Skip to main content

Posts

Showing posts from March, 2007

குட்டீஸ் புதிர்

வேதாளம் அவசரமாக வந்து ஒரு படத்தை விக்கிரமாதித்தனுக்கு தந்தது. "இது என்ன படம் ?" "இதுவா ? இது ஒரு விதமான புதிர்" "குழந்தைத்தனமா இருக்கு?" "ஆமாம். இது குழந்தைகளுக்கான புதிர் தான். இதில் நிறைய மிருகங்கள் பெயர் இருக்கிறது. அதை கண்டுபிடி பார்க்கலாம்" "விக்கிரமாதித்தன் ஒரு பென்சிலை எடுத்துக்கொண்டு தேட ஆரம்பித்தான்" "இரு, செஸ் போர்டில் ராஜா எப்படி நகரும்?" "ஒவ்வொரு கட்டமாக" "அதே போல நகர்ந்து பெயர்களை கண்டுபிடிக்க வேண்டும். உதாரணத்துக்கு 75, 65, 56 கட்டங்களை கடந்தால் வரும் மிருகத்தின் பெயர் - 'DOG'. அதேபோல்  33, 43, 35, 45, 54, 63, 62, 70 & 71 கடந்தால் 'PORCUIPINE' வரும். சரி மத்த மிருகங்களின் பெயர்களை கண்டுபிடி" என்று வேதாளம் அவசரமாக எங்கோ போனது. [%popup(20070316-animalpuzzle.jpg|446|289|குட்டீஸ் புதிர்)%] விக்கிரமாதித்தன் யோசிக்க ஆரம்பித்தான். நீங்களும் விக்கிரமாதித்தனுக்கு உதவலாம்...   

Old is Gold

'Old is Gold' என்பார்கள், மத்த விஷயங்களில் எப்படியோ ஆனால் புத்தக விஷயத்தில் அது நிஜம். திரு. ராகவன் ( சென்னை ) அவர்கள், என் பதிவுகளை விரும்பி படிப்பவர். இன்று வரை நான் நேரில் சந்தித்தது கிடையாது. "சார், உங்களுக்கு ஒரு பழைய புத்தகம் ஒன்று அன்பளிப்பாக அனுப்பப்போகிறேன், அனுப்பவா ? " என்றார். "தாராளமாக" போன மாதம் ஒரு நாள் அவர் மனைவி புஷ்பா ராகவன் ( பொடிடப்பா நினைவிருக்கா ?) பெங்களூர் வந்த போது, அந்த புத்தகத்தை பெற்றுக்கொண்டேன். புத்தகம் பெயர்: நாலாயிர திவ்யப்ரபந்தம் அன்புள்ள தேசிகனுக்கு , சகல ஐஸ்வர்யங்களும் பெற்று வளமுடன் வாழ திருமலையப்பன் அருள்புரியட்டும் அன்புடன்... என்று கையெழுத்து போட்ட அந்த புத்தகத்திலிருந்து சில குறிப்புக்கள் 31.5.1943 பழனியில் ரூ 1.4.0கு வாங்கியது என்று திரு ராகவனின் அப்பா கையெழுத்து. சாது அச்சுக்கூடம், இராயப்பேட்டை சென்னை தனிப்பிரதி விலை ரூ1.12.0, மூன்று பிரதிகள் ரூ 5 ஆழ்வார்கள் வைபவத்தில் ஆரம்பித்து, நாலாயிர திவ்யப்ரபந்தம், இயல்சாத்து, சாத்துமறை, திவ்வியதேசப் பிரபாவம், நூற்றெட்டு திருப்பதிகள் எண், திவ்வியபிரபந்தத்தில் கூறப்படும் பெயர்,