Skip to main content

Posts

Showing posts from May, 2006

மீண்டும் மூளைக்கு வேலை

போன வருடம் டிசம்பர் மாதம் " மூளைக்கு கொஞ்சம் (ஓவராக) வேலை " என்ற பதிவுவை பார்த்திருப்பீர்கள். இன்னுமும் எனக்கு 'நான் இந்த Levelல்' இருக்கிறேன் எனக்கு உதவுங்கள்  என்று  ஈமெயிலில் என்னன சிலர் கேட்பதுண்டு. இந்த புதிர் இணையத்தில் நிஜமாகவே ஒரு பெரும் வெற்றி அடைந்தது. இதை தயாரித்த IIM Indore மாணவர்கள் இதற்கு தனியாக http://www.playklueless.com என்ற வலைத்தளத்தை ஆரம்பித்திருக்கிறார்கள் . அதில் Hall of Fame என்ற தொடுப்பில் வரிசை எண் 455ல் ஒரு விஐபி பேர் இருக்கிறது :-)

சித்திர நாலாயிரம்

நேற்று ஸ்ரீரங்கம் பெருமாளை ஓசி பாஸ் மூலம் தரிசித்து விட்டு வரும் வழியில் வடக்கு சித்திர வீதியில் திரு S.R.ஸ்ரீநிவாசன் அவர்களின் ஓவிய கண்காட்சிக்கு சென்றது ஒர் இனிய அனுபவம். [%image(20060529-srinivasan.jpg|200|267|S.R.Srinivasan)%] நான் போன சமயம், சிலர் கையில் ஒரு பூதக்கண்ணாடி வைத்துக்கொண்டு ஓவியத்தைப் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தனர். மிக எளிமையாக ஒரு மேல்துண்டுடன் வந்தவர்களுக்கு எல்லாம் தான் வரைந்தவற்றை விளக்கிக்கொண்டிருந்தார். சித்திர கவி பற்றி நாம் கேள்விப்பட்டதுண்டு, அதாவது கவிதையை சித்திர வடிவில் எழுதுவது. ஆனால் திரு ஸ்ரீநிவாசன், கவிதையால் சித்திரத்தை வரைந்துள்ளார். ஆம், கோடு, புள்ளி எதுவும் இல்லாமல், நாலாயிர திவ்வியப்பிரபந்ததைக் கொண்டு 108 திவ்விய தேச பெருமாளை அந்தந்த நிலைகளிலேயே வரைந்துள்ளார். [%image(20060529-srinivasan_and_others.jpg|200|150|Srinivasan + crowd)%] உதாரணத்திற்கு ஸ்ரீரங்கம் பெருமாளை 11 ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த 247 பாட்டுக்களால் வரைந்துள்ளார். அதுவும் எப்படி, திருப்பாணாழ்வார் பாடிய 'அமலனாதிப்பிரான்' என்ற பாட்டில் வரும் திருவரங்கனின் அழகை அவர் அங்க

writersujatha.com

சற்று முன் எனக்கு திரு.சுஜாதாவிடமிருந்து வந்த மின்னஞ்சல். Dear Desikan, My website is up and running. the first book is fifty short stories Till now about fifty books have been inputted and are being progressively uploaded Please announce it in your blog Eventually all my books are going to be available thru Paypal on a nominal payment per book.  It may not be fair to give free access to my stories anymore as others will be paying. Hence I suggest you delink my stories from your website.  We will discuss this when you are in Chennai next regards Sujatha As per the request, I have removed the short stories from my site. :-(

சில்வியா - நேர்காணல் சுஜாதா

ஆனந்த விகடனில் சுஜாதா ஆரம்பித்திற்கும் தொடர். போன முறை பேசிய போது 8-9 வாரம் போகும் என்றார். இதை பற்றி தீபக் எழுதியுள்ளார் . ஆரம்பம் என்னும்  கொஞ்சம்  வேகமாக  இருந்திருக்கலாம்  ( "அப்படீன்னா?" என்றார் வசந்த். "அப்படியா?" என்றார் கணேஷ். மற்றும் ரசிக்கும் படி இருந்தது ).   அடுத்ததாக நிலாச்சாரலில் சுஜாதா அவர்களின் நேர்காணல். கிட்டத்தட்ட ஒரு டஜன் கேள்விகள். கேள்விகளை விட பதில் சின்னது. பதில் எழுதும் போது, பக்கத்து விட்டு அழும் குழந்தை, மேல் மாடி ஸ்டிரியோ அவரை டிஸ்டர்ப் செய்ததா என்று கேட்க வேண்டும். நேர்கணலுக்கு எடுத்து செல்லும் லிங்க் இங்கே

எழுபத்தொன்று - சுஜாதா

[%image(20060504-sujatha_hindu_pic.jpg|351|263|Sujatha)%] அதிகாலையிலிருந்து போன்கால்கள், பொக்கேக்கள், பரிசுகள், ஏதோ நேற்றுப் பிறந்தவன்போல என்னை உணரவைக்கும்  இந்தப் புதிய சங்கதிகளை என்னை விட என் எழுத்துக்கு நண்பர்கள் தரும் மரியாதையாக எண்ணி அதில் மமதை கொள்ளாமல் இருக்க முயற்சிக்கிறேன். பேரெழில் குமரன் ஒரு மிகப் பெரிய வாழ்த்து அட்டையில் என் போட்டோக்களை அமைத்து  லாமினேட் பண்ணி அனுப்பியிருந்தார். குறைந்தபட்சம் அதைத் தயாரிக்க இரண்டு நாளாகியிருக்கும். அவர் என் பரம ரசிகர். மகனுக்கு வசந்த் என்று பெயர் வைத்திருப்பதாகச் சொன்னார். எழுபத்தோரு வயதைக் கடந்த இந்த தினத்தில் பி.ஜி.உட்ஹவுசின் over Seventy என்கிற புத்தகம் நினைவுக்கு வருகிறது. அவர் எழுபது வயதைக் கடந்ததும் இந்தப் புத்தகத்தை எழுதினார். தன்னைச் சுற்றிலும் நிகழ்ந்த மாற்றங்களை அவருடைய தனிப்பட்ட நகைச்சுவை உணர்வுடன் எழுதினார். 'என்னப்பா! உனக்கு எழுபது வயதாகிறதாமே! பார்த்தால் 105 வயசான மாதிரி தெரிகிறாய். ஏன் இதைப் பற்றி எழுதி இன்னும் காசு பண்ணவில்லை?' என்று துவங்கி சில அருமையான கட்டுரைகள் எழுதியுள்ளார். ''அமெரிக்காவில் இப்போதெல்லா