களின் முதல் பக்கத்தில் எஸ். கிருஷ்ணமாச்சாரி என்ற பெயரும் ஒரு தேதியும் எழுதியிருக்கும். சில புத்தகங்களில் சீனிவாசராகவன் என்ற பெயர் எழுதப்பட்டிருக்கும். புத்தகங்கள் படிக்க வேண்டும் என்கிற ஆசை ஏற்பட்டு உள்ளுக்குள் அவசியம்போல் ஆகியிருந்தது.

சுஜாதா அஞ்சலி கட்டுரைகள் குமுதம் தீராநதி(இரண்டாம் பகுதி)

பகுதி-2 - வ.ஜ.ச. ஜெயபாலன், எம்.ஜி.சுரேஷ், இரா.நடராஜன், த.பழமலய் வ.ஜ.ச. ஜெயபாலன் எதிர்பாராமல் வந்த சுஜாதாவின் மரணச் சேதியில் கனத்த மனசு கொஞ்ச நேரம் முடங்கிப் போனது. கோடை காலம்வரை அவர் வாழ்ந்திருந்தால் இப்படித் துன்பப் பட்டிருக்க மாட்டேன். நினைவில் முள்ளாகச் சஞ்சலப்படுத்தும் ஒரு கணக்கு தீர்க்கப்பட்டிருக்கும். 1981 தைமாத ஆரம்பத்தில் மதுரை தமிழாராய்ச்சி மாநாட்டு மண்டபத்தில் என்னைச் சந்தித்ததில் இருந்து 1999_ல் எனது அவசர புத்தியால் முரண்பட்டதுவரை நமது நட்பு எப்போதாவது நேரிலும் எப்போதும் இணையத்திலும் செழித்தபடியே இருந்தது. நட்பு மனசுக்கு பல்லாயிரம் கிலோ மீட்டரும் நடந்து போகிற தூரம்தானே. மைதொட்டு எழுதுகிற பேனாக்குச்சிக் காலத்தில் இருந்து அதி நவீனக் கணினிக் காலம் வரைக்கும் சுஜாதா விஞ்ஞானத் தொழில் நுட்பத்தாலும் மனசாலும் மீண்டும் மீண்டும் பிறந்து வ.ஜ.ச. ஜெயபாலன் காலத்தை வென்று கொண்டிருந்தார். என்னை கணினியில் எழுதவைத்ததில் சுஜாதாவுக்குத்தான் முதல் மரியாதை. அடுத்த மரியாதைகள் அவுஸ்திரேலிய பாலப்பிள்ளைக்கும் சிங்கப்பூர் முத்துநெடுமாறனுக்குமே சேரும். என்னைப்போலவே வேறு பல எழுத்தாளர்களும் கவிஞர்களும்

சுஜாதா அஞ்சலி கட்டுரைகள் - குமுதம் தீராநதி(பகுதி ஒன்று)

குமுதம் தீராநதி இதழில் வந்த சுஜாதா அஞ்சலி கட்டுரைகள் பகுதி 1 - பா.வண்ணன், அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி. பா.வண்ணன் சுஜாதா என்கிற பெயரை நான் முதன்முதலாக பத்தாம் வகுப்பு முடித்த விடுமுறையில்தான் அறிந்துகொண்டேன். முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு என்பதெல்லாம் கணக்குப்போட்டுப் பார்த்தால்தான் தெரிகிறது. ஆனால் எல்லாமே நேற்று நடந்ததுபோல இருக்கிறது. அப்போது எங்கள் அப்பாவுடைய தையற்கடையில் உதவியாளராக மாதவன் அண்ணன் என்பவர் இருந்தார். என்னுடைய புத்தகம் படிக்கும் பழக்கத்தைத் தெரிந்துகொண்டு தன்னுடைய வீட்டில் தன் அண்ணனுக்கும் அப்படிப்பட்ட பழக்கம் உண்டு என்று சொன்னார். ஏராளமான அளவில் புத்தகங்கள் அவரிடம் இருப்பதாகவும் உற்சாகமாகச் சொன்னார். உடனே அந்தப் புத்தகங்களைப் பார்க்கவேண்டும் என்கிற ஆவல் எனக்குள் பீரிட்டெழுந்ததால், “படிப்பதற்கு எனக்குத் தருவாரா?’’ என்று கேட்டேன். அவருடைய அண்ணன் கடலூரில் தங்கி ஏதோ ஒரு அலுவலகத்தில் சுருக்கெழுத்தாளராக வேலை பார்த்துவருகிறார் என்றும், வாரவிடுமுறையான ஞாயிறு அன்றுதான் வீட்டுக்கு வருவார் என்றும் மாதவன் அண்ணன் சொன்னார். அதனால் ஞாயிறு வரை நான் காத்திருந்தேன். அவர்கள

ஊஞ்சலை தேடினோம்

எழுத்தாளர் சுஜாதவின் விஞ்ஞானக் கதைகளில் கால இயந்திரத்தில் உட்கார்ந்து கொண்டு பின்னோக்கி பயணிப்பது மாதிரி கற்பனைகள் வரும். அந்த மாதிரி நாம் 25 வருடங்கள் பின்னோக்கிப் போக வாய்ப்புக் கிடைத்தால், அதே சுஜாதா பூர்ணம் விஸ்வநாதனோடு கை கோர்த்துக் கொண்டு வழங்கிய மேடை நாடகங்கள் நம்மை பிரமிக்க வைக்கும்.   டாக்டர் நரேந்திரனின் விநோத வழக்கு, கடவுள் வந்திருந்தார், அடிமைகள், ஊஞ்சல், அன்புள்ள அப்பா என்று பூர்ணம் நியூ தியேட்டர்ஸ் மேடையேற்றிய நாடகங்கள் ஒரு எழுச்சியை உண்டாக்கின. அவைகளில் விஞ்சி நிற்பது சுஜாதாவின் எழுத்தாற்றலா, பூர்ணத்தின் நடிப்பாற்றலா என்று பட்டி மன்றமே நிகழ்த்தலாம். தன் நீண்ட கால நாடக அனுபவங்களில் சிலவற்றை நம்மோடு பகிர்ந்து கொண்டார் பூர்ணம். அதெப்படி சுஜாதா உங்களுக்கு எழுதிய நாடகங்கள் உங்களுக்காகவே எழுதப்பட்டது மாதிரி இருக்கிறது என்று கேட்டோம். "சுஜாதா பூர்ணம் நியூ தியேட்டர்ஸுக்காக நாடகம் எழுத யோசிக்கும் போதே என்னை மனதில் வைத்துக் கொண்டு எழுதியிருக்கலாம். அவருக்கும் அவர் அப்பாவுக்கும் உள்ள அன்யோன்யம் என் மூலமாக வெளிப்படுவதாகவே நான் நினைக்கிறேன். தவிர, அவரோடு கலந்து பேசி சில மாற்றங

இலக்கிய சிந்தனை சார்பில் சுஜாதா இரங்கல் கூட்டம்

அன்பு மிக்க தேசிகன். வணக்கம். இன்று (22.3.08 - சனிக்கிழமை)சுஜாதா இரங்கல் கூட்டம் இலக்கிய சிந்தனையின் சார்பில் சென்னையில் நடந்தது. இ.பா தலைமை. திருமதி சுஜாதவும் இரு மகன்களும் வந்திருந்தனர். கஸ்தூரி ரங்கன், க்ரேஸி மோகன், திருப்பூர் க்ருஷ்ணன், அலிடாலியா ராஜாமணி, பூர்ணம் குழு ரமேஷ், பாமா கோபாலன், மொழி பெயர்பாளர் சவுரி ராஜன், வைத்தீஸ்வரன், ரவி சுப்ரமணியம், செங்கை ஆழியான், நான் எல்லோரும் பேசினோம்.   கஸ்தூரி ரங்கன் டெல்லியில் வாரா வாரம் அவரை சந்தித்தது பற்றி சொன்னார். அவர் சொன்ன ஒரு வாக்கியம் கண்ணில் நீர் வரவழைத்தது. “சுஜாதாவை விட நான் மூன்று வருஷம் பெரியவன். என் இரங்கல் கூட்டத்தில் அவர் பேசுவார்னு நினைச்சேன். இப்பிடி ஆயிடிச்சு.” என்றார். மொழி பெயர்ப்பாளர் சவுரி ராஜன் டெல்லியில் ஹிந்தி தினசரிகளில் கூட அவர் இறந்ததை வெளியிட்டார்கள் என்றார். இலங்கையை சேர்ந்த செங்கை ஆழியான் இலங்கையின் பெரும்பலான எழுதாளர்கள் அவருடைய பாதிப்புடன் எழுதுவதாக சொன்னார். தானும் அப்படியே என்றார்! இலங்கையில் எல்லா பத்திரிகைகளும் குறைந்தது ஒன்று அல்லது அரை பக்கமாவது அவர் மரணத்துக்கு வருந்தின என்றார். அலிடாலியா ராஜாமணி சொன

சுஜாதா - நினைவுகள்! - என்.சி.மோகன்தாஸ்

இந்த வாரம் தினமலர் வாரமலரில் வந்த கட்டுரை கேரளா  பரலூர் எனும் பகுதியில் 1982ல் முதன் முதலாக எலக்ட்ரானிக் ஓட்டு எந்திரத்தை செயல்படுத்த சுஜாதா வந்திருந்தபோது தான் அவருடன் எனக்கு முதல் சந்திப்பு. அப்போது கொச்சியில் பணிபுரிந்துக் கொண்டிருந்தேன். எழுத்தில் சக்கை போடு, போடும் நபரா இவர் என, முதல் நோட்டத்திலேயே சுஜாதா மீது ஏமாற்றம்! அவரது நடவடிக்கைகளை, "சாவி' பத்திரிகைக்கு எழுதலாமா எனக் கேட்டேன். "ஓ... தாராளமாய்!' என்றார். எழுத்தின் ஆரம்ப கட்டத்திலிருந்த எனக்கு, அவரை பற்றி எழுதி, பரபரப்பாய் நான் பேசப் பட வேண்டும் என்ற வேகம்; எனக்குள் பரபரப்பு. "இது அரசாங்கத்து சமாஜாரம். தப்பாய் எதுவும் வந்து விடப்படாது. எழுதி என்னிடம் காட்டிட்டு அனுப்பு!' என்றார். அதன்படியே எழுதிக் காட்டினேன். "ப்...ச்... போன்ற ஒற்றுக்களுக்கும், உங்களுக்கும் தகராறு போலிருக்கு!' என்று, கூறி விட்டு, சாப்பாட்டில் ஐக்கியமானார்.அன்றே அவசர தபாலில் சென்னைக்கு அனுப்பினேன். இரண்டு நாளில், சாவி அலுவலகத்திலிருந்து போன்... "கட்டுரை நன்றாக இருக்கிறது... பிரமாதமாய் பிரசுரமாகப் போகிறது!' என்று

கற்றதும் பெற்றதும்

ஏதோ தேடும் போது, சுஜாதா எழுதிய கடைசி கற்றதும் பெற்றதும் கண்ணில் பட்டது. சில பகுதிகள் உங்கள் பார்வைக்கு. விகடனில் கற்றதும் பெற்றதும் முடிக்கும் போது, தற்காலிக முற்றும் மீண்டும் சந்திக்கலாம் என்று சொல்லுவார். இந்த முறை திடீர் என்று 'முற்றும்' போட்டார்.  ஏன் என்று பிறகு ஒரு சமயம் சொல்லுகிறேன். இப்போது படிக்க கடைசி பகுதி.. கம்ப்யூட்டரே, பதில் சொல்லு! வயசாவதன் தவிர்க்க முடியாத அடையாளங்களில் ஒன்று, சமீபத்திய ஞாபகங்கள் கண்ணாமூச்சி காட்டுவது. நினைவு இருப்பது போலிருக்கும்; வார்த்தை சிக்காது. இரண்டு நாட்களுக்கு முன், முகம்மது கைஃப் என்ற பெயர் சட்டென்று மறந்து போய், அதி-காலையில் ஒரு மணி நேரம் விழித்திருந்து யோசித்தேன். இந்த உபாதைக்கு நியூரான்களைப் புதுப்பிக்க மருந்து மாத்திரைகள் இருக்கிறதா? டாக்டர் ராமச்சந்திரன் போன்றவர்கள் சொல்லலாம். ஆனால், நான் கடைப்பிடிப்பது ஒரு நிச்சயமான மார்க்கம்... இன்டர்நெட்! ஞாபகம் வரவில்லை என்றால், அப்படியே விட்டு விட்டுக் காலை எழுந்ததும், கம்ப்யூட்டரைத் திறந்து google அலலது yahoo answers-ல் கேள்வி கேட்டால், கிடைத்துவிடும். இப்படித்தான் சாமர்செட் மாம் எழுதிய நா

தமிழ் மாயக் கட்டம்

விக்கிரமாதித்தன் 'சிம்ரன் சின்னத் திரையை' பார்த்து அழுதுகொண்டு இருந்தான். "சீரியல் பார்க்காதேன்னு எவ்வளவு முறை சொல்றது?" என்று எட்டிப்பார்த்தது வேதாளம் "சீரியல் பார்த்தாலும் வாத்தியார் நினைவு வருது என்ன செய்ய" வேதாளம் பச்சையாக ஏதோ காண்பித்தது. அதை விக்கிரமாதித்தன் பார்த்த போது,  இப்படி தெரிந்தது. 5 22 18 28 15 2 12 8 25     "இந்த மாதிரி பழைய விஷயத்தை எல்லாம் தூசு தட்டாதே, தும்மல் வருது" என்று விக்கிரமாதித்தன் சலித்துக்கொண்டான்.  வேதாளம் விடுவதாக இல்லை இது மாயக் கட்டம் இல்லை, மாயாஜால கட்டம் "மேல  உள்ள மாய கட்டங்களில் உள்ள எண்களின் ஆங்கில வார்த்தைகள் கொண்டு இந்த மாயா சதுரம் இங்கே இருக்கு பாரு" விக்கிரமாதித்தன் பார்த்தான் five (4) twenty-two (9) eighteen ( 8 ) twenty-eight (11) fift

சுஜாதா பற்றி குங்குமத்தில் வந்தவை

ஓவியர் ஜெயராஜ் http://www.desikan.com/blogcms/wiki/media/sujatha/kungumam_14_13_3_2008.jpg http://www.desikan.com/blogcms/wiki/media/sujatha/kungumam_15_13_3_2008.jpg தி.முருகன் குங்குமம் முதன்மை ஆசிரியர் http://www.desikan.com/blogcms/wiki/media/sujatha/kungumam_18_13_3_2008.jpg http://www.desikan.com/blogcms/wiki/media/sujatha/kungumam_19_13_3_2008.jpg சுஜாதா கேள்வி பதில்கள் http://www.desikan.com/blogcms/wiki/media/sujatha/kungumam_20_13_3_2008.jpg http://www.desikan.com/blogcms/wiki/media/sujatha/kungumam_22_13_3_2008.jpg http://www.desikan.com/blogcms/wiki/media/sujatha/kungumam_23_13_3_2008.jpg http://www.desikan.com/blogcms/wiki/media/sujatha/kungumam_24_13_3_2008.jpg விவேக் http://www.desikan.com/blogcms/wiki/media/sujatha/kungumam_27_13_3_2008.jpg http://www.desikan.com/blogcms/wiki/media/sujatha/kungumam_28_13_3_2008.jpg மனுஷ்ய புத்திரன் http://www.desikan.com/blogcms/wiki/media/sujatha/kungumam_30_13_3_2008.jpg http://www.desikan.com/blogcms/wiki/media/sujatha/kungumam

வாடாத நினைவுகள் - லேனா தமிழ்வாணன்

லேனாவின் பார்வையில் என்ற இந்தப் பகுதியில் சமூக அக்கறைகளை மட்டுமே இதுவரை எழுதி வந்திருக்கிறேன். ஆனால் முதல் முறையாக இப்பகுதியில் எழுத்தாளர் சுஜாதாவிற்கு அஞ்சலி செலுத்த எண்ணுகிறேன். தமிழ் எழுத்துலகில் நவீன வடிவங்களைப் பயன்படுத்தியவர்களுள் சுஜாதாவின் பங்கு மிக உருப்படியானது. 60 வயது ஆனதும் சாய்வு நாற்காலியைக் கேட்காமல், மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ளும் முன்பு வரை எழுத்து எழுத்து என்று 73 வயதிலும் எழுத்தை அப்படி நேசித்தார். வாசகர்கள் எதிர்பார்ப்பு மற்றும் பிரச்னைகளைக் கருத்தில் கொண்டே அவரது படைப்புகள் அமைந்தன. தம் திருப்திக்கு எதையாவது எழுதுவேன்; படித்துத் தொலைப்பது உங்கள் தலையெழுத்து என்கிறபோக்கு சுஜாதாவிடம் இருந்ததே இல்லை. 1970களில் இளைஞர்களாக இருந்தவர்களை ஈர்க்க ஆரம்பித்தார். அவர்களைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டார். காலத்திற்கு ஒவ்வாத எழுத்து என்றோ, இவர் அந்தக் காலத்து ஆசாமி என்றோ இவரது எழுத்துக்கள் பெயர் வாங்கியதே இல்லை. நவீனங்களுக்கு ஏற்ப, அண்மைத் தலைமுறைக்கு ஏற்பத் தன் எழுத்தை நவீனப்படுத்திக் கொள்ளும் ஆற்றல் சுஜாதாவுக்கு இருந்தது. அறிவியல் சார்ந்த எழுத்து என்று எடு