Monday, June 20, 2005

பத்தாம் நூற்றாண்டுத் தமிழ்... இருபத்தோராம் நூற்றாண்டு இசை!

Image hosted by Photobucket.comசென்னை, கத்தோலிக்க திருச்சபையின் தமிழ் மையத்தின் நவீன சவுண்ட் ஸ்டுடியோவில், சுற்றிலும் இதமான ஒலிப்பின்னல்கள் சூழ, இசைஞானி இளையராஜாவின் திருவாசகம் ஆரட்டோரியோ பகுதியைக் கேட்டு மகிழ்ந்தேன். உடனே, அவருக்கு போன் செய்து பாராட்டினேன். ''வீட்டுக்கு வாங்க, சாவகாசமா பேசலாம்!'' என்றார். சென்றேன்.


முதலில், திருவாசகம் சிம்பொனி அனுபவம். இதை சிம்பொனி என்று அழைப்பது சரியில்லை என்கிறார். ஆரட்டோரியோஎன்கிற வகையில் தான் சேரும். ஆரட்டோரியோ என்பது musical work for orchestra and voices on a sacred theme. வாத்தியங்களுக்கும் குரல்களுக்கும் ஆக்கப் பட்ட புனிதமான கருத் துள்ள இசைப் படைப்பு.


''சிம்பொனி என்பது குறைந்தபட்சம் நான்கு அசைவுகள் கொண்ட விஸ்தாரமான இசைக்கோலம். சிம்பொனி ஆர்கெஸ்ட்ராவுடன் வாசித்ததால் மட்டும் இதை சிம்பொனி என்று சொல்ல முடியாது. கூடாது'' என்றார். இருந்தும், சிம்பொனி என்ற பதம் நிலைத்துவிட்டது. தென்னாடுடைய சிவன் என்னாட்டுக்கும் இறைவன் விதித்தது அது.


மாணிக்கவாசகரின் தமிழ் இளையராஜாவின் பரிவு மிக்க குரலில், முதலில் ஒலிக்கிறது.


'பூவார் சென்னி மன்னன் என்
புயங்கப் பெருமான் சிறியோமை


ஓவாது உள்ளம் கலந்து
உணர்வாய் உருக்கும்
வெள்ளக்கருணையினால்...'


இவ்வாறு துவங்குகிறார். (புயங்கம் என்றால், பாம்பு அல்லது ஒருவகைக் கூத்து) உடன், ஹங்கேரி புடாபெஸ்ட்டின் பாரம்பரியமிக்க பில்ஹார்மானிக் குழுவின் (நெறியாளர் & லாஸலோ கோவாக்ஸ்) நூற்றுக்கணக்கான வயலின்களும், மேற்கத்திய வாத்தியங்களும் கம்பீரமாகச் சேர்ந்துகொள்ள, ஸ்டீஃபன் ஷ்வார்டஸ் (அகாடமி அவார்ட் வாங்கியவர்) அளவாக,


I’m just a man
Imperfect lowly
How can I reach for
Somthing holy


என்று ஆங்கில வரிகளாக மொழி பெயர்க்க, ஓர் அமெரிக்கர் அதைப் பாட, நியூயார்க்கில் பதிவு செய்த குரல்களும் சென்னைக் குரல்களுடன் சேர்ந்துகொள்ள, ஒரு பரவச நிலையில் பத்தாம் நூற்றாண்டுத் தமிழும் இருபத்தோராம் நூற்றாண்டு இசையின் இதமும் உலகளவு விரிய, மெய் சிலிர்க்கிறது. சொர்க்கத்துக்கு அடியவரோடு எழும் தருணத்தில், மாணிக்கவாசகர் இயற்றிய யாத்திரைப் பத்திலிருந்து எடுத்த இந்தத் துவக்கம் ஈசன் செயலாக நிகழ்ந்தது என்கிறார் இளையராஜா. இதன்பின், முதல் பதிகமான சிவபுராணத்தின் சம்பிரதாயமான ‘நமசிவாய வாழ்க’வில் ஆரம்பிக்காமல்,


'பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்றறியேன்
புல்லாகிப் பூடாய் புழுவாய் மரமாகி
பல்விருகமாகி பறவையாய் பாம்பாகி
கல்லாய் மனிதராய் பேயாய் கணங்களாகி
வல்லசுரராகி முனிவராய் தேவராய்
செல்லா நின்ற இத்தாவர சங்கமத்துள்...'


என்று பரிணாம தத்துவத்தை, ஏறக்குறைய டார்வினுக்கருகில் கொண்டு வந்துவிட்ட வரிகளை எடுத்துக்கொள்கிறார். (So many forms I must wear. So many lives I must bear.)‘புற்றில் வாழ அரவும் அஞ்சேன்
பொய்யர்தம் மெய்யும் அஞ்சேன்
கற்றிலாதவரைக் கண்டால் அம்ம நான்
அஞ்சுமாறே’


என்று அச்சப்பதிகத்திலிருந்தும், அதன்பின் அச்சோப்பத்து திருக்கோத்தும்பி என்று திருவாசகத்தின் முக்கியமான வரிகளை எடுத்துக் கொண்டு இசையமைத்து, முழு நூலையும் ரசித்த அனுபவத்தை இருபது நிமிஷத்தில் ஏற்படுத்துகிறார். அவ்வப்போது ஆரட்டோரியோ ஸ்டைலுக்கு ஏற்ப, லேசான ஆங்கில வரிகள் மொழிபெயர்ப்பில் உறுத்தாமல் அமெரிக்கர் பாடும்போது நிகழும் அனுபவத்தில், சங்கீதம் கால தேசம் மொழி எல்லாம் கடந்தது என்பது நிரூபணமாகிறது.


இசைஞானி திருவாசகத்துக்கு நிஜமாகவே உருகியுள்ளார். மேற்கத்திய ஒத்திசைவையும் (ஹார்மனி) கிழக்கத்திய மெட்டையும் (மெலடி) சமனப்படுத்தும்போது, எந்த இடத்திலும் அவர் நம் ஆதார ராக அமைப்பைத் துறக்காமல், அவர்கள் பாணிக்காக சமரசம் செய் யாமல், நம் ராகங்களிலேயே மேற்கத்திய சிம்பொனி அமைப்பைக் கச்சிதமாகப் பொருத்தியிருக்கிறார். விளைவு, ஒரு மிகப் புதிய சங்கீதானுபவம்!


வருகிற ஜூன் 30&ம் தேதி, சென்னை மியூஸிக் அகாடமியில், இதன் கேசெட்டும் சி.டி\யும் வெளியிடப் போகிறார்கள். எல்லோரும் உற்சாகத்துடன், தமிழ் தெரிந்தவர்கள் கூடுதல் உற்சாகத்துடன் இதை வாங்கிக் கேட்கலாம். சினிமா இசையையும், ஒரே மாதிரியான குத்துப் பாடல்களையுமே கேட்டலுத்த செவிகளுக்கு மிகவும் மாறுபட்ட ஓர் அனுபவம் காத்திருக்கிறது.


''அதை நான் குறை சொல்ல மாட்டேன். நினைத்தால் என்னால் பாப் இசையை ஒரு கைசொடக்கில் கொண்டுவர முடியும். அந்தச் சங்கீதம் ரசனைக்கு ஏற்ப இறங்கி வருவது. இந்தச் சங்கீதம் படியேற்றம். புடாபெஸ்ட்டில், அவர்கள் நான் எழுதியதை ஒத்திகையாக முதலில் வாசித்தபோது, தமக்குள் சிரித்துக் கொண்டார்கள். நான் நிறுத்திவிட்டு, மொழிபெயர்ப்பாளரைக் கூப்பிட்டு, அவர்களிடம் பேசினேன். ‘நீங்கள் பின்னணி வாசிக்கப்போகும் இந்தப் பாடல், பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு தலைசிறந்த மன்னன் கவிஞனுடையது. இறைவனிடம், பிறந்தலுத்த ஓர் ஆத்மாவின் வானுலக இச்சைகளையும் தெரிவிக்கும் உன்னதமான பாடல்கள்’ என்றேன்.


மறுபடி பாடிக் காட்டினேன். அவர்கள் இப்போது கண்கள் விரிந்து, பாடலின் ஆத்மாவைப் பிடித்து, சிறப்பாக வாசிக்கத் துவங்கினார்கள். சவுண்ட் இன்ஜினீயர் ரிச்சர்ட் கிங், ‘இம்மாதிரி எல்லா அமைப்பாளர்களும் பாடிக் காட்டினால், சிறப்பு கூடும்' என்றார்.


முதல் மூன்று நிமிஷத்துக்கான இசைக்கு ஸ்கோர் எழுபது பக்கம் எழுதியிருந்தேன். ஒரே நாளில் 26 பக்கம் எழுதியதைப் பார்த்து, கின்னஸ் சாதனையாக வியந்தார்கள்’’ என்றார் இளையராஜா.


''இதற்கெல்லாம் காரணம் யார்?'' என்றேன்.


''ஈசன்தான். இளையராஜா ஒரு கருவிதான். கத்தோலிக்க நண்பர்கள் மையத்தையும், பாஷை தெரியாத பில்ஹார்மானிக் குழுவையும், நியூயார்க் குரல்களையும், மாணிக்கவாசகர் என்னும்மேதையையும் ஒருங்கிணைத்தது ஈசன்தான். கடவுள் இருக்கிறார் என்பதற்கு இந்த நிகழ்வே அத்தாட்சி!’’ என்றார். மற்றொரு ஜீனியஸைச் சொல்லாமல் விட்டு விட்டார்.


ராஜாவின் திருவாசகத்தை ரசிக்க, நான் சிபாரிசு செய்யும் வழிகள் இவை.


1. சி.டி.யோ, டேப்போ... முதலில் காசு கொடுத்து வாங்குங்கள்.


2. இன்டர்நெட்டில் அனுப்பாதீர்கள். பிரதி எடுக்காதீர்கள். ஒரு அபாரமான கலைஞனுக்கு செய்யக்கூடிய குறைந்தபட்ச மரியாதை இது. மேலும், எம்.பி.3&யில் கேட்காதீர்கள். அதில் நிகழும் கம்ப்ரெஷன் இதன் உண்மையான செவிக்கினிமையைக் குறைத்துவிடும்.


3. போஸ் போன்ற ஒரு நல்ல சிஸ்டத்தில், சர்ரவுண்ட் சவுண்டில் கேளுங்கள். காரிலோ, செல்போன் பேசிக்கொண்டோ கேட்காதீர்கள். மற்ற பேரை தொந்தரவு செய்யாமலிருக்க விரும்பினால், ஆப்பிள் ஐபோடு சார்ந்த சில அபாரமான ஹெட்போன்களிலும் கேட்கலாம். 4. தனிமையில், இரவில் அல்லது அதிகாலையில் கேளுங்கள். இரண்டு நாள் விட்டு மறுபடி கேளுங்கள். நான், மையத்தில் தனியாக இருளில் உட்கார்ந்துகொண்டு, சவுண்ட் ப்ரூஃப் ஸ்டுடியோவின் நிசப்தத்தில் கேட்டேன்.


5. ரொம்ப அலறவிடாதீர்கள். சிம்பொனியில் உள்ள ஏற்ற இறக்கங்களை மழுப்பிவிடும்.


6. கொஞ்சம் சங்கீதம் தெரிந்தால் நல்லது. ராகம் தெரிய வேண்டும் என்பது அவசியமில்லை. அந்தந்த ராகங்கள் தரும் மூடை (Mood) இயல்பாக உங்கள் உள்ளத்தில் அனுமதியுங்கள்.


7. கேட்டு முடித்ததும் பாராட்டி, இசைஞானிக்கு ஒரு மெயில் அனுப்புங்கள். ijaja2005@yahoo.co.in


8. உங்கள் நண்பர் களை வாங்கச் சொல்லுங்கள். இம்மாதிரியான முயற்சிகளுக்கு ஆதரவு தந்தால்தான், இந்தப் புதிய சங்கீதம் மேன்மேலும் நம் இலக்கியங்களுக்கும் உலகுக்கும் இசைப்பாலம் அமைக்கும்.


ராஜா அடுத்துச் செய்ய விரும்பும் காரியங்கள் என்னென்ன என்பதைப் பற்றிக் கொஞ்சம் பேசினோம். திவ்ய பிரபந்தத்தையும் செய்ய விரும்புகிறார். அதுபோல், சிலப்பதிகாரத்தின் சில அபாரமான வரிகளை மியூஸிக் வடிவத்தில் சுலபமாகச் செய்யமுடியும் என்கிறார். ராமாயணம் அல்லது மகாபாரதத்திலிருந்து சில பகுதிகளை எடுத்துக்கொண்டு இசைமாலை சூட்டலாம் என்கிறார்.


தேவை நிதி. டி.வி.எஸ்., சன்மார் போன்ற நிறுவனங்களும், வங்கிகளும், விளம்பரத்துக்கு ஏராளமாகச் செலவழிக்கும் கம்பெனிகளும், தங்க, வைர வியாபாரி களும், புடவைக் கடைக்காரர்களும் இணைந்து நிதி ஒதுக்கினால் சாத்தியமாகும். என்னிடம்ஒரு கோடி ரூபாய் இல்லை. இருந்தால், உடனே செக் எழுதித் தந்திருப்பேன். அத்தகைய அனுபவத்தை அவர் ஏற்படுத்தினார். நன்றி ராஜா ஸார்!


நன்றி: ஆனந்த விகடன்Old Comments from my previous Blog


i saw the prices and it was:
casette : 95
cd : 210!!


i was really surpirsed since i assume that the production is local only. these prices are usual if it is an imported music casette or cd. i cannot understand the rationale behind this astronomical prices.


i am sure there is some explanation for this coz it is hard to digest if they want to mint money out of such a nice attempt.


By ????? ??????, at Mon Jun 20, 05:16:29 PM IST  


There is no price for the spiritual feeling it is going to give.


By Kalpana Sriram, at Tue Jun 21, 09:13:30 AM IST  


oru inimaiyaana isai vadivam, atharkku vilai mathippu illai aayinum, oru CD vilai 150 rupees only, oru nalla ulagatharam vaaintha isaiyai, nam paarambariya isaiyai 150 rupees koduthu vaangi ketpathil entha thavarume illai enbathu en karuthu, what you say desi?
anbudan
srishiv..


By srishiv, at Tue Jun 21, 12:52:34 PM IST  


Desikan -


A lot of ur recent articles are either book reviews or Sujatha's K...P... repeats. Kindly go on your own again. (No offense meant. Just that I'm thirsting to read articles like En Peyar Aandaal!


Raghavan


By Lucent Raghavan, at Sat Jun 25, 04:08:58 PM IST  


Desikan, unga coverage ellaame migha pramaadamaa irukku. I was talking about you to appa and he said you were planning to meet him when you come down to Chennai. I had a static link to your site before but have now blogrolled you.
We will be in touch.


By thennavan, at Sun Jun 26, 10:31:20 AM IST  


Thennavan,


Been slightly busy. Will meet your father when I go Chennai next.


Raghavan,


Yes you are right. To tell the truth kept my blog alive :-). Will post some of my own soon


By Desikan, at Sun Jun 26, 09:26:43 PM IST  


I bought this audio CD and listened& I am very disappointed -words are not clear;music is monotonous.Ilyaraja could have composed in pure carnatic or light classical ,instead of western classical.It is neither here nor there.Could have composed like his masterpiece "How to Name it?"The attempt is not justified.I am sorry to say this.


By Anonymous, at Fri Jul 15, 10:06:30 AM IST  


Desikan -


I liked the anonymous comment. Afterall the author should not have been anonymous. I am sure whomsoever listened to this Thirivaasakam symphony would be a tad disappointed. I spent hours in front of my home theatre and felt disappointed.


There is nothing spiritual in this album. On the other hand we get a repeat of tunes similar to Ilayaraja's 1980 hit songs. Perhaps this would have been justified had it been released 15 years ago.


Not that a genius like Raja can't do better: Listen to his "Maasarup penne varuga .. eesanin pange varuga" in Singaaravelan and "Vaaranamaayiram" in Keladi Kanmani. They gave a spiritual feeling!


Thiruvaasakam symphony is nothing but wind :(


Hope he leaves ramayanam and bhaaratham alone!


By Lucent Raghavan, at Fri Jul 15, 10:46:41 AM IST  


Hi Lucent Raghavan,
Let us hope yet another masterpiece from the great Ilayaraja on Ramayananm & Mahabaharatham which will bring the genius out of him.
Nanu -Anonymous!author of prevoius comments....


By Anonymous, at Thu Jul 21, 04:55:10 PM IST  


 

Friday, June 10, 2005

கலந்துரையாடல் பற்றி சுஜாதா..

இந்த வார கற்றதும் பெற்றதும்'ல் கலந்துரையாடல் பற்றி சுஜாதா...


நான் எழுதியது அனைத்தையும் ஒன்றுவிடாமல் படித்து என்னைவிடக் கூர்மையாக ஞாபகம் வைத்திருக்கும் வலுவான வாசகர்கள் ஒன்பது பேரைச் சந்திக்கும் வாய்ப்பை நண்பர் தேசிகன் ஏற்படுத்தியிருந்தார். உட்லண்ட்ஸ் டிரைவ் இன் ஓட்டலில் டம்ளர்கள் இரைச்சலினூடே சந்தித்தோம். எனக்கே ஞாபகமில்லாத பல கதைகளை இகாரஸ் பிரகாஷ் போன்றவர்கள் நினைவு வைத்துக்கொண்டு அதன் உள்ளர்த்தங்களை அலசும்போது லக்கலக்கலக்கலாகவும் பிரமிப்பாகவும் இருந்தது. இவ்வளவு அருகில் ஒரு எழுத்தாளன் இவ்வளவு விவரமான வாசக/வாசகியரைச் சந்திப்பது மற்ற பேருக்கு பன்னீராக இருக்கலாம். எனக்குக் கொஞ்சம் வெந்நீர்தான்!


கதையோ, கட்டுரையோ எழுதி முடித்து பிரசுரமான மறுகணம் எழுதியவனைவிட்டு பரதேசம் போய்விடுகிறது. அது ஊர் ஊராக அலைந்து கடைசியில் எழுதினவனிடம் திரும்பும்போது அடையாளம் மாறி சின்னச் சின்ன சிராய்ப்புகளுடன் வந்து சேருகிறது. நான் எழுபது, எண்பதுகளில் எழுதிய கதைகளான 'குருபிரசாத்தின் கடைசி தினம்' 'நகரம்', 'வீடு', 'முரண்' போன்ற கதைகள் என்னை விவாகரத்து செய்துவிட்டன. அவற்றைப் பிறர் அலசும்போது எப்போதோ பார்த்த ஒரு கார்ட்டூன்தான் ஞாபகம் வருகிறது.


ஒரு ஆபரேஷன் டேபிள், டாக்டர்கள் சுற்றிலும் நின்றுகொண்டு ஒருங்கிணைந்து தீவிரமாக ஆபரேஷன் பண்ணிக்கொண்டு இருக்கிறார்கள். ஓரத்தில் பேஷன்ட்டும் ஒரு கவுன் குல்லாயுடன் நின்று பின்னால் கை கட்டியபடி உன்னிப்பாக அந்த ஆபரேஷனைக் கவனித்துக்கொண்டு இருப்பார். அந்த நிலைதான் அன்று எனக்கு ஏற்பட்டது. எழுத்தாளனுக்கும் வாசகனுக்கும் குறைந்தபட்ச தூரமாவது தேவை என்பது தான் அன்றைய பாடம்.நன்றி: ஆனந்த விகடன்

 Old Comments from my previous Blog


தேசிகன்,


குறைந்த பட்ச தூரம் என எதைக் குறிப்புடிகிறார் என்பது புரியவில்லை.


இவருக்கு நம் மேல் கோபமா? இல்லை சந்தோசமா? எனத் தெரியாமல் நாயகன் குழந்தை போல குழம்பிக் கொண்டிருக்கிறேன்


அன்புடன்


ராஜ்குமார்


By rajkumar, at Fri Jun 10, 11:53:08 AM IST  


Yes Desikan,


I second rajkumar.


- Suresh Kannan


By சுரேஷ் கண்ணன், at Fri Jun 10, 11:57:23 AM IST  


Rajkumar,


I don't think so. He has written in the sense that he didn't expect that he would meet readers who have a complete idea about his ventures.


It's fact that if the readers are so interested, definitely the author would be tensed up to face them. That's why he mentioned "vennirai kaalil ootrikonda mathiri"


By Ramki, at Fri Jun 10, 12:09:14 PM IST  


Rajkumar, Suresh Kannan,
//ஒரு ஆபரேஷன் டேபிள், டாக்டர்கள் சுற்றிலும் நின்றுகொண்டு ஒருங்கிணைந்து தீவிரமாக ஆபரேஷன் பண்ணிக்கொண்டு இருக்கிறார்கள். ஓரத்தில் பேஷன்ட்டும் ஒரு கவுன் குல்லாயுடன் நின்று பின்னால் கை கட்டியபடி உன்னிப்பாக அந்த ஆபரேஷனைக் கவனித்துக்கொண்டு இருப்பார். அந்த நிலைதான் அன்று எனக்கு ஏற்பட்டது. எழுத்தாளனுக்கும் வாசகனுக்கும் குறைந்தபட்ச தூரமாவது தேவை என்பது தான் அன்றைய பாடம்.
//
I assume the OPERATION on that day was successful (considering Sujatha appreciated Prakash!) and hence take this as a COMPLIMENT on the bloggers who met Sujatha the other day :-)


But, you MUST understand operation (not postmortem!) is generally a painful experience ;-) and hence the "குறைந்தபட்ச தூரமாவது தேவை", I guess !!!!


//இவ்வளவு அருகில் ஒரு எழுத்தாளன் இவ்வளவு விவரமான வாசக/வாசகியரைச் சந்திப்பது மற்ற பேருக்கு பன்னீராக இருக்கலாம். எனக்குக் கொஞ்சம் வெந்நீர்தான்!
//
This is definitely a compliment on you and "வெந்நீர்" is just an expression of the master's personal feeling of going thru' that exercise !!!!


Don't take it to heart :)))


By enRenRum-anbudan.BALA, at Fri Jun 10, 12:30:21 PM IST  


Hhmmm... :-) (sujatha sonnathu maathiri, naan enna ninaikkirEnnum yaarukkum puriyak kudaathu! athaan intha comment!)


anpudan,
Prasanna


By Haranprasanna, at Fri Jun 10, 05:22:59 PM IST  


பாராட்டுகளைக்கூட கொஞ்சம் திருகி சினிகலாத்தான் சொல்லணுமா வாத்யாரே ..??


:-)


By Mookku Sundar, at Fri Jun 10, 06:53:33 PM IST  


அவர் வேர என்ன சொல்லணும்னு நெனைக்கிறீங்க? எனக்குப் புரியலை. தெளிவா எது புடிச்சுது எது புடிக்கலைன்னு தானே சொல்லி இருக்காரு. இதையும் post mortem தான் பண்ணணுமா?
he said what he felt about the meeting. the scene was anyway like 10-15 people pouncing hard on him.
ப்ளாக்-ல உப்பு பெறாத விஷயத்தை ஊதிப் பெருசாக்கற கொள்கை கனஜோரா பல்கிப் பரவுதுன்னு நெனைக்கறேன்.


By சுவடு ஷங்கர், at Fri Jun 10, 08:25:01 PM IST  


//அவர் வேர என்ன சொல்லணும்னு நெனைக்கிறீங்க? எனக்குப் புரியலை. தெளிவா எது புடிச்சுது எது புடிக்கலைன்னு தானே சொல்லி இருக்காரு.//


ஷங்கர், அதே தான் நான் சொல்றதும். அவர் சொன்னதுல் எது புடிக்கலையோ அதை தான் நானும் சொல்றேன். "எழுத்தாளனுக்கும் வாசகனுக்கும் குறைந்தபட்ச தூரமாவது தேவை என்பது தான் அன்றைய பாடம்" அப்படின்னு அவர் சொல்றது அவரை கடவுள் மாதிரி நினைச்சு ( அட்லீஸ்ட அந்த மனநிலையில் இருந்த) பார்க்கப்போன என் நண்பர்களை புண்படுத்தி இருக்குமோ என்ற எண்ணம். எனக்குப் பிடிச்ச எழுத்தாளர்ங்கிறதுக்காக, அவர் என்ன சொன்னாலும் மண்டையாட்ட முடியாது. ஊதிப் பெருசாக்கறதுக்க்கு எதுல ஒண்ணுமே இல்லை. ஆனா கண்டிப்பா என் வருத்தத்தை தெரிவிக்கணும்ணு சொல்றேன். அவ்ளதான். புரியுமென்று நம்புகிறேன்.


By Mookku Sundar, at Sat Jun 11, 04:30:36 AM IST  


ஆனந்த விகடனில் படித்தேன்.சுஜாதா சொன்னதில் தவறு இருப்பதாய் எனக்கு படவில்லை.அவர் நிறைய எழுதிவிட்டார் திடீரென ஒருகதை ஒருகட்டுரை பற்றிக் கேட்டால் நாமா எழுதினோம் என சந்தேகம் வரும்தான் அக்கணம் நல்ல நியாபகம் வைத்திருக்கும் ஆட்களிடம் மாட்டினால்?கேள்வி மேல் கேள்வி கேட்டு துளைப்பார்கள்...என்னபதில் சொல்ல முடியும்.அதே நேரம் படைப்பாளியின் மனநிலை வேறு படிப்பவின் மனநிலை வேறு கொஞ்சம் கஷ்டம் தான் ஒத்துப் போவது...


By ப்ரியன், at Sat Jun 11, 12:18:16 PM IST  


அன்புள்ள தேசிகன்
நலமே, உண்மை தேசி, ஒரு எழுத்தாளன் என்பவன் படிக்க சுவாரசியமாய் இருக்கலாம், ஆனால் நேரில் பார்க்கையில் பொசுக்கென்று போய் விடலாம் என்று என் குரு பாலகுமாரன் சொன்னது நினைவு வருகிறது....


By srishiv, at Sun Jun 12, 12:18:29 AM IST  


I do not think you all should take it offensively. He has got all rights to say that some distance should be maintained. When he came to mayiladuthurai one time (around 15 years back) Everybody went to talk to him (including me...!!) and he said big NO... (I was studying in +1 and it was big disappointment for me ...) Later We also understood how difficult it would be for him to manage ... So we cannot take it offensively at all....


Thaks


By Anonymous, at Tue Jun 14, 09:33:28 AM IST  


 

Thursday, June 9, 2005

ஸ்ரீரங்கம் - 6

எறக்குறைய ஒரு வருடம் இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஸ்ரீரங்கம் தொடரை விட்ட இடத்திலிருந்து தொடர்கிறேன்...

- தேசிகன்


- * - * - *


 


[%image(20050818-sri_venugopal.jpg|432|330|Srirangam Venugopal)%]

இந்த பதிவில் கிபி 1178-1310 முதல் நடைபெற்ற நிகழ்ச்சிகளை சுருக்கமாக தந்துள்ளேன். இந்த காலத்தில் சோழ அரசர்கள் வீழ்ச்சியும், பாண்டிய அரசர்கள் மலர்ச்சியும் பெற்ற காலம் என்று கூறலாம். சோழ மற்றும் பாண்டிய அரசர்களின் சண்டையினால் மைசூரை ஆண்ட ஒய்சள அரசர்கள், சேர அரசர்கள், இலங்கை அரசர்கள் மற்றும் கீழ்த்திசைக் கங்கர்களும் ஊடுருவ நல்ல சந்தர்ப்பம் அளிக்கப்பட்டது. பாண்டிய அரசர்களுக்கு எதிராக ஒய்சள அரசர்கள் சோழர்களுக்கு உதவி செய்தனர். காலபோக்கில் ஸ்ரீரங்கத்துக்குப் பக்கத்தில் உள்ள கண்ணனூர், விக்கிரமபுரி ஆகிய இடங்களை தங்களுக்கு கீழ் கொண்டு வந்து, தங்களின் உப தலை நகரமாக ஆக்கிகொண்டார்கள். பின்னர் முஸ்லிம் மன்னர்கள் மாலிக்காபூர்(1310-11), துக்ளக்(1323) போன்றவர்கள் கோயிலை சூரையாடினர். தொடர்ந்து ஸ்ரீரங்கம் வைணவ தலைமைச் செயலகமாக திகழ்ந்தது. ராமானுஜருக்கு அடுத்து வந்தவர்கள் ஸ்ரீரங்கம் கோயிலை சார்ந்தவர்கள் ஆவர். இந்த காலகட்டதில் தான் தென்கலை-வடகலை பிரிவு உண்டாயிற்று. ( இதை பற்றி தனியாக ஒரு பதிவில் சொல்கிறேன் )


 


சாளுக்கிய சோழகுல மரபில் தோன்றிய மூன்றாம் குலோத்துங்கனின் (கிபி 1178-1218 ) இருபதாம் ஆட்சியாண்டுக் கல்வேட்டு ஒன்று, ஸ்ரீரங்கம் கோயிலின் நிர்வாகம் அவனது ஆட்சியின் கீழ் வந்தது என்று கூறுகிறது. மேலும் இக்கல்வெட்டு திருவானைக் கோயிலில் உள்ள ஜம்புகேசுவரர் என்ற சைவக்கோயிலுக்கும், ஸ்ரீரங்கம் கோயிலுக்கும் அந்த காலத்தில் இருந்த நிலப் பூசல்களைக் தீர்க்க முயன்றான் என்று கூறுகிறது.

இக்காலம் பல இன்னல்களுக்குட்பட்டிருந்தது. சோழர்குல மன்னர்களின் ஆட்சியானது ஒரிசாவரையில் பரவி ஆதிக்கம் பெற்றுருந்த போதிலும், ஒரிசா மக்களும், கிழ்த்திசைக் கங்கார்களும், பாண்டியர்களும் இலங்கை அரசனின் துணையுடன் அடிக்கடி சோழரை எதிர்த்து சண்டையிட்டனர். கிபி 1223-1225 வரை ஸ்ரீரங்கம் கோயில் கங்கர்களால் கவர்ந்து கொள்ளப்பட்டது. அவர்களால் அக்காலத்தில் இக்கோயிலில் நிர்வாகம் சிதைந்து பாழ்பட்டது.


சாளுக்கிய சோழ அரசர்களுக்கு, மைசூர் ஓய்சள அரசர்கள் பெரிதும் துணை புரிந்தபோதிலும், முதலாம் மாறவர்ம சுந்திர பாண்டிய மன்னன் (கிபி, 1216-1238) கருநாடகத்தைக் கைப்பற்றினான். அவனது ஒன்பதாம் ஆட்சியாண்டில், அவனுடைய படைகள் ஸ்ரீரங்கத்தை கங்கர்களிடமிருந்து விடுதலைப்பெறச்செய்தது. ஆனால் ஒய்சள மன்னர்களும், இக்கொயிலில் ஈடுபட்டு ஆர்வம் காட்டினர், அவர்கள் பல கல்வெட்டுக்களை இக்கோயிலில் விட்டுச் சென்றுள்ளார்கள். ஒய்சள அரசனாகிய சோமேசுவரன்(கிபி 1234-1262) தனது 16-ஆம் ஆட்சியாண்டில்(கிபி 1240) இக்கோயிலுக்கு ஒரு நந்தவனத்தையும், மூன்றாம் பிராரத்தில் ஒரு சாலையையும் ஏற்படுத்தினான் என்பது, கல்வெட்டுக்களால் புலனாகிறது.


கோயிலிலுள்ள சந்நிதிகளுள் மிகவும் அழகு வாய்ததொன்றிய வேணுகோபால கிருஷ்ணரின் சந்நிதி, இக்காலத்தில் ஏற்பட்டதேயாகும்.(பார்க்க படம்). சிறிது ஏறத்தாழ இந்தக் காலத்திலேயே பாண்டியர்களின் ஆடம்பர மிக்க பக்தியின் மூலம் இக்கோயிலில் பல நன்மைகள்ப் பெற்றது. மதுரையை ஆண்டுவந்த முதலாம் சடவர்ம சுந்திரபாண்டியன்(கிபி 1251-1268), இக்கோயிலில் பல கட்டிடங்களை எழுப்பியும் பலவகை அலங்காரங்களைச் செய்தும் ஏராளமான நன்கொடைகளை வழங்கியும் பெரும் புகழ் பெற்றான். திருவரங்கநாதர் சந்நிதி, விஷ்வக்சேனர் சந்நதி, மகாவிஷ்ணு சந்நதி, நரசிம்மர் கோபுரம், மூன்று விமானங்கள், திருமடைப்பள்ளி ஆகியவற்றை இவ்வரசன் கட்டினான். கடக்(Cuttack, Orissa) அரசரை எதிர்த்து போரில் வென்று அவரது கருவூலத்தினின்று கைப்பற்றிய பொருள்களைக்கொண்டு சடவர்மன் சந்திரப்பாண்டியன் திருவரங்கநாதர்க்கு மரகதமாலை, பொற்கிரீடம், முத்தாரம் முத்துவிதானம், பலவகை பொற் பாத்திரங்கள், குவளைகள் ஆகியவற்றை வழங்கினான். காவிரி நதியில் தொப்போற்சவம் நடத்துவிப்பதற்கு தங்கத்தினாலேயே படகு அமைத்தான். அதில் தனது பட்டத்து யானையை படகில் ஏற்றி அதன் முதுகில் தான் ஏறி அமர்ந்து கொண்டான். மற்றொரு படகில் நாணயங்களையும் கொட்டி நிரப்பினான். தன்னுடைய படகினது நீர்மட்டத்துக்கு மற்றொரு படகும் வருகின்ற வரையில் நிரப்பினான் அதை பின்னர் கோயிலுக்கு தானமாக வழங்கினான் என்று கோயிலொழுகுல் குறிப்புள்ளது.


இதனை அடுத்து 25 ஆண்டுகளுக்கு பிறகு மாறவர்மகுல சேகர பாண்டியனின்(கிபி 1268-1308) ஆட்சிக் காலத்தில் போர்ச்சுகீசிய யாத்திரிகன் மார்க்கோபோலோ இங்கு வந்ததாக கூறிப்புள்ளது. முஸ்லிம் மன்னர்கள் படையெடுப்பு பற்றி அடுத்த பதிவில்.Old comments from my previous Blog


nice post desikan. a few things stand corrected:


1. Malik Kaffur was not a king. He was the prime general of Allah-ud-din Khilji


2. Hoysalas did not rule from Mysore. Their capitals were Halebidu and then Belur (from 1311 to 1327).


By Hemanth, at Thu Jun 09, 12:36:24 PM IST  


Hemanth,

Thanks for your comments. I will verify it.

- desikan


By Desikan, at Thu Jun 09, 12:41:55 PM IST  


ஹேமந்தின் இரண்டு குறிப்புகளும் சரியென்று நினைக்கிறேன்.

மாலிக்காபூரைப் பொருத்தவரை, படைத்தலைவன் பேரரசனைப்போல் சிற்றரசரகளிடம் அதிகாரம் செலுத்தினான் என ஞாபகம்.


மார்க்கோ போலோ குறிப்புகளில் திருவரங்கம் பற்றி ஏதேனும் உண்டோ எனத்தெரியவில்லை.


By ஜீவா(Jeeva) (#7113738), at Fri Jun 10, 09:15:27 AM IST  


I remeber reading a novel by balakumaran "Kaathal arangam". Neenga padichirukingala? how close is that to the history of the temple?


By Muthukumar Puranam, at Wed Jul 06, 06:38:17 PM IST  


¦Ã¡õÀ À¢ÃÁ¡¾õ


Å¡úòиû


By Anonymous, at Fri Jul 08, 05:43:32 PM IST  


தேசிகன் ஸார் எனக்கு இப்ப அவசரமா `அடையவளைஞ்சான் தெரு`வோட பெயர்க் காரணம் தெரியணும். ஹெல்ப் ப்ளீஸ்.


நன்றி/


அன்புடன்

சுந்தர்


By சுந்தர், at Sat Aug 06, 09:49:26 PM IST  

Wednesday, June 8, 2005

சுஜாதாவின் வானொலி பேட்டி

சுஜாதாவின் கலந்துரையாடலில் கலந்துக்கொள்ள முடியாதவர்களுக்கு ஒரு வானொலி பேட்டி ;-)
அன்புடன்,
தேசிகன்.


* - * - *


ரேடியோவின் பயனை நாம் குறைத்து மதிப்பிட்டிருக்கிறோம். ரேடியோதான் எந்தவித கவனக் கலைப்பும் இன்றி - நகம் வெட்டுதல், முகம் தேய்த்தல் போன்ற மற்ற வேலைகளை கவனித்துக் கொண்டே, அவ்வப்போது தேவைப்பட்டதைக் கேட்டுக் கொள்ளும் வசதிபடைத்த ஊடகம். டிவி என்றால், ஒரு இடத்தில் உட்கார்ந்து கண்ணும் காதும் உற்று கேட்க, பார்க்க வேண்டும். சினிமா இன்னும் மோசம். இருட்டில் உட்கார்ந்து கொண்டு பார்க்க வேண்டும்.


ரேடியோ அப்படியில்லை. காரில், வீட்டில், சமையலறையில் ஏன் பாத்ரூமில் கூட கேட்கலாம். அதுவும் இப்போது எஃப்எம் வசதி வந்ததும், நிறைய நிலையங்கள் உருவாகி நாள் முழுதும் சினிமா பாடல்கள் கேட்கக் கூடிய பாக்கியங்கள்¢ முதலில் தோன்றியிருக்கின்றன. மெல்ல மெல்ல இது அலுத்துப்போய், நாள்¢ முழுவதும் இலக்கியம், நாள் முழுவதும் கர்நாடக சங்கீதம், நாள் முழுவதும் காமெடி, நாள் முழுவதும் அறிவியல் என்று சானல்கள் அமெரிக்காவில் போல வரலாம். இப்போது இவையனைத்தையும் பேல்பூரி போல் கலந்து கொடுக்கும் அரசு சார்ந்த ஆல் இண்டியா ரேடியோ நிலையங்களுக்கு வாடிக்கையாளர்கள் அதிகரித்திருக்கிறார்கள். மைய அரசு, திறந்த வெளி கல்விக்கு ஒரு முக்கிய சாதனமாக ரேடியோவை மதிக்கிறது.


இவ்வகையில் கல்வி ரேடியோ நிலையத்தினர் கோவையிலிருந்து என்னை பேட்டி கண்டார்கள். அண்மையில் நான்¢ கொடுத்த உருப்படியான பேட்டிகளில் அது ஒன்று. அதன் சிடியை எனக்கு அனுப்பி வைத்திருந்தார்கள். இப்போது தனியார் கல்வி நிலையங்களில் கூட ட்ரான்ஸ்மிட்டர்கள் அனுமதிக்கப்பட்டு, மாணவ மாணவிகள் தங்கள் திறமைகளைக் காட்ட அவகாசம் அளிக்கப்பட்டிக்கிறார்கள்.


இளைஞர்களின் இலக்கிய, நாடக ஆசை, திறமைகளுக்கு மற்றொரு வடிகால் கிடைத்துள்ளது. ரேடியோ, மிர்ச்சி, சூரியன் எஃப்எம் செய்யும் அட்டகாசங்கள் தமிழர்களுக்கு ஒருவாறு பழகிவிட்டது. இவர்களுக்கென்றே ஓர் ஆங்கிலம் கலந்த தமிழ், தனிப்பட்ட எரிச்சல் தரும் உச்சரிப்பு, கொச்சை இதெல்லாம் வடிவமைந்து கொண்டிருக்கிறது. இதேபோல தற்கால மாணவர்கள் பேசவும் துவங்கிவிட்டார்கள். ரேடியோவால் தமிழின் பேச்சு நடையை மாற்ற முடியும் என்பதற்கு உதாரணங்கள் இவை.


யாராவது தமிழ் விரும்பிகள் மறியல் செய்யும் வரை இந்த மணிப்ரவாகத் தமிழ் செழிக்கும். ரேடியோவின் உண்மையான அடையாளங்கள் நமக்கு மெல்லத்தான் புலப்படும்.
( நன்றி அம்பலம் )


வானொலி பேட்டி கீழே.Friday, June 3, 2005

சுஜாதாவுடன் ஒரு கலந்துரையாடல்-0 4 ( படங்கள் )

படங்களை பார்க்க கிள்க் செய்யவும்


[%popup(20050819-sujatha_meet_1.jpg|360|270|படம் 1)%]
[%popup(20050819-sujatha_meet_2.jpg|360|270|படம் 2)%]
[%popup(20050819-sujatha_meet_3.jpg|360|270|படம் 3)%]
[%popup(20050819-sujatha_meet_4.jpg|360|270|படம் 4)%]
[%popup(20050819-sujatha_meet_5.jpg|360|270|படம் 5)%]
[%popup(20050819-sujatha_meet_6.jpg|360|270|படம் 6)%]
[%popup(20050819-sujatha_meet_7.jpg|360|270|படம் 7)%]
[%popup(20050819-sujatha_meet_8.jpg|360|270|படம் 8 )%]
[%popup(20050819-sujatha_meet_9.jpg|360|270|படம் 9)%]

 


 

சுஜாதாவுடன் ஒரு கலந்துரையாடல்-0 3

ஹரன்பிரசன்னா, எனி இண்டியன்.காமில் இருக்கிறார். வயது 29. http://www.nizhalkal.blogspot.com.
நான் சந்திக்க நினைக்கும் எழுத்தாளர்களில் ஒருவரான சுஜாதாவைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்குத் தேசிகன் மூலம் கிடைத்தது. சுஜாதாவின் எழுத்துகளை மிகவும் விரும்பி வாசித்திருந்த நான், அதை வாசித்த காலத்திலேயே சுஜாதாவைச் சந்திக்கவேண்டும் என்று நினைத்துக்கொள்வேன். சென்னையில் வுட்லாண்ட்ஸ் டிரைவ் இன்னில் சுஜாதாவைச் சந்தித்தபோது, எனக்குள் ஒரு இனம்புரியாத சந்தோஷமும் வாழ்நாளில் நாம் நினைத்த ஒன்று நிறைவேறுகிறது என்கிற எண்ணமும் இருந்தது. சந்திப்பு முடியும்போது, நான் சந்திக்க நினைத்திருந்த ஆதர்ச எழுத்தாளர்களில் நீங்களும் ஒருவர் என்று அவரிடம் சொன்னேன். சிரித்தார்.


தேர்ந்தெடுத்துக்கொண்ட கேள்விகளுடன் செல்லாமல், ஒரு சிறிய சந்திப்பு என்றளவிலேயே இருக்கவேண்டும் என்ற எண்ணத்தில்தான் நான் சென்றிருந்தேன். சந்திப்பு அப்படியே அமைந்தது. சுஜாதா புதியதாக எதையும் சொல்லிவிடவில்லை. இத்தனை வருடங்களாக அவர் எதை எழுதிக்கொண்டிருக்கிறாரோ அதையே சொன்னார். மீண்டும் மீண்டும் அவரிடம் கேட்கப்பட்டிருந்த கேள்விகளே மீண்டும் கேட்கப்பட்டன. நேரில் சந்தித்துக் கேட்கிறோம் என்கிற நிகழ்வே முக்கியமானதாக இருந்தது. நான் பல கேள்விகள், துணைக்கேள்விகள் என்று கேட்டுக்கொண்டே இருந்தேன். முக்கியமாக நான் கேட்டது, இனிமேல் கணேஷ் வசந்த் கதைகள் எழுதுவீர்களா? அவர் உடனே சொன்னார், இல்லை என்று. (ரஜினி மாதிரி இப்ப நான் இல்லைன்னு சொல்றேன், ஆனா நாளை என்ன நடக்கும்னு ஆண்டவந்தான் முடிவு செய்யனும் என்று சொல்வாரோ என எதிர்பார்த்திருந்தேன்!) நான் உடனே "நன்றி சார்" என்றேன். அதற்கு அவரின் எக்ஸ்பிரஷன் என்னவாக இருந்ததென்று சொல்லமுடியவில்லை. நான் ஒரு வேண்டுகோளாக, "இனியும் புனைவுகளில் அதிகம் கவனம் செலுத்தாமல், உங்களுக்குக் கிடைத்திருக்கிற இந்த பெரும் வாய்ப்பைப் பயன்படுத்தி, இளைஞர்களின் கவனம் பதியவேண்டிய இலக்கியங்களின் பக்கம் அவர்களின் பார்வை திரும்ப எழுதவேண்டும். திருப்பாவையின் உரையை உங்கள் நடையில் எழுதலாம்" என்றேன். "ஒரே சீரியஸா எழுதிக்கிட்டு இருந்தா, நான் எழுதுறதைப் படிக்கிறதை விட்டுருவாங்க. அதையும் எழுதி, இதையும் எழுதினாத்தான், அவங்களை நான் சொல்ற விஷயத்தைக் கவனம் பெற வைக்க முடியும்" என்றார். ஒப்புக்கொண்டேன். சுஜாதா என்கிற நல்ல மனிதரைக் கண்டேன் என்பதே உண்மை. அவரது அரட்டை மற்றும் கேள்விப்பட்ட விஷயங்களில் இருந்து, அவர் இவ்வளவு தூரம் இயல்பாக, நட்புடன் பேசுவார் என்று நான் எதிர்பார்த்திருக்கவில்லை. சந்திப்பு ஆரம்பித்த சில மணித்துளிகளிலேயே, அவரது சில கமெண்ட்டுகளில் மிக ஈர்க்கப்பட்டு, பலமாகச் சிரிக்க ஆரம்பித்துவிட்டேன். தான் எழுதியதைப் பற்றிச் சொல்லும்போது எந்த வித யோசனைக்கும் இடமில்லாமல் தன் மனதில் பட்டதைப் பட்டெனச் சொன்னர் சுஜாதா. பாய்ஸ் படம் பற்றிப் பேசும்போது, "நீங்கள் எழுதாத வசனங்கள் சில இடம்பெற்றதாமே" என்றேன். "இல்லவே இல்லை" என்றார். திரைக்கதை எழுதுவது எப்படி என்கிற புத்தகத்தில், கதாபாத்திர அறிமுகத்தின் போது தரப்பட்டிருந்த எடுத்துக்காட்டில் பாய்ஸ் படம் பற்றிய காட்சிகள் இடம்பெற்றிருந்தன. ( பாய்ஸ் படம் வருவதற்கு முன் அவர் எழுதிய விமர்சனம் 'கடவுள்களின் பள்ளத்தாக்கு என்ற புத்தகத்தில் வந்துள்ளது என்றார் )அதில் வரும் கவிதைக்குப் பதில் படத்தில் வேறொரு கவிதை இடம்பெற்றிருந்தது. அதைச் சுட்டிக்காட்டி, நீங்கள் எழுதியதே இடம் பெறவில்லையே என்றேன். 100% அப்படியே இடம்பெறும் என்று எதிர்பார்க்கக்கூடாது; இயக்குநர்கள் விருப்பத்திற்கேற்ப சிலவற்றை மாற்றுவார்கள் என்றார். அந்நியனில் ஏ.ஆர்.ரகுமான் இல்லாத குறை தெரிகிறது என்றார். ஒப்புக்கொண்டார் என்று நான் நினைத்துக்கொண்டிருந்தபோது, படம் வந்ததும் பாடல்கள் பிடிக்கும் என்றார். கூட இருந்தவர்கள் வழி மொழிந்தார்கள். நான் ஏ.ஆர்.ரகுமான் இல்லாத குறை எப்போதும் இருக்கும் என்றேன் மற்றவர்களிடம். வலைப்பதிவுகளைப் பற்றிப் பேசும்போது, "15 நிமிடப் புகழ் என்று நீங்கள் சொன்னதற்கு உங்களை விமர்சிக்காத வலைப்பதிவுகள் குறைவு" என்றேன். "அப்படியா" என்று கேட்டுக்கொண்டார். "ஏறக்குறைய 550 வலைப்பதிவுகளில் 20 கூட நல்ல வலைப்பதிவுகள் தேறாது; எல்லாரும் நினைவலைகளாக எழுதிக் கொல்கிறார்கள். அன்றொரு நாள் மழை பெய்த போது, நான் பத்தாம் வகுப்புப் படித்த போது பெய்த மழை ஞாபகம் வந்தது.. என்றே எழுதுகிறார்கள்; குமுதத்தையும் ஆனந்தவிகடனையும் விமர்சித்துவிட்டு அதைவிட மோசமாகத்தான் எழுதுகிறார்கள்; பத்திரிகை உலகில் தீவிரமாக எழுதுகிறவர்களே வலைப்பதிவுலும் தீவிரமாக வினையாற்றுகிறார்கள்; மற்றவர்களெல்லாம் எதையோ என்னவோ எழுதுகிறார்கள்" என்றேன். கேட்டுக்கொண்டார்.


வெகு இயல்பான சந்திப்பாக இருந்தது. வீட்டிலிருப்பவர்கள் மாறி மாறி சுஜாதா என்ன சொன்னார் என்று கேட்டுக்கொண்டே இருந்தார்கள். என் தீவிர விசிறியாம் அவர் என்று சொன்ன பின்பு, அவர்கள் யாரும் மீண்டும் அக்கேள்வியைக் கேட்கவில்லை. சுஜாதா என்கிற எழுத்தாளர் பிம்பம், அவரது சந்திப்பின் மூலம், என் நெருங்கிய உறவினர்களில் ஒருவரான ஒரு பிம்பமாக மாறிவிட்டிருக்கிறது.* - * - *
க்ருபா ஷங்கர், Newhorizon Media, கணித்துறை. வயது 26 இருக்கலாம். www4.brinkster.com/shankarkrupa


 


 ஆறு மணிக்குதான் பரிநிரலி சந்திப்புக்குக் கிளம்பிக் கொண்டு இருப்பதாக யக்ஞா
சொன்னான். பரிநிரலி, சுஜாதா என்று இரண்டு நிகழ்ச்சிகளும் ஒரே நேரத்தில் நடந்தாலும், பரிநிரலி விவாத அரங்கம் ஆரம்பிக்க தாமதம் ஆகும் என்று பட்சி சொல்லியது. எப்பொழுதும் போல் பட்சி தவறாகவே சொல்லி இருந்தது பிறகுதான் புரிந்தது. சுஜாதாவிடம் நான் கேட்க நினைத்த கேள்விகள்:


1) அப்துல்கலாம் பற்றி சுவையாக (மசால் தோசை, பானிப்பூரி மாதிரி) இரண்டு வார்த்தைகள், மற்றும் அனுபவங்கள்.
2) மைக்ரோசா·ப்ட் வளர்ச்சியைத் தாமதப்படுத்த லினக்ஸ் பரவலாக
வேண்டுமென்றால் தமிழ் வளர்ச்சி தாமதப்படாதா? இன்னும் கொஞ்ச காலத்திற்கு லினக்ஸை கவனிப்பதை ஒற்றி வைத்துவிட்டு எல்லோரும் விண்டோஸில் தமிழ்


சுஜாதாவும் மற்றவர்களும் ஆர்வத்துடன் உரையாடிக்கொண்டு இருந்த வேளையில் எதற்கு கரடிப் பட்டம் வாங்க வேண்டும் என்ற யோசனையால் அதையெல்லாம் முடியவில்லை.


நடந்து கொண்டிருந்த உரையாடலே விஷயசாரமுடன் இருந்தது - திரைப்படம், கவிதை, நாவல். வளரும்/வளரநினைக்கும் எழுத்தாளர்களுக்கு சுஜாதா வழங்கிய டிப்ஸ், 'நிறையப் படிக்கணும்.'


தேசிகனிடம் கேட்கவேண்டும், சுஜாதாவோட உண்மையான வயசு 40ஆ இல்ல 45ஆ?


 


* - * - *
சுவடு சங்கர், வயது 24 இருக்கலாம். இன்·போஸிஸ், கணித்துறை, suvadu.blogspot.com


 


 எதற்கெல்லாம் தாமதமாகப் போகவேண்டும் என்ற விவஸ்தையே இல்லாமற்போய் விட்டது வரவர. உட்லண்ட்ஸ் ட்ரைவ்-இன்னுள் ஒரு மணி நேரம் தாமதமாக நுழைந்தபோதுகூட என் மண்டை சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டுதான் இருந்தது. அந்த ஏசி ஹாலுக்குள் பத்துப்பதினைந்து டம்ளர் ஐஸ் வாட்டர் மட்டும் முன்வைத்துக்கொண்டு அந்த எழுபது வயது இளைஞர் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்த அத்துணை தீவிரமான முகங்களைப் பார்த்தபோதுதான் என் தலைமைச் செயலகத்தில் மின்சாரம் அற்றுப்போனது. சபீனா போட்டு அலம்பிய மாதிரி சுத்தமான மூளையுடன் சுஜாதா அவர்களின் முன்னால் போய் நிற்கும்போது "இவர்தான் சுவடுகள் ஷங்கர்" என்று இகாரஸ் பிரகாஷ் குரலில் (ஐயா! நீவிர் நீடூழி வாழ்க) ஒலிக்குறிப்புகள், ஒன்று தவிர்த்து ஒன்றாக என் காதுகளில் விழுந்துகொண்டிருக்க, நான் ஆட்டுக்கணக்காக (sheepish, ஹிஹி) சிரித்தது இன்னும் நினைவிலிருந்து படுத்துகிறது.


என் கண்களில் ஆனந்தக்கண்ணீர் சொறிந்தது, அரித்தது என்றெல்லாம் டுமீல் விட்டால் காமெடியாக இருக்கும். அதெல்லாம் வேண்டாம். ஆனால், இந்த மனுஷர் முன்னால் என்ன பேசுவது என்று விளங்கத்தானில்லை. "சாரி, மன்னிக்கணும், ஒரு எக்ஸாம் இருந்துச்சு. எழுதிட்டு வர லேட்டாயிடுச்சு" என்று சொல்ல, டிரேட்மார்க் புன்னகை ஒன்று சுஜாதாவிடமிருந்து. என் திருவாய் திறந்து என்ன முத்து உதிர்த்தாலும் அது உலகத்தரமான நகைச்சுவையாக இருக்கும் என்பது முதலிலேயே புரிந்துவிட்டதால் உட்லண்ட்ஸில் செவிக்கு மட்டுமே உணவு, வாய் திறப்பது கனவு என்று அக்கணமே விதிக்கப்பட்டது. அதை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தியது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி.


என்னென்னமோ பேசிக்கொண்டிருந்தனர். சுரேஷ¤ம், பிரகாஷ¤ம் இன்ன பிறரும் கேள்விகள் பல சரமாரியாக எடுத்துவிட சுஜாதா சளைக்காமல் பதிலளித்துக்கொண்டிருந்தார். அவரது கதைகள் கொலை செய்யப்பட்ட சினிமாக்களிலிருந்து, 'கற்றதும் பெற்றதும்' வரை காதுகளில் விழுந்தது. ஆயினும் நான் வரும்போதே நிறைய பேசி முடித்திருந்ததால் பேச்சு தொய்வடையத் தொடங்கியிருந்தது. சீக்கிரமே சுஜாதா 'ஓக்கே, டயமாச்சு' mode-க்குப் போக, பிறகு ·ப்ளாஷ் வெளிச்சத்தில் அவரை வழியனுப்பிவைத்தோம்.


சுஜாதா ஜே.ஜேவும் கிடையாது. நான் பாலுவும் கிடையாது. எனவே எங்கள் முதல் சந்திப்பில் ஏதும் அசம்பாவிதங்கள் நிகழ்ந்துவிடவில்லை (அட்ரா, அட்ரா! என்னா பில்டப்பு என்னா பில்டப்பு!). ஆனாலும் அவரிடம் எனக்கு இயல்பாக எதுவும் பேசுவதற்கோ கேட்பதற்கோ தோன்றவேயில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது. ஆனால் இதை எதிர்பார்த்தேன் என்றும் தோன்றுகிறது.


சுஜாதாவை இன்னும் ஒரு எழுபது வயது முதியவராக என்னால் சத்தியமாகக் கற்பனை செய்யக்கூட முடியவில்லை. ஒரு முப்பத்தைந்து நாற்பது வயது இருக்கலாம் மிஞ்சிப்போனால். அவ்வளவுதான். அவரை அப்படித்தான் என்னால் பார்க்கமுடிகிறது. நேருக்கு நேர் அவரது முதுமையை சந்திக்கும்போது அவர் தாத்தா வேடமிட்டு வந்திருப்பது போன்றதொரு பிரமை. மெதுவாக அவர் காரில் ஏறி அமரும்போது வேகமாக ஓடிப்போய் அவரது முதிய வேடத்தைக் கலைத்துவிட்டு "சும்மா சீன் போடாதீங்க சுஜாதா" என்று சொல்ல ஆவலாக இருக்கிறது. கலைந்துவிடக்கூடிய வேடமாக இருந்தால் அதைச் செய்யக்கூடிய முதல் ஆசாமி நானாகத்தான் இருப்பேன். * - * - *
ஐகாரஸ் பிரகாஷ், வயது 33, Indscan- வைத்திருக்கிறார். Industrial Research. http://icarus1972us.blogspot.com உட்லாண்ட்ஸ் ஓட்டலில் அந்த சந்திப்பு நடந்து முடிந்ததும், உஷா மீண்டும் மீண்டும் என்னைக் கேட்டார். " நெஜமாவா? நெஜமாவா? ... என்னால நம்பவே முடியலையே... " அவரால் நம்ப முடியாமல் போன விஷயம், என்ன என்றால், நான் வாத்தியாரை முதல் முதலாக இப்போதுதான் நேரில் சந்திக்கிறேன் என்பதைத்தான்.
தேசிகன் ஏற்பாடு செய்திருந்த அந்தக் கூட்டத்துக்கு வழக்கம் போலவே இருபது நிமிடங்கள் தாமதமாகச் சென்றிருந்தேன். நான்கு நாற்காலிகள் போடப்பட்டிருந்த அந்த இடத்தில், ஆளாளுக்கு நாற்காலிகளை இழுத்துப் போட்டுக் கொண்டு, சுஜாதாவை சூழ்ந்திருந்தனர். கிடைத்த சந்தில் நாற்காலியை இழுத்துப் போட்டுக் கொண்டு நானும் அமர்ந்த போது, தேசிகன் அறிமுகப்படுத்தினார்.
முதன் முதலாக இப்போதுதான் நேரிலே பார்க்கிறேன் என்றாலும், அதற்கென்று பிரத்தியேகமான உணர்வு ஒன்றும் தோன்றவில்லை. நீண்ட நெடுநாட்களாகப் பழகி வந்திருந்த ஒருத்தரிடம் சகஜபாவத்துடன் உரையாடுவதைப் போலத்தான் இருந்தது. என்ன என்னமோ கேட்டுக் கொண்டிருந்தார்கள். நானும் என் பங்குக்கு எதையாவது கேட்கவேண்டும் என்று தோன்றினாலும், அத்தனை பேர் கூடியிருக்கிற இடத்திலே அறியாமையைக் காட்டிக் கொள்ள வேண்டுமோ என்றும் தோன்றியது. ஒரு இறுக்கமான கேள்வி பதில் செஷனாக இல்லாமல், ஜாலியாக கிண்டலும் கேலியுமாகச் சென்றதும். அதற்கு வாத்தியார் ஈடு கொடுத்ததும் இனிய ஆச்சர்யங்கள்.
சிறுகதை எழுதுவது எப்படி என்கிற அரதப் பழசான கேள்வியில் இருந்து துவங்கி, பாய்ஸ் படம் , ஹைக்கூ, பொய்க்கூ, அந்தக் காலத்தில் வந்த லவ்லெட்டர்களுக்காக ஊட்டுக்காரம்மாவிடம் வாங்கிக் கட்டிக் கொண்டது, ( இந்தக் காலத்திலும் வருகிறதா என்று கேட்க நினைத்து, கேட்கவில்லை ) பிரிவோம் சந்திப்போம், வானம் வசப்படும்., நகரம் சிறுகதை, முதன் முதலாக வசனம் எழுதிய திரைப்படம், அடுத்து எழுதப் போகும் படங்கள் என்று ஒருவர் மாற்றி ஒருவர் கேட்க, சந்திப்பு ஜாலியாகச் சென்றது.
நடுவிலே 'ஆ' வை பிரகாஷ்ராஜ், படமாக எடுப்பதற்காகக் கேட்டிருக்கிறார் என்று சொன்னதும், உடனடியாக எதிர்ப்பு தெரிவித்தேன் (" வாணா சார்.. ப்ளீஸ்... கெடுத்து குட்டிச் சுவராக்கிடுவாங்க, இருள் வரும் நேரத்தை பண்ண மாதிரி" )
ஏழுவயதில் முதன் முதலாக, புரிந்தும் புரியாமலும் வாசித்த பெண் இயந்திரம் கதையில் இருந்து, நாளது வரையில், ஒரு எழுத்தாளர் என்ற அடிப்படையிலே அவரும், வாசகன் என்ற முறையிலே நானும் ஒரு இணைக்கோட்டிலே பயணம் செய்திருக்கிறோம். ஆனால் சந்தித்துக் கொண்டதில்லை. இன்று சந்தித்துக் கொண்டாலும், அதனாலே பெரிய ரசாயன மாற்றம் ஏதும் நிகழ்ந்து விடவில்லை. நீண்ட நெடுநாட்களாக பரிச்சயமான ஒரு நண்பருடன் பேசுகிற தோரணையில் தான் பேச வருகிறது.
ஒரே ஒரு சினிமாவில் தலைகாட்டியது பற்றியும், எடி மர்பியின் படத்தை தழுவி அவர் திரைக்கதை எழுதிய தமிழ்த் திரைப்படம் பற்றியும், அவர் கதைகளிலே அடிக்கடி தலைகாட்டும் வத்ஸலா பற்றியும், வீடு சிறுகதை பற்றியும், கணையாழி கடைசிப் பக்கத்தில், அவர் அஞ்சலி படத்துக்கு எழுதிய விமர்சனம் பற்றியும், பூர்ணம் விசுவநாதனுடனான நாடக தினங்கள் பற்றியும், டில்லி பாரதி பாலு என்கிற நகுபோலியன் பற்றியும், ஆர்யபட்டா கதைக்கும், பாலசந்தரின் அந்த நாள் திரைப்படத்துக்கும் இருக்கும் ஒற்றுமை பற்றியும், நைலான் ரதங்கள் பற்றியும் , மேகலாவில் எழுதி நான் தலைப்பு மறந்து போன ஒரு குறுநாவல் பற்றியும், குமுதம் ஆசிரியர் தினங்கள் பற்றியும் கேட்கவேண்டியது நிறைய இருந்தது என்று உறைத்தது, அவர் சுமார் ஏழரை மணிக்கு, " என்ன முடிச்சுக்கலாமா? " என்று கேட்ட போது..
இன்னும் பேசவேண்டியது நிறைய இருக்கிறது என்று சொன்னேன், சந்திப்பு முடிந்து அவர் கிளம்பிய போது, அவருக்கு மட்டும் கேட்கிற விதமாக.
ஆவட்டும் பாக்கலாம் என்றார் காமராஜர் மாதிரி.


 


* - * - * - *
ராமசந்திரன் உஷா,ஹோம் மேக்கர் , இவர் எழுதிய கதைகள் இணையத் தளங்களிலும் கணையாழியிலும் வந்திருக்கின்றன.


 


சில மாதங்களுக்கு முன்பு ஒரு அரை மணிநேரம் சந்திப்பு, இப்பொழுது நான்கு நாட்களுக்கு முன்பு இரண்டு மணி நேர சந்திப்பு.
நாங்கள் ஏழு பேர்கள், அனைவருமே எழுத்தாளர் சுஜாதாவின் எழுத்துக்கு தீவிர ரசிகர்கள் என்று சொல்ல முடியாது, ஆனால் அந்த இரண்டு மணி நேர சந்திப்புக்கு பிறகு ஜெண்டில்மேன் என்ற நற்சான்றிதழ் அனைவர் வாயிலும் வந்தது. கதை சொல்வதில், நடையில் இருக்கும் துள்ளல் பார்க்கும் உருவத்தில் இல்லாவிட்டாலும் பேசும் முறையில் வயதானவர்களுக்கே உரிதான அறிவுரை சொல்வதோ, ஆசிர்வாதமோ இல்லாமல், நன்கு அறிமுகமானவரிடம் சகஜமாய் எப்படி பேசுவோமோ அப்படி பேசினோம்.
நண்பர் சுரேஷ் சொன்னதுப் போல, ரிமோட் பட்டனைத் தட்டி சேனல் மாற்றுவதுப் போல, ஆள் ஆளுக்கு ஒரு சப்ஜெட்டில் கேள்வி எழுப்ப அனைத்துக்கும் சரியான, யதார்த்தமான, உண்மையான பதில் சட்டென்று வந்தது. தற்கால கல்விமுறையைப் பற்றி அவருடைய
கவலை, கவிதைக்கு எளிமையே அழகு என்பதற்கு அவர் சொன்ன உதாரணங்கள், குமுதத்தில் வந்த ப்ரியா கதையின் முடிவில் எஸ்.ஏ.பி சொன்ன திருத்தங்கள், ரசிகைகள் எழுதிய கடிதங்களை அவர் மனைவிப் படித்துவிட்டு சொல்லும் கமெண்டுகள், இன்றும் நல்ல சிறுகதைகள், அதாவது பிற எழுத்தாளர்கள் எழுதியதைப் படித்துவிட்டு அவர் மனைவி அதை இவரிடம் படிக்க சொல்வாராம், அந்நியன், பாய்ஸ் என்று பேச்சு மிக சுவாரசியமாய் போனது.
பிரகாஷ் அவர் எழுதிய கதைகளைப் பற்றிய புள்ளிவிவரங்களை சொல்லி அசத்தியதும், அவர் முகம் மலர்ந்ததைப் பார்க்கும் பொழுது, எந்த எழுத்தாளருக்கும் விருதுகளை விட அவர் எழுதியதை பொத்தாம் பொதுவாய் நன்றாக இருக்கிறது என்று சொல்லாமல் படித்தவைகளை விவரமாய் சொல்லுவதை விட பெரிய விருது உலகிலேயே இல்லை என்று புரிந்தது. சிலர் அவர் எழுத்து வெறும் மேலோட்டமாய் இருக்கிறது என்று சொல்வார்கள். ஆனால் பல விஷயங்களை சாதாரண வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தியது அவர் எழுத்துதான். அப்படி எந்த வெகுஜன பத்திரிக்கைகளில் எழுதும் எழுத்தாளர்கள் எழுதினார்கள்? காரில் இருந்து இறங்கி நடக்கும் பொழுதும், திரும்ப மீண்டும் காரில் ஏறும்பொழுதும் வழியில் பார்ப்பவர்களில் பெரும்பாலோர், அவரை திரும்பிப் பார்த்தும், சுஜாதா தானே என்று சின்னக் குரலில் பேசிக் கொண்டதும், சிறிது தொலைவில் பின் தொடர்ந்த என் காதிலும், கண்ணிலும் விழுந்தது. இத்தகைய பிரபலம் வித்யாகர்வம் சிறிதுக் கூட இல்லாமல் இருப்பது ஆச்சரியத்தை அளித்தது. அந்த இரண்டு மணிநேரமும் மனதிற்கு நிறைவாகவும், சந்தோஷமாகவும் இருந்தது.


Old comments from my previous Blog


தேசிகன், மிக அருமையாக தொகுத்து இருக்கிறீர்கள். நன்றாக வந்திருக்கிறது.


By icarus, at Fri Jun 03, 01:48:53 PM IST  


வாவ்!!!!


By அல்வாசிட்டி.விஜய், at Fri Jun 03, 02:08:42 PM IST  


அருமையாக தொகுத்து இருக்கிறீர்கள்.


By வீ. எம், at Fri Jun 03, 02:09:41 PM IST  


I really feel sad for missing this wonderful evening...


mitra
(Saikrishna)


By மித்ரா, at Fri Jun 03, 02:10:15 PM IST  


அப்பாடா!


எல்லா நண்பர்களிடமும் இந்தச் சுட்டியைக் கொடுத்து அலட்டிக் கொண்டாகிவிட்டது!


By Pradeep, at Fri Jun 03, 02:44:58 PM IST  


வழக்கமான கமெண்ட் தான்..


உங்களையெல்லாம் பார்க்க
பொறாமையாக இருக்கிறது!


:-)


By சுபமூகா, at Fri Jun 03, 02:45:49 PM IST  


அன்புள்ள தேசிகன்,


இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள் யார் யார்? இணையத்தில் அறிவிக்கப்பட்டிருந்ததா ? இல்லையா ? முன்னமேயே தெரிந்திருந்தால் நானும் கலந்துகொண்டிருப்பேன் / என் இல்லத்தினரை அனுப்பியிருப்பேன். நாங்கள் எல்லோரும் அவர் நைலான் கயிறு எழுத ஆரம்பித்ததிலிருந்து அவரின் இரசிகர்கள்.


By லதா, at Fri Jun 03, 02:58:49 PM IST  


பெங்களூர்வாசிகளுக்குச் சொல்லாமல் சென்னைவாசிகளாய் நடத்திக் கொண்ட தனி ஆவர்த்தனத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன். வேற என்னத்தச் சொல்ல?


By மீனாக்ஸ், at Fri Jun 03, 03:04:19 PM IST  


அன்பு தேசிகன்,


இந்தக் கலந்துரையாடலின் தொகுப்பு நன்றாக வந்திருக்கிறது. எல்லாவற்றிற்கும் நன்றி. அடுத்த முறை சுஜாதாவை சந்திக்கும் போது இன்னும் சிறப்பான கேள்விகளோடு எதிர்கொள்ளலாம் என்று நம்புகிறேன்.


அப்புறம் .... என்னுடைய வயதில் நான்கை குறைத்து மதிப்பிட்டதற்கு நன்றி. :-)


- Suresh Kannan


By சுரேஷ் கண்ணன், at Fri Jun 03, 03:04:31 PM IST  


Geek...where r u? Desikan is kalakkifying here. Its real good exp. for those attended and good writeup for those who missed up the occation. Well Done Desikan.
-Shiva


By Anonymous, at Fri Jun 03, 04:58:40 PM IST  


தேசிகன்,


நல்ல தொகுப்பு. படிக்க, ரொம்ப சுவாரசியமா இருந்தது :)


அப்றம், அந்த வயித்தெரிச்சலை என்னன்னு சொல்றது ? உங்களுக்கு புரியுது தானே! :-(


என்றென்றும் அன்புடன்
பாலா


By enRenRum-anbudan.BALA, at Fri Jun 03, 05:23:20 PM IST  


தேசி, சந்திப்பில் கலந்து கிட்டவங்களுக்கு அவுங்க வீட்ல "சுத்தி" போட சொல்லுங்க! சொல்லிபிட்டன் ! அப்புறம் குறை சொல்லக்கூடாது ஆமாம் !


பொறமை "கண்ணுடன்"


ரவியா


By Anonymous, at Fri Jun 03, 06:15:50 PM IST  


நெறய போட்டோவில பிரவுன் கலர் சட்டையில ஆக்டர் கணக்கா ஒருதரு லுக் உடுறாரே, பாருப்பா அது?


ரவியா


By Anonymous, at Fri Jun 03, 06:48:03 PM IST  


என்னத்த சொல்ல....வயிறு பத்திக் கொண்டு எரிகிறது ...
ஒரு வேளை நான் வந்திருந்தாலும் "இவர் தான் டுபுக்கு"ன்னு நீங்க அறிமுகப்படுத்திருந்தா...சுஜாதா மண்டை மேலேயே ஒரு அடி போட்டிருப்பாரோன்னு நினைக்கவும் பயமா இருக்கு!


By Dubukku, at Fri Jun 03, 06:51:59 PM IST  


என்னத்தைச் சொல்ல?
கொடுத்த வெச்ச மகராசங்கப்பா.


வாழ்க்கையில ஒருதடவையாவது அவர சந்திக்கமாட்டோமான்னு ஏங்கிக்கிட்டிருக்குற என்னைய மாதிரி ஜீவனுங்க மத்தியில உங்களுக்கெல்லாம் மஹா அதிர்ஷ்டம்!


பல்லாண்டு வாழ்க அவர்!


அன்புடன்
எம்.கே.குமார்


By எம்.கே.குமார், at Fri Jun 03, 07:58:01 PM IST  


Desikan, Naan Indiala irunthapo ithai een eerpadu pannala enru messengeril ketean. Adutha murai sataiyai pidithu ketka pokirean. Apadi ninaika vaithu vitathu intha pathivu. I missed it. Glad you all could meet him.


I dont know IF i have asked him anything if I have met him. I would have just sit silently and watched him talk.


Suresh Kannan article is the best. Manushanuku enna naabaga sakthi. En unmaiyaana vasakarkal ennai santhika varuvathillai enru kanaiyazhi kadaisi pakathula vantha variyai eduthu vidaraare. Suresh Kannan.. Kalakiteenga.


Prasanna article looks like he is very careful in not praising too much :-) Prasanna, praise panrathu ellam thaaraalamaa pannalam. Thiturathuku thaan yosikanum :-) Ilakiyavathi aaitaale manasu vitu paarata manasu varaathaa ooi!


Mathavanga article pathi apuram ezutha parkurean. ipo mathiyaanam boova saapida pokanum.


Thanks and regards, PK Sivakumar


By PKS, at Fri Jun 03, 09:27:42 PM IST  


இங்கு உட்கார்ந்து கொண்டு இழந்து கொண்டிருக்கும் சந்தோஷங்களில் ஒன்று.


தொகுப்பு அருமையாக இருக்கிறது.
நல்லா இருங்க சாமிகளா..:-)


By Mookku Sundar, at Fri Jun 03, 11:19:07 PM IST  


ராஜ்குமார், பிரசன்னாவையும் சுரேஷ் கண்ணனையும் உஷாவையும் (உஷா அப்புறம் உடனே, பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தலும் இலமே என்று வழக்கம்போல ஆரம்பித்துவிடப் போகிறார்கள் என்று பயமாக இருக்கிறது :-) ) உடன் வைத்துக் கொண்டு "கிட்டத்தட்ட அனைவருமே சுஜாதா என்ற படைப்பாளியுடன் விவாதிக்க வேண்டும் என்ற மனநிலையில் இல்லாமல், ஒரு தெய்வத்தை அல்லது சக்தி பொருந்திய ஆன்மீகப் பெரியவரை சந்திக்கும் மனோநிலையில் வந்ததுபோலத்தான் தோன்றியது" என்று எப்படி எழுதினீர்கள்? சண்டைக்கு வரப் போகிறார்கள். :-) அல்லது, பல நேரங்களில் பணிவும் மரியாதையும்கூட பக்தியாகப் பார்க்கப்படுகிற சமூகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதைச் சொல்கிறதா உங்கள் வரிகள்?


ராம்கி, அங்கேயும் ரஜினியை விடலையா? :-) [Kidding]


நிறையப் படிக்க வேண்டும் என்று சுஜாதா சொன்னது சத்தியம். கிடைப்பதைத் தேடித் தேடிப் படித்துப் படித்ததை வாழ்க்கையில் பொருத்திப் பார்க்க ஆரம்பித்தாலே (ஐ மீன், நாட் பாலோ இட். படித்ததுடன் தொடர்புடைய விஷயங்கள் வாழ்க்கையில் இருந்தால் அதனுடன் பொருத்திப் பார்த்துப் பொருளும் விளக்கமும் கொள்வது) நன்றாக எழுத வந்துவிடும் என்று நானும் நினைக்கிறேன். ஆனால், தவறாகப் பொருத்திப் பார்ப்பவர்களைப் பற்றியும் நினைவுக்கு வந்து தொலைக்கிறது. அவர்களை அந்த ஈசன் காப்பாற்றட்டும்!


சுரேஷ் கண்ணன் குறிப்பிட்ட நகரம் தமிழின் சிறந்த கதைகளுள் ஒன்று என்பது என் வாசக அபிப்ராயம். அது எழுதப்பட்டு பல பத்து ஆண்டுகள் ஆனபின்னும், இன்றைக்குப் படிக்கும்போதும் அப்படியே பொருந்துவதாகவும் மனதை உருக்குவதாகவும் உள்ளது. அடிக்கடி எழுதுகிற பத்திரிகை நெருக்கடிகள் இல்லையெனில், சுஜாதாவின் பல கதைகள் நகரம் அளவுக்கு வந்திருக்கும் என்று நினைக்கிறேன். நகரம் அளவுக்கு இல்லையென்றாலும், அவரிடமிருந்து பல சிறந்த சிறுகதைகள் வந்திருக்கின்றன என்பதையும் இங்கே சொல்ல வேண்டும்.


"அரிதாகக் கிடைக்கிற தகவல்களை உள்ளடக்கியதுதான் ஒரு சிறந்த பதிவாக இருக்க முடியும்" என்கிற சுஜாதாவின் வாதம் நன்றாக இருக்கிறது. உடனே, ஆளாளுக்கு என்சைக்ளோபீடியாவை எடுத்து அரிதான தகவல்களை வலைப்பதிவில் இட ஆரம்பித்துவிடுவார்களோ என்று பயமாகவும் இருக்கிறது. :-) என்னவோ போங்க! வலைப்பதிவு என்றாலே குதர்க்கமும் கோணலும் தவறான புரிந்து கொள்ளுதலும் பிடிக்காத ஆள் எதை எழுதினாலும் குற்றம் என்ற பெயர் வந்துவிட்டதோ என்பதால் இப்படிச் சொல்கிறேன். நான் இப்படி ஒரு பாரா எழுதி சொல்ல முயன்றதை சுரேஷ் கண்ணன் ஒரே வரியில் சொல்லியிருக்கிறார் பாருங்க. "ஆனால், இப்போது வலைப்பதிவு எழுதுகிறவர்களில் சிலர், இதை outlet-ஆகப் பயன்படுத்தாமல் toilet-ஆக பயன்படுத்துவதுதான் பிரச்சினை". இதுக்குதான் சுரேஷ் கண்ணன் வேண்டும் என்பது :-)


ஆனாலும் சுரேஷ் சிலர் என்று எல்லாம் சொன்னால் ஒருத்தருக்கும் உறைக்காது. பெயர் சொல்லி எழுதிவிட்டு அவதூறு வாங்க நான் தயாரில்லை என்கிறீர்களா? பெயர் சொல்லி எழுதினாலும் ஒன்றுக்கும் உறைக்காது. அதனால், இந்தப் பிரச்னை எல்லா இடங்களிலும் இருந்து கொண்டுதான் இருக்கும். விஷயமறிந்தவர்கள் சொல்கிறார்கள். தமிழ்.நெட், soc.culture.tamil எல்லாம் இப்படித்தான் கெட்டுப் போனதென்று. பதிலுக்கு உங்களைப் போன்றவர்கள் நல்ல விஷயங்களை எழுத எழுத இதை மேலே எடுத்துச் செல்ல முடியும். எனவே, சரோஜாதேவியைப் படிக்க இருப்பவர்கள் மாதிரி, toilet மாதிரி பயன்படுத்துபவர்களைப் படிக்கவும் இருக்கிறார்கள் என்று விட்டுவிட்டு, உங்களுக்குப் பிடித்ததை எழுதிக் கொண்டே இருங்கள்.


"ஏறக்குறைய 550 வலைப்பதிவுகளில் 20கூட நல்ல வலைப்பதிவுகள் தேறாது" என்றாரா பிரசன்னா? மாமே, அடுத்து வலைப்பதிவுலே உனக்கு டின் கட்டப் போறாங்க. :-) சரி, அந்த 20 யாருன்னு மட்டும் சொல்லும்வே.


பிரகாஷ் ஒவ்வொரு வரியையும் ஒவ்வொரு பாராவாக விரித்து எழுத வேண்டும். அவசரத்தில் எழுதியிருக்கிறார் போலிருக்கிறது. எக்ஸ்பிரஸ் வேகத்தில் தாவித் தாவிச் செல்கிறார்.


உஷா எழுதியிருக்கிற எதைப் பற்றியும் கருத்து சொல்ல பயமாயிருக்கிறது :-)


சுவடு சங்கர், க்ருபா சங்கர் எழுதியதைப் படித்தேன்.


அன்புடன், பி.கே. சிவகுமார்


By PKS, at Fri Jun 03, 11:45:33 PM IST  


Mookan sonnadhe emathu karuthum.


Mikka Nandrikal!


By Balaganesan , at Fri Jun 03, 11:55:59 PM IST  


Dear Desikan


Excellent compilation. I enjoyed as if I also participated. He is right on blogs.


Thanks for your organization and presentation
Regards
Sa.Thirumalai


By Anonymous, at Sat Jun 04, 06:05:43 AM IST  


பி.கே.எஸ்., அதிகமாக எழுதினால் பெரிய போஸ்டிங்காக போய்விடும் என்பதால் சிறியதாக எழுதவேண்டும் என்று எழுதினேன். என்னால் சிறியதாக எழுதவே முடியவில்லை. மிகவும் கஷ்டப்பட்டு சிறியதாக எழுதி அனுப்பினேன். அதற்குப் பின் பார்த்ததில், சுஜாதா பேசியதை விட நான் பேசியது அதிகம் இருப்பது தெரிந்தது!!! என்ன செய்ய! சுஜாதாவைப் புகழக் கூடாது என்பதில்லை. நான் சந்திக்க நினைக்கும் ஆதர்ச எழுத்தாளர்களில் அவரும் ஒருவர் என்பதே நான் அவரை எவ்வளவு விரும்புகிறேன் எனச் சொல்லும். இன்னும் நிறையக் கேள்விகள் கேட்க முடியாமல் போன வருத்தம் இருக்கிறது. கூடிய சீக்கிரம் அதை நிவர்த்தி செய்யவேண்டும்.


நன்றி,
பிரசன்னா


By Haranprasanna, at Sat Jun 04, 07:18:06 AM IST  


A very special and unparrellel event. This record is extremely interesting and exclusive because of the participants reviews along with after comments.
-Srinivasan Natarajan.


By Anonymous, at Sat Jun 04, 10:53:26 PM IST  


I hope it is very "Hot" in chennai.
Expecting some more meetings like this...
Desikan You have become thin ...
I missed this very much.


By Anonymous, at Sun Jun 05, 09:30:20 AM IST  


Desikan, did you capture the audio during the get together?


By புலம்பல்ஸ், at Sun Jun 05, 10:04:46 AM IST  


¿¡õ º¢Ä §À¨Ã ´ÕӨȡÅÐ À¡÷òÐô §Àº §ÅñÎõ ±ýÚ ¾Åõ ¸¢¼ô§À¡õ. ¬É¡ø §¿Ã¢ø «ó¾ Å¡öôÒ ¸¢ðÎõ ¦À¡ØÐ Å¡÷ò¨¾¸û ¦ÅÇ¢§Â Åà «¼õÀ¢ÊìÌõ. þó¾ì ¸ÄóШá¼Ä¢ø ¸ÄóÐì ¦¸¡ñ¼ «¨ÉÅÕìÌõ þÐ ²üÀðÊÕ츢ÈÐ ±ýÚ ¿¢¨É츢§Èý.


By மஞ்சூர் ராசா, at Sun Jun 05, 06:14:59 PM IST  


தேசிகன்.. மற்றும் பங்குகொண்டவர்களே,


நல்ல பதிவு. அப்படியே படங்களில் யார் யார் இருக்கிறீர்கள் என ஒரு குறிப்பும் கொடுத்தால் நன்று.


- அலெக்ஸ்


By Alex Pandian, at Mon Jun 06, 01:35:20 PM IST  


Avial suvaiyaaga irundhudhu


By Uma, at Mon Jun 06, 05:36:00 PM IST  


சே, இது ரொம்ப அநியாயம். இதுக்காகவே சென்னைக்கு ஜாகையை மாத்திக்கலாமான்னு இருக்கு.


ஆனாலும் படிச்சதும் நானும் அங்கே ஒரு சேர்ல உட்கார்ந்துட்டுத் தான் இருந்தேன்னு இருந்தது.


தேசிகன்... அவர்கிட்ட சொல்லிடுங்க... நாங்கல்லாம்(நானும் என் நான்கு ஒன்று விட்ட அக்காக்களும்) தமிழ் மீடியம், விடாமல் குமுதம், விகடன் படிப்போம். என் ஒன்றுவிட்ட அண்ணா டான்பாஸ்கோ சரக்கு. தமிழ் தடுமாறும் தடுமாறும் அப்படித் தடுமாறும். தமிழ் மார்க்கு வர்ற வரைக்கும் பேயறஞ்ச முகம். அப்புறமும் தான்.


அவனுக்கு திடீர்ன்னு எதோ ஒரு வெறி வந்து எண்பதுகளில் அத்தனை சுஜாதா புத்தகங்களும் லெண்டிங் லைப்ரரியில் எடுத்து படிக்க ஆரம்பித்திருந்தான். எங்களுக்கும் கொடுக்க சொன்னால் நீங்கள் வீணாக்கிற நேரத்தில் நான் இன்னொரு புத்தகம் படித்து விடுவேன் என்பான். காசு வேற பிரச்னை. படிக்க படிக்க புத்தகம் மூடிப் போனால் விட்ட இடத்தை தேடிக் கண்டு பிடிக்கவே அவனுக்கு ஒரு மணி நேரம் ஆகும். அவ்வளவு தமிழ் ஞானம். ஆனாலும் எல்லாம் படித்திருக்கிறான். நான் அன்றைக்கு அங்கிருந்தால் இதைச் சொல்லியிருப்பேன் என்று படிக்கும் போது தோண்றியது.


நிர்மலா.


By Nirmala, at Mon Jun 06, 07:41:17 PM IST  


அவரின் வீச்சின் ஆழமும் அகலமும் பிரமிப்பையூட்டுவன.


அவரின் time management பற்றி நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.


By Dharumi, at Wed Jun 08, 10:08:14 AM IST 

சுஜாதாவுடன் ஒரு கலந்துரையாடல்-0 2

ராம்கி,(சில சமயம் ரஜினி ராம்கி), வயது 29. சென்ட்ரல் எக்ஸைஸில் இருக்கிறார். http://rajniramki.blogspot.com.


 சுஜாதாவின் வருகைக்காக உட்லண்ட்ஸ் வாசலில் காத்திருந்த நேரத்தில் மனதில் தோன்றியது இதுதான். சுஜாதா எழுதாத விஷயங்கள் எதைப்பற்றி. 'அதுக்கு முதல்ல அவரு எழுதின எல்லாத்தையும் படிச்சிருக்கணும்டா மவனே' மனசாட்சியின் குரலை அலட்சியம் பண்ணாமல் கூட்டத்தோடு கூட்டமாய் அடக்கி வாசிக்கலாம் என்று முடிவெடுத்த நேரத்தில்தான் சரியாக ஆறு மணிக்கு காரில் வந்து இறங்கினார். எப்போதும் எக்கனாமிக் டைம்ஸ் படிக்கும் எதிர்வீட்டு மாமாவை ஞாபகப்படுத்தும் தோற்றம். நடையில் மட்டும் நிறையவே தாத்தாக்களை. வெளிச்சமில்லாத இடத்தில் பக்கத்து சீட் ஹிந்தி ஆசாமிகளின் கூச்சல்களுக்கு நடுவே ரவுண்டு கட்டி உட்கார்ந்து பேசுவது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது. பாக்கெட் நாவலின் கடைசி பத்து பக்கங்களில் வரும் கேள்விகளைப் போல 'ஸார், நீங்க வஸந்தா, கணேஷா'ன்னு நம்ம ஸ்டைலில் கேட்டு பூஜையை போட்டுவிடலாமான்னு நினைத்த நேரத்தில் அவரே ஆரம்பித்தார், கொஞ்சம் கனமான விஷயத்தில். நுழைவுத்தேர்வு குளறுபடிகளை பற்றி ஏ.சி ரூமில் உட்கார்ந்து பேசி அரசாங்கத்தை நொந்து கொள்வதோடு பேச்சு நின்றுவிடுமோ என்று நினைக்க ஆரம்பித்த நேரத்தில் அதற்கான ரெமிடியைப் பற்றியும் பேச ரெடியானார்.


இரண்டு மாதத்திற்கு முன்பு இன்காம் டாக்ஸ் ஆபிசுக்கு லெக்சர் கொடுக்க வந்தபோது உட்கார சீட் இல்லாமல் தூண் ஓரமாக நின்று கொண்டே கவனித்தது ஞாபகத்திற்கு வந்தது. பரவாயில்லை, இப்போது நேருக்கு நேர் கண்ணைப் பார்த்து பேசவும் குறுக்கே கேள்வி கேட்டு பதில் வாங்கவும் முடிந்திருக்கிறது. மூன்று பக்க இன்கம்டாக்ஸ் ரிட்டர்னை ஒரே பக்கத்தில் வருவது மாதிரி 'கற்றதும் பெற்றது'மில் ஒரு சாம்பிள் கொடுத்திருந்தார். இன்கம்டாக்ஸ் கூட்டம் முடிந்து கேஷ¥வலாக அடிஷனல் கமிஷனர் தோள் மேல் கைபோட்டு டாக்ஸ் சிம்பிளிபிகேஷன் பற்றி சளைக்காமல் பேசியதற்கு ஏதாவது புண்ணியமிருக்கும் என்றெல்லாம் எதிர்பார்ப்பது கொஞ்சம் ஓவர்தான். இருந்தாலும் ஊதற சங்கை ஊதி வைப்போமேன்னு அவர் கொடுத்த ஐடியாவெல்லாம் புருவத்தை பெரிசாக்கின விஷயங்கள்.


சினிமாக்காரர் என்கிற சுஜாதாவின் முகமும் நிறைய கேள்விகளை கேட்க வைக்கிறது. ப்ரியா, காயத்ரி, நினைத்தாலே இனிக்கும் பற்றியே நண்பர்கள் அதிகமாக கேட்டதன் காரணம் அறியேன். (ரோஜா, விக்ரம், பம்பாய் பத்தியெல்லாம் ஏன் யாரும் கேள்வி கேட்க மாட்டேங்கிறாங்க!) நினைத்தாலே இனிக்கும் சரியாக போகததற்கு அவர் சொன்ன காரணங்களும் பொருத்தமாகத்தான் இருந்தன. விமர்சனத்தில் அவரோட பெயரை சொல்லலைன்னு கோபித்துக்கொண்டவர்களுக்கு ஒரு நற்செய்தி. கதைதான் சுஜாதாவாம். திரைக்கதை அனந்து பண்ணியதாம்! மும்பை எக்ஸ்பிரஸ் பற்றிய விமர்சனத்தோடும் அந்நியன் பற்றிய எதிர்பார்ப்புகளுடனும் சினிமா செஷன் முடிந்தது.


சுஜாதாவின் தொடர்கதைகளை பற்றி அவரிடம் ஒரு மணி நேரத்திற்குள் பேசிவிடமுடியுமா என்கிற தயக்கமே என் வாயை அடைத்துவிட்டது. நினைவு தெரிந்த நாள் ஊர் உலகத்தில் எழுத்தாளர் என்றாலே அது சுஜாதா மட்டும்தான் என்று நினைத்துக்கொண்டிருந்த ஜாதி நான். அதிகம் பேசாமல் கவனிக்க ஆரம்பித்தபோதுதான் ஒரு ஆச்சர்யம். இந்த வயதிலும் தன்னுடைய எல்லா சிறுகதைகளையும் ஞாபகத்தில் வைத்திருக்கிறாரே!


சுஜாதா சொன்ன இரண்டு விஷயங்கள் முக்கியமானவை.


1. நிறைய படிக்கவேண்டும். படிப்பது என்றால் நாம் எழுதியது, அடுத்தவர் எழுதியது என்றெல்லாம் வகை தொகையில்லாமல் படிக்கவேண்டும்
2. காட்டமான விமர்சனங்களுக்கான பதிலடியை படைப்புகளின் மூலமாகத்தான் சொல்லவேண்டும்; பகிரங்கமாக அல்ல.


சுஜாதாவை படிப்பவர்களுக்கு போரடிப்பதில்லை. பலரை படிக்க வைத்துக்கொண்டிருக்கிறார். நிறைய பேரை எழுத வைத்துக்கொண்டிருக்கிறார். தமிழில் சுஜாதாவுக்கு மட்டும் ஏகலைவன்கள் அதிகம். புதிதாக எழுத வருபவர்களை ஊக்கப்படுத்தவேண்டும் என்ற பிரசன்னாவின் கருத்தையே நானும் வழிமொழிந்தேன். சுஜாதாவை அழைத்து வந்ததுமில்லாமல் போண்டோவையும் காபியும் வாங்கிக்கொடுத்த தேசிகனை பாராட்ட ஓடுவதற்குள் மற்றவர்கள் முந்திக்கொண்டார்கள்.


1994-1996 வருஷம். அதிகமாக வாசகர் கடிதங்கள் எழுதிக்கொண்டிருந்த காலம். குமுதம் அப்போதெல்லாம் வாராவாரம் 'புதுசு கண்ணா புதுசா'ன்னு ஏதாவது ஒரு தினுசில் வரும். இலக்கியத்திலிருந்து ஏ ஜோக்ஸ் வரை எல்லாமும் இருக்கும். 1994 வருஷம் குமுதத்திற்காக சுஜாதா, ரஜினியை சந்தித்தது பத்திரிக்கை பேட்டி விஷயத்தில் சத்தியமாய் ஒரு மைல்கல். இயல்பான உரையாடலாக ஆரம்பித்து ரஜினி சம்பந்தப்பட்ட எல்லாவற்றையும் சொன்ன சந்திப்பு. ரஜினியுடன் நானே உட்கார்ந்த மாதிரியான உணர்வை தந்த சந்திப்பை ஞாபகப்படுத்தி என்னுடைய புத்தகத்தையும் கொடுத்தேன். ரஜினி பற்றி ஒரு புத்தகமா என்கிற ஆச்சரியத்தோடு வாங்கிக்கொண்டார். ம்...வந்ததுக்கு தண்டனை!


 * - * - *
சுரேஷ்கண்ணன், ஸ்வஸ்திக், விளம்பரத்துறை, வயது 31 இருக்கலாம். http://pitchaipathiram.blogspot.com


சுஜாதா என்கிற எழுபது வயது இளைஞர் சுஜாதா, கணையாழியின் கடைசிப் பக்கங்களில் எழுதும் போது, தன்னை வந்து சந்திக்கும் வாசகர்களைப் பற்றி குறிப்பிட்டு விட்டு இவ்வாறு எழுதினார்: 'எனது உண்மையான வாசகர்கள் என்னை வந்து சந்திப்பதில்லை'.


எனக்கு இதில் உடனே உடனே உடன்பாடு ஏற்பட்டது. ஏனெனில், ஒரு சிறந்த படைப்பாளி தன்னுடைய படைப்புகளிலேயே தாம் தீவிரமாக நம்புகிற கருத்துக்களையும், எண்ணங்களையும் முழுமையாக எந்த வித உபகேள்விகளுக்கும் இடமில்லாமல் மிக நேர்மையாக எழுதி விடுகிறார். ஆக அந்தப் படைப்பாளி எழுதியதையே நாம் முழுவதையும் உள்வாங்கிக் கொண்டால் அது போதுமானதாக இருக்கும். அதை விட்டு, அந்தப் படைப்பாளியை சந்தித்து அபத்தமாக உரையாடுவது, ஆட்டோகிராப் வாங்குவது போன்றவை, 'நான் அந்த எழுத்தாளரை சந்தித்தேன்' என்று ஜம்பமடிப்பதற்கு உதவுமே தவிர வேறொன்றிற்குமில்லை. ஆனால் படைப்பாளி எழுதின வட்டத்தையும் தாண்டி சிந்தித்து தனது ஐயங்களை அவரிடம் தெளிவுபடுத்திக் கொள்ள முயலும் வாசகர்கள் அரிதானவர்கள்; இந்த நிலையிலிருந்து விதிவிலக்கானவர்கள்.


இந்த காரணத்திற்காகவே, நான் பொதுவாக எந்த எழுத்தாளரையும் சந்திக்க முயல்வதில்லை, என் வாசகப் பயணத்தை நல்லதொரு திசையில் மாற்றியமைத்த மற்றும் என் மிகுந்த அபிமானத்திற்குரிய சுஜாதா உட்பட.


()


ஆனால் கடந்த வாரத்தில் ஒரு நாள் பிரசன்னா தொலைபேசியில் "நண்பர் தேசிகன் மூலமாக எழுத்தாளர் சுஜாதாவை சந்திக்கலாமென்றிருக்கிறோம். நீங்கள் சுஜாதாவின் படைப்புகளில் மிகுந்த பிரேமை கொண்டிருக்கிறவர் என்று நான் அறிவேன். நீங்களும் வருகிறீர்களா?" என்று அழைத்த போது வந்த சந்தர்ப்பத்தை தவற விட வேண்டாமே என்று உடனே ஆர்வத்துடன் ஒப்புக் கொண்டேன்.


28.05.2005. மாலை ஆறு மணி. உட்லண்ட்ஸ் டிரைவ்-இன் ரெஸ்டாரண்ட்.


இதுவரை புகைப்படங்களிலும், நூல் வெளியீட்டு விழாக்களில் தூரமாக நின்று மட்டுமே பார்த்திருந்த சுஜாதா, தனது அசாதாரணமான உயரம் காரணமாக சற்று குறுகினாற் போல் தளர்ச்சியாக நடந்து வர, 'இவரிடம் என்ன கேள்வி கேட்டு, என்னத்த பதில் சொல்லப் போகிறார்' என்று ஆயாசமாக இருந்தது. கற்றுக் கொடுத்தவர்கள் அனைவரும் ஆசான்கள் எனில் சுஜாதா எனக்கு முக்கியமானதொரு ஆசான். எழுத்துலகில் துரோணரைப் போல் திகழும் அவரின் பல்லாயிரக்கணக்கான ஏகலைவன்களில் நானுமொருவன். பதிலுக்கு சுஜாதா, நல்ல வேளையாக கட்டை விரலையெல்லாம் கேட்காமல், தன்னுடைய மெத்து மெத்தான ஐந்து விரல்களையும் மென்மையான புன்னகையுடன் என்னிடம் நீட்டினார். "நான் சுரேஷ் கண்ணன்" என்று சந்தோஷத்துடன் அறிமுகப்படுத்திக் கொண்டேன்.உணவகத்தின் குளிர்பதனம் செய்யப்பட்ட அறையில் ஆரம்பித்தது எங்கள் அரட்டைக் கச்சேரி. நாங்கள் ஐந்து பேர். நான், பிரசன்னா, ராஜ்குமார், ரஜினிராம்கி, ராமச்சந்திரன் உஷா. எங்களை உரையாடவிட்டு பக்கத்தில் அமைதியாக அமர்ந்திருந்த தேசிகன். (இகாரஸ் பிரகாஷ், சுவடுகள் ஷங்கர், ஷங்கர் கிருபா, பிரதீப் போன்றோர் பிற்பாடு வந்து இணைந்து கொண்டனர்)


ஒரு சிறிய ராணுவ பட்டாலியன் போல் சுஜாதாவை நோக்கி கேள்விக் குண்டுகளை சரமாரியாக நாங்கள் எறிய, நிறைய பேசுவாரோ மாட்டாரோ என்கிற என் தவறான அனுமானத்தையெல்லாம் தூள்தூளாக்கும் வகையில் அனுபவம் மிகுந்த ராணுவ தளபதி போல் எங்கள் கேள்விகளை அனாயாசமாகவும், உற்சாகமாகவும் புன்னகையுடனும் எதிர்கொண்டார் சுஜாதா என்கிற அந்த 70 வயது இளைஞர். ஒரு திட்டமிட்ட உரையாடலாக இல்லாமல், நட்புடன் கூடிய கலந்துரையாடலாக இருந்தது அது. எங்களில் பெரும்பாலானோர் அவரை முதன் முறையாகப் பார்ப்பதினால் ஆர்வத்துடன் ஒருவரையொருவர் முந்திக் கொண்டு பல கேள்விகளை முன்வைத்தோம். பல்வேறு ரசனை கொண்ட குடும்ப உறுப்பினர்கள், தொலைக்காட்சியில் தங்களுக்குப்பிடித்த சேனல்களை மாற்றி மாற்றி அமைப்பது போல் இருந்தது அது.இதில் நான் கேட்ட கேள்விகளை மட்டும் தொகுத்தளித்துள்ளேன். சுஜாதா பேச்சு மொழியில் கூறிய பதில்களை நான் உரைநடைத்தமிழில் இடங்களில் மாற்றியமைத்துள்ளேன். இதில் ஏதேனும் கருத்துப் பிழைகளிருந்தால், அது என் தவறாக இருக்கக்கூடும்.


"இந்த போண்டா ரொம்ப புஷ்டியாயிருக்கிறதே" என்கிற சுஜாதா பிராண்ட் நகைச்சுவையுடன் ஆரம்பித்த அந்த உரையாடலில் இருந்து சில முக்கியமான பகுதிகள்.()உரையாடல் இயல்பாக இன்றைய கல்வித்துறையின் போக்குகளில் இருந்து ஆரம்பித்ததால், என் முதல் கேள்வி:


சுரேஷ் கண்ணன்: "இன்றைக்கு பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை ரேஸ் குதிரைகள் போல் வளர்க்கின்றார்கள். இன்றைய தேதியில் கல்வி என்பது அடித்தட்டு மக்கள் நுழைய முடியாதது போல், வாங்க முடியாத luxury பொருள் போல் ஆகி விட்டதே? இதனால் கிராமப் புறங்களில் உள்ள மாணவர்கள், அவர்கள் விரும்பிய படிப்புக்களை படிக்க முடியாமல், ஏதோவொரு கிடைத்த துறைப் படிப்பை படிக்க வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகியிருக்கின்றார்களே?"சுஜாதா: "இடஒதுக்கீட்டின் மூலம் பின்தங்கிய மக்களும் விரும்பிய படிப்பை படிக்கிற வாய்ப்பு இருந்தாலும், துரதிர்ஷ்டவசமாக திறமையற்ற நிர்வாகத்தின் காரணமாகவும், சில மேல்தட்டு மக்கள் முறையற்ற வழிமுறையில் அந்த வாய்ப்பை குறுக்கு வழிகளில் பயன்படுத்துவதாலும் இந்த நிலை ஏற்படுகிறது."சுரேஷ் கண்ணன்: "பாலகுமாரன் தன் முன்கதைச் சுருக்கத்தில் 'சுஜாதா தனக்கு சிறுகதை எழுதுவதற்கான வழிமுறைகளை சொல்லித் தந்தார்' என்று குறிப்பிட்டிருக்கிறார். எழுதுவதில் ஆர்வமுள்ள நாங்களும் அதே கேள்வியை இப்போது உங்கள் முன்வைத்தால் உங்கள் பதில் என்னவாக இருக்கும். அதேதானா? அல்லது updated-ஆன விஷயங்கள் ஏதேனும் உள்ளதா?"


சுஜாதா: "கதையை முதல் வரியிலேயே ஆரம்பித்து விடுங்கள். இதுதான் நான் அவருக்கு சொன்னது. வேறொன்றுமில்லை"


சுரேஷ் கண்ணன்: "உங்கள் சிறுகதையில் எனக்கு பிடித்தது 'பிலிமோத்ஸவ்' "


சுஜாதா: "அப்படியா?


சுரேஷ் கண்ணன்: நீங்கள் பல சிறுகதைகளை எழுதியிருந்தாலும் பெரும்பான்மையினர் தங்களுக்கு பிடித்ததாக கூறும் சிறுகதை 'நகரம்'. அதை நிதானமாக திட்டமிட்டு எழுதினீர்களா? அல்லது பத்திரிகைகளின் துரத்தல்களுக்கேற்ப அவசரமான மனநிலையில் எழுதினீர்களா?"


சுஜாதா: "மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த உறவினர் ஒருவரை பார்க்கச் சென்றிருந்த போது, அங்கு பார்க்க நேர்ந்த காட்சிகளின் தாக்கத்தில் உடனடியாக எழுதப்பட்ட கதை அது."


சுரேஷ் கண்ணன்: "இப்போது இணையத்தில் ஏறக்குறைய 500 பேர் வலைப்பதிகிறார்கள். பொதுவாக வலைப்பதிவுகளைப் படிக்கிறீர்களா? வலைப்பதிவுகளின் போக்கு எப்படி இருப்பதாக உணர்கிறீர்கள்?"


சுஜாதா: நிறைய வலைப்பதிவுகளப் படிக்கிறேன். சில பேர்களின் வலைப்பதிவை எழுத்துரு பிரச்சினை காரணமாக படிக்க இயலவில்லை. பத்ரி, தேசிகன் போன்றோர்களின் பதிவுகள் படிக்கமுடிகிறது. பொதுவாக வலைப்பதிவுகள் அனுமார் வால் போல் நீண்டு கிடக்கிறது. அரிதாக கிடைக்கிற தகவல்களை உள்ளடக்கியதுதான் ஒரு சிறந்த பதிவாக இருக்க முடியும்.


சுரேஷ் கண்ணன்: "நீங்கள் உங்கள் சிறுவயதில் எழுதிக் கொண்டிருந்த கையெழுத்துப் பத்திரிகைகளின் நவீனவடிவம்தானா இந்த வலைப்பதிவுகள்?"


சுஜாதா: "ஆம். நாங்கள் நடத்திய கையெழுத்துப் பத்திரிகையில் நாங்களே படம் வரைவோம். இதெல்லாம் எழுதுகிற ஆர்வமிருக்கிறவர்களுக்கு ஒரு outlet மாதிரித்தான்.


சுரேஷ் கண்ணன்: "ஆனால்... இப்போது வலைப்பதிவு எழுதுகிறவர்களில் சிலர், இதை outlet-ஆக பயன்படுத்தாமல் toilet-ஆக பயன்படுத்துவதுதான் பிரச்சினை."


(உரையாடல் இப்போது தமிழர்களின் ஆதார விஷயமாகிய சினிமாவின் பக்கம் திரும்புகிறது)


சுரேஷ் கண்ணன்: "பாய்ஸ் படத்திற்கு ஏன் அவ்வளவு எதிர்ப்பு? ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையில் நடத்திய, எதிர்கொண்ட விஷயங்கள்தானே அதில் இருந்தது?"


சுஜாதா: "அவர்கள் அதை திரையில் பார்க்க விரும்பவில்லை"


சுரேஷ் கண்ணன்: "ஒரு படத்தின் வசனங்கள் ஆட்சேபத்திற்குரியதாக இருக்கும் பட்சத்தில், யாரை நாம் திட்ட வேண்டும்? இயக்குநரையா? வசனகர்த்தாவையா?"


சுஜாதா: "ஒரு இயக்குநர்தான் படத்தின் எல்லாத்துறைகளுக்கும் பொறுப்பு. அவர் தீர்மானித்த பின்தான் அவை காட்சிகளில் இடம் பெறுகின்றன. மேலும் வசனகர்த்தா எழுதிய வசனங்கள் அப்படியே இடம் பெறும் என்கிறது கிடையாது. சம்பந்தப்பட்ட நடிகர்களும் தங்கள் சொந்த வசனங்களை பயன்படுத்துவார்கள். 'பாய்ஸ்' படத்தில் சில காட்சிகளில் விவேக் அதை செய்தார்"


சுரேஷ் கண்ணன்: உங்கள் சிஷ்யர்களில் ஒருவரான, பெங்களூர் இரவிச்சந்திரன் எனக்குப் பிடித்த எழுத்தாளர்களில் ஒருவர். அவர் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்?


சுஜாதா: அவர் இறந்து விட்டார். அவருக்கு நேர்ந்த சில அந்தரங்கப் பிரச்சினை காரணமாக தொடர்ந்து மதுவருந்தியதின் காரணமாக இறந்து போனார். நல்ல எழுத்தாளர்.


(நான் இதைக் கேட்டு திகைப்பும், அதிர்ச்சியும் அடைகிறேன். இந்தச் செய்தியை ஊர்ஜிதப்படாமல் இணைய நண்பர்கள் மூலம் ஏற்கெனவே கேள்விப்பட்டிருந்தாலும், சுஜாதா மூலமாக மிக உறுதியாக இந்தச் செய்தியை கேடக நேரும் போது வருத்தமாகவே இருந்தது. இந்த வருத்தம் சுஜாதா குரலிலும் எதிரொலித்தது)


சுரேஷ் கண்ணன்: "இன்றைக்கு மரபு தெரியாமலே பலர் கவிதை எழுத வந்து விடுகின்றனர். எனக்கு கவிதை என்கிற வடிவமே தொடர்ந்து பிடிக்காமலே இருக்கிறது. இதற்கு என்ன காரணமாக இருக்கும்? எனது முன்னோர்களின் ஜீன்களில் ஏற்பட்டிருக்கிற ஏதாவது குறைபாடா?" (சிரிப்பு)


சுஜாதா: "You may not come across several good poems" அதுதான் காரணம் என்று நினைக்கிறேன்.".


சுரேஷ் கண்ணன்: "இவ்வளவு பழைய விஷயங்களை ஞாபகம் வைத்துக் கொண்டிருக்கிற நீங்கள் ரம்யா கிருஷ்ணன் பெயரை மறந்து விட்டீர்களே?" (சிரிப்பு)


சுஜாதா: (சிரிப்பு)


சுரேஷ் கண்ணன்: "நீங்கள் ஆனந்த விகடனில் 70 ஆண்டு நிறைவையொட்டி எழுதியிருந்த கட்டுரை எனக்கு மிகவும் பிடித்திருந்தது"


()


நண்பர்களின் பல கேள்விகளுக்கு கிட்டத்தட்ட ஒன்றரை மணிநேரம் பதிலளித்த சுஜாதா 7.30 மணிக்கு தனது உரையாடலை முடித்துக் கொண்டார். மனமில்லாமல் நாங்கள் எழுந்து கொள்கிறோம். 'உங்களை ரொம்பவும் சிரமப்படுத்தி விட்டோமா' என்பதற்கு 'அதெல்லாம் இல்லை' என்கிறார். தேசிகனை அவர் 'என் சிஷ்யன்' என்று குறிப்பிட்ட போது, தேசிகன் மீது சற்று பொறாமையாக இருந்தது. நண்பர்கள் புகைப்படம் எடுத்துக் கொள்வதும், கையெழுத்து வாங்குவதுமாக இருக்கின்றனர். வழக்கம் போல் நான் ஒதுங்கி நிற்கிறேன்.


"இவ்ள நேரம் எங்களுக்கு பத்தலைங்க. என்சைக்ளோபீடியாவ ரெண்டு பக்கம் புரட்டிப் பாத்தா மாதிரிதான் இருக்குது. இன்னும் கூட நெறைய பேச வேண்டியிருக்கு. வந்ததுக்கு ரொம்ப நன்றிங்க" என்கிற எங்களுக்கு புன்னகையுடன் கையசைத்து விடைபெற்று காரில் ஏறிக் கொள்கிறார்.


()


இன்னும் சில விமரிசனப்பூர்வமான கேள்விகளை கேட்கலாமா, வேண்டாமா என்று தயங்கிக் கொண்டிருந்த நான், மகிழ்ச்சியும், சிரிப்பும் பொங்கி வழிந்த அந்த உற்சாகமான சூழ்நிலையை கெடுக்க விரும்பாமல் எனக்குள்ளேயே அந்த கேள்விகளை மூழ்கடித்துக் கொண்டேன். இன்னொரு வேளையில் பார்க்கலாம். நாங்கள் தயாரான கேள்விகளோடு மிகவும் முன்னேற்பாடோடு வந்திருந்தால் இந்தக் கலந்துரையாடல் இன்னும் சிறப்பாக வந்திருக்கும் என்று நம்புகிறேன். இந்தக் கலந்துரையாடல் எனக்கு அவ்வளவு திருப்திகரமாக இல்லை. சுஜாதா என்கிற அந்த பன்முக ஆளுமையிடமிருந்து இன்னும் நிறைய விஷயங்களை கேட்டிருக்கலாம்.பாலச்சந்தர், பாரதிராஜா, மணிரத்னம், ஷங்கர் என்று பல சினிமா ஜாம்பவான்களிடமும், பல துறையிலுமுள்ள அறிஞர்களோடும் புழங்கிய சுஜாதா, அவரோடு ஒப்பு நோக்கும் போது குஞ்சுகுளுவான்களாகிய எங்களோடு சரிக்கு சமமாக பேசுவாரா என்கிற தயக்கத்தையெல்லாம் உடைத்தெறிந்து விட்டார். சுஜாதா என்கிற அந்த எழுத்தாளரிடம்..... எழுத்தாளரை விடுங்கள்.... ரங்கராஜன் என்கிற அந்த எளிய மனிதரிடம் ஒன்றரை மணிநேரம் உரையாடிக் கொண்டிருந்தது ஒரு நிறைவான அனுபவமாக இருந்தது.


இந்த நிகழ்வை சாத்தியமாக்கிய நண்பர் தேசிகனுக்கு என் மனப்பூர்வமான நன்றிகள். (மனிதருக்கு அபரிதமான நகைச்சுவை உணர்ச்சியிருக்கிறது. நண்பர் ராஜ்குமார், தாம் பெரம்பூர், திரு.வி.க.நகரில் இருந்து வருவதாக கூறியவுடன் இவர் "நான் பெங்களூர்ல இருந்து வர்ற வழில பார்த்த ஊர் மாதிரியிருக்கே" என்று கிண்டலடிக்கிறார்)


இந்த மாதிரியான எழுத்தாளர்களுடன் கூடிய நிறைவான சந்திப்புக்கள் அடிக்கடி நிகழ நான் வணங்கும் இயற்கையை பிரார்த்திக்கிறேன்.

சுஜாதாவுடன் ஒரு கலந்துரையாடல்-0 1

சுஜாதாவுடன் ஒரு கலந்துரையாடல்


இந்த பதிவு கொஞ்சம் வித்தியாசமானது. ஒரு முறை சாவி உட்லேண்ட்ஸ் டிரைவினில் சுஜாதாவுடன் ஒரு கலந்துரையாடல் ஏற்பாடு செய்திருந்தார். அதன் பிறகு போன சனிக்கிழமை(28/5/2005) அன்று ஒரு கலந்துரையாடல் நடந்தது. இதில் ஹரன்பிரசன்னா, ராம்கி, சுரேஷ் கண்ணன், ஐகாரஸ் பிரகாஷ், ராஜ்குமார், உஷா, சங்கர், கிருபா ஷங்கர் கலந்துக்கொண்டார்கள். இந்த பதிவு இதில் கலந்துக்கொண்டவர்கள் எழுதியது. அவியல் போல் எல்லாம் இருந்தாலும் சுவையாக இருக்கும் என்று நம்புகிறேன்.


சிறுகதை, கவிதை, கணேஷ் வசந்த், கல்விமுறை, மீடியா டீரிம்ஸ், சங்கர், பாய்ஸ், சினிமா அனுபவம், அந்நியன், கமல், மும்பை எக்ஸ்பிரஸ், நாவல், எஸ்.ஏ.பி, வலைப்பதிவு என்று பல தலைப்புகள் போண்டா காப்பியுடன் பேசப்பட்டது. கலந்து கொண்டவர்கள் அனைவரும் எனக்கு எழுதியனுப்பிய அதே வரிசையில் இங்கு தந்துள்ளேன். எல்லோருக்கும் என் நன்றிகள். படங்கள் தந்து உதவிய ராம்கிக்கு ஸ்பெஷல் நன்றிகள்.* - * - *
பிரதீப்-ஃஸ்பாட் வேர் என்ஜினியர், வயது 26 - வலைப்பதிவு முகவரி - http://espradeep.blogspot.com/


சனிக்கிழமை இரவு வீடு வந்து சேர்ந்தேன். அம்மா கேட்டாள், என்ன? சுஜாதாவை பார்த்தியா? என்ன சொன்னார்? நான் சொன்னேன்: வாப்பா பிரதீப், எங்கே நீ வராம போயிடுவியோன்னு பயந்துட்டேன். உன்னை பாக்கனும்னு எத்தனை நாளா காத்துண்ட்ருக்கேன்னார். என்னை
பார்த்ததும் தான் அவருக்கு ஒரு தனி தெம்பே வந்தது. தமிழ் இலக்கியத்தையே தூக்கி நிறுத்தப் போறவன் நீ தானேப்பான்னார். அம்மா அப்பாவியாய் நெஜம்மாவா என்றாள்? சரி, எதற்கு இத்தனை அழிச்சாட்டியம்? ஆமாம் போனவார சனிக்கிழமை சுஜாதாவைப் பார்த்தேன். போனவார சனிக்கிழமை தனிப்பெருமை கொண்டது என்னைப் பொருத்தவரை! உட்லேண்ட்ஸ் ட்ரைவின்னில் ஒரு சின்ன கூட்டம். ஏஸி ரூமில் இருக்கோம், வா என்று தேசிகன் சொன்னவுடன் வெளியே இருந்த எனக்கு குளிரத் தொடங்கியது. உள்ளே நுழைந்ததும் எதிரில் அமர்ந்து எல்லோரும் பேசிக் கொண்டிருந்தார்கள். நெஞ்சிலிருந்து ஏதோ ஒன்று உருண்டு வயிற்றுக்குள் சென்றதைப் போன்ற உணர்வு. தேசிகன் என்னை அவருக்கு அறிமுகப்படுத்தினார்.


கதை, கவிதை, சினிமா, என்று பல்வேறு கோணங்களில் பல்வேறு முகம் கொண்டவரிடம் பேசினோம். அங்கு வந்திருந்தவர்களில் சுஜாதாவை ரொம்ப கம்மியாய் படித்தவன் நான் தான் என்று நினைக்கிறேன். தமிழில் மனப்பாடப் போட்டிக்கு செய்யுளை ஒப்பிப்பது போல் எல்லோரும் அவருடைய கதைகளையும் கட்டுரைகளையும் ஒப்பித்துக் கொண்டிருந்தனர். நான் ஆ என்று வாய் திறந்து கேட்டுக் கொண்டிருந்தேன். நல்ல வேளையாக போண்டா வந்ததால், அதை என் வாயில் போட்டு அடைத்துக் கொண்டேன். என் வாய் போண்டா சாப்பிட என் கண்கள் அவரை சாப்பிட்டுக் கொண்டிருந்தன. என் வாழ்நாளில் என்னை இப்படி யாராவது ஒரு நாளாவது பார்ப்பார்களா?


எழுதனும்னா நிறைய படிக்கனும்..அது தான் ரொம்ப முக்கியம் கவிதை - unwritten lines இருக்கனும் deadline இல்லைன்னா என்னால எழுதி இருக்கவே முடியாது அந்நியன் நல்லா வந்திருக்கு எழுத்தாளரின் மனைவியாய் இருப்பது கஷ்ட ஜீவனம் அவர் பேசியதில் கொஞ்சம்..


நாங்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே அங்கு எங்களை மாதிரி போண்டா, இல்லை காப்பி சாப்பிட வந்தவர் இவர் சுஜாதா தானே என்று எங்களிடம் அனுமதி கேட்டு அவரை இன்னும் கொஞ்சம் படுத்தினார். நீங்கள் 50 வயதுக்குப் பிறகுன்னு சமீபத்துல எழுதுன கட்டுரை அருமை என்றார். நாங்கள் எல்லோரும் கொதித்துப் போய் அது 70 வயதுக்கு மேல் என்றோம். என் பேரை ஞாபகம் வச்சுக்குங்க சார், இது கொஞ்சம் uncommon name என்று சகாயமோ, ஏதோ ஒன்றை சொன்னார். சுஜாதா i will remember என்றார். பிரபலம் என்றாலே ப்ராப்ளம் தான் போலும். பாவமாய் இருந்தது.


இப்படி ஒரு அற்புதமான மாலைப் பொழுதை வழங்கிய தேசிகனுக்கு பெங்களூரில் அவர் ஆபிஸ் போகும் வழியெல்லாம் ட்ரா·பிக் குறையட்டும்.


 


* - * - * - *
Poet ராஜ்குமார் - வயது 32 இருக்கலாம். NIIT-இல் வேலை பார்க்கிறார். மார்க்கெட்டிங் மானேஜர். வலைப்பதிவு முகவரி -http://poetraj.blogspot.com


எழுத்தாளர் சுஜாதாவுடன் இரண்டு மணிநேரம் -
பல ஆண்டுகளாக நிறைவேறாத ஒரு கனவு- தேசிகனின் உபயத்தில் நிறைவேறியது. மூன்று முறை நேரில் பார்த்தும் மலைப்பின் மிகுதியில் பேச தைரியம் வராத ஒரு நபரை, இரண்டு மணி நேரம் பார்த்து உரையாட வழிவகை செய்த தேசிகனுக்கு மனமார்ந்த நன்றிகள். கிட்டத்தட்ட எட்டு வலைப்பதிவாளர்கள், அனைவரும் வெவ்வேறு துறைகளில் பணிபுரிபவர்கள். வித்தியாசமான சிந்தனையோட்டம் உடையவர்கள். ஆனால் அனைவருக்கும் பொதுவான அம்சமாக இருந்தது -எழுத்தாளர் சுஜாதாவின் மீதுள்ள அபிமானம் மட்டுமே.


கிட்டத்தட்ட அனைவருமே சுஜாதா என்ற படைப்பாளியுடன் விவாதிக்க வேண்டும் என்ற மனநிலையில் இல்லாமல், ஒரு தெய்வத்தை/அல்லது சக்தி பொருந்திய ஆன்மீகப் பெரியவரை சந்திக்கும் பக்த மனோநிலையுடன் வந்தது போலத்தான் தோன்றியது. என்னுடைய மனநிலையும் அதேதான்.இவரைப் போல் அனுபவித்து வாழ்க்கை வாழ யாரால் முடியும்? அப்படியே வாழ்ந்தாலும் தலைமுறைகளும் கடந்து ரசிக்கும் மாதிரி எழுத யாரால் இயலும் என்ற வியப்பே இதயத்தில் மேலோங்கி இருந்தது.


மிக இயல்பாக உரையாடலை துவக்கி வளரச் செய்ததில், முக்கியபங்கு சுஜாதா சாரையே சேரும். பொறியியல் மற்றும் மருத்துவக் கல்வியின் இன்றைய நிலையைப் பற்றி உரையாடல் துவங்கியது. பொறியியல் மற்றும் மருத்துவம் படித்தால்தான் வாழ்க்கை என்ற உணர்வை மாற்றி பிற துறைகளையும் பயில மாணவர்கள் முன் வர வேண்டும் என்பதை சுஜாதா விரும்புகிறார். இணைய நண்பர் உக்ஷ¡வின் மகள் தேசிய சட்டக் கல்லூரியில் படிக்க விரும்பி, குஜராத் கல்லூரியில் இடம் பெற்றிருப்பதைஆச்சரியத்துடன் பாராட்டினார்.


அனவரும் தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலையை யாசிக்கும் இத்தருணத்தில் மற்ற பொறியியல் துறைகளின் ( எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல்) இன்றைய அவசியமும் தேவையும் என்ன ? என்று வினவியபோது, கல்வியின் தேவையையே நாம் மறுபரீசலனை செய்ய வேண்டியுள்ளது எனக் குறிப்பிட்டார். அறிவை விருத்தி செய்ய கல்வி என்பதலிருந்து தடம் புரண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.


அன்னியன் இந்தியன் பார்ட் 2 - மல்டி பெர்சனாலிட்டி டிஸ்ஆர்டர் குறித்த கதை என்றார். மும்பை எக்ஸ்பிரஸ்ஸை சற்று தாமதமாக பார்க்க நேரிட்டதாகவும், சற்று முன்னதாக பார்த்திருந்தால் கமலுக்கு சில ஆலோசனைகள் வழங்கியிருக்கலாம் என்றும் கூறினார். இக்கதையின் பிரதானமாக குழந்தையை கடத்துவதும் அதில் ஆள்மாறாட்டம் நிகழ்வதும் அமைந்திருக்க வேண்டும், ஆனால் கமல் 30 அடி உயர கிரேனில் நடப்பதும், குரங்கு அதை இயக்குவதும் பிரதானப்படுத்தப்பட்டுவிட்டது என்றார். கதையை பசுபதி, வையாபுரி ஆகியோர் கடத்தல் குறித்து திட்டமிடுவதிலிருந்து துவக்காமல் எடுத்தவுடனே கடத்தலை காண்பித்திருந்தால் சுவையாக இருக்கும் என்றார். ரோஜா, அபூர்வ சகோதரர்கள் போன்ற படங்களின் ஒரு சம்பவத்தை முன்னிலைப் படுத்திய ஆரம்பத்தைப் பார்க்கும் போது உண்மைதான் என்றுதான் தோன்றுகிறது.


ஆரம்பகால பட அனுபவங்களை குறித்து பேசிக்கொண்டிருந்தோம். உங்களுடைய படமாக்கப் பட்ட கதைகளில் நினைத்தாலே இனிக்கும் மட்டும் கதை வடிவில் பத்திரிக்கைகளில் வந்ததில்லை. மற்ற கதைகளை எவ்வாறு சிதைத்தார்கள் என்பது வாசகர்களுக்கு தெரியும். நினைத்தாலே இனிக்கும் படத்தை படமாக்கியது குறித்த உங்களது கருத்து என்ன? என்று கேட்டோம். ஒரு படம் எவ்வாறு உருவாக்கக் கூடாது என்பதற்கு நினைத்தாலே இனிக்கும் படம் ஒரு உதாரணம் என பதிலளித்தார். திட்டமிடாமல் படம் பிடிக்க சிங்கப்பூர் சென்று கால விரயமும், நடிகர்களின் கால்க்ஷ£ட் விரயமும் செய்து, பின்பு சென்னை வந்து கதையை மாற்றச் சொன்னதாக குறிப்பிட்டார். போதாக்குறைக்கு பாலச்சந்தர் அக்காலக் கட்டத்தில் இந்தியா வந்த அபா குழுவினால் கவரப்பட்டு நிறைய பாடல்களை படத்தில் சேர்த்துவிட்டார் என்றும், தாம் எழுதிய ஸ்கிரிப்ட் சிங்கப்பூரில் விறுவிறுப்பான சம்பவங்கள் நடைபெறும் ஸ்கிரிப்ட் என்றும் கூறினார். அதை ஒரு கதையாக தற்போது வெளியிடலாமே? என்று கேட்டோம். ஸ்கிரிப்ட் அனந்துவிடம் கொடுத்தது திருப்பி வாங்கவில்லை என்று கூறினார்.


நீங்கள் நிறைய எழுதும் காலக்கட்டத்தில் உங்களுக்கு ஆதரவு அளிக்க சாவி போன்ற ஆசிரியர்கள் இருந்தார்கள். தற்போது அது போன்ற ஆசிரியர்கள் இருக்கிறார்கள் என நினைக்கிறீர்களா? அவ்வாறில்லாதபோது உங்களைப் போன்ற எழுத்தாளர்கள் உருவாகுவதற்கு வாய்ப்புள்ளதா? என்று கேட்டோம். அதற்கு அக்காலத்தில் சாவியும், மணியனும் பத்திரிக்கைகளின் சர்குலேசன் உயர்த்த ஒரு டார்கெட் வைத்திருந்தாகவும், அதனால் தான் எழுதிய படைப்புகளை கண்ணைமூடிக் கொண்டு பிரசுரித்தாகவும் குறிப்பிட்டார். இதனை எந்தவித நெகடிவ் கனோடேசனுடனும் குறிப்பிடவில்லை. மேற்கொண்ட ஆசிரியர்கள் அளித்த எழுத்துச் சுதந்திரத்தைதான் சுஜாதா அவரது பாணியில் குறிப்பிட்டார் என நினைக்கிறேன்.


காலக் கெடு வைத்து படைப்புகள் படைப்பதில் தனக்கும் சங்கடம் உண்டு என்பதை ஒத்துக் கொள்கிறார். ஆனாலும் அனைத்துப் பத்திரிக்கைகளும் தன் படைப்புக்களை வேண்டி நின்ற அக்காலக்கட்டத்தில், சில பரிசோதனை முயற்சிகளையும் செய்ய முயன்றது எனக் கூறினார். தான் எழுதியதிலே, தனக்குப் பிடித்த படைப்பாக "ஒரே ஒரு துரோகம்" கதையை குறிப்பிட்டார். "கறுப்பு சிவப்பு வெளுப்பு' கதை குமுதத்தில் ஒரு சமூகத்தாரின் எதிர்ப்பால் நிறுத்தப்பட்டதும் , அதே கதையைத்தான் தலைப்பை மாற்றி " ரத்தம் ஒரே நிறம்" என்று எழுதியதாக தெரிவித்தார்.


எண்பதுகளில் பலநடுத்தரக் குடும்பங்களுக்கு தொழில்நுட்பம், கல்வி குறித்த விழிப்புணர்வையும், ஆசைகளையும் உங்கள் படைப்புக்கள் ஏற்படுத்தின. என்னுடைய கல்லூரி புரபசர் "பிரிவோம் சந்திப்போம்" படித்து எம்.பி.ஏ. படித்தாராம் .இத்தகைய தாக்கங்களை உங்களது படைப்புக்கள் ஏற்படுத்தின என்று கூறினேன். சுஜாதா புன்னகையுடன் ஆமோதித்தார். தற்போது காலக்கட்டங்கள் மாறிவிட்டன. மீடியாவின் தாக்கம் அதிகரித்து விட்டது என்று கூறினார்.


தாங்கள் ஒரு பத்திரிக்கை ஆரம்பிக்கலாமே என்று கேட்டதற்கு பத்திரிக்கை ஆரம்பிப்பது சினிமா எடுப்பது போல என்று கூறி புன்னகைத்தார். ஜெயாகாந்தனைப் பற்றி கேட்டதற்கு அவர் முன்பிருந்தே இவ்வாறுதான் பேசி வருகிறார். தற்போது வியப்படைய ஒன்றுமில்லை என்று குறிப்பிட்டார்.


நல்ல கவிதை என்பதற்கான வரையறை என்ன? என்று கேட்டதற்கு கவிதையில் எழுதாத வரிகள் ( unwriiten lines) வாசகன் உணரும் வண்ணம் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். சில கவிதைகள் எனக்கு புரியவில்லையே என்று சக நண்பர் வினவியபோது, அப்படியென்றால் அது உங்களைப் பொறுத்தவரை நல்ல கவிதையல்ல என்ற குறிப்பிட்டார். நல்ல கவிதை என்பது தனிமனிதன் சார்ந்த ரசனை/வாசிப்பனுபவம் என்ற சுஜாதாவின் கருத்து நியாயமாகப் படுகிறது.


இனிமேல் கணேக்ஷ் வசந்த கதைகள் கிடையாது என்று தலையாட்டி விட்டார். பிரசன்னா சந்தோசப்பட்டார். நான் வருத்தப்பட்டேன். இகாரஸ் காந்தளூர் வசந்தகுமாரன் கதை இரண்டாம் பாகம் எழுதச் சொன்னார். இறுதியாக "கடவுள் வந்திருந்தார்" நாடக விழாவிற்காக மஸ்கட் போவதாக சொன்னார். அப்போதுதான் நாடகம் குறித்து கேட்கவில்லையே என்று தோன்றியது. சுஜாதா என்னும் படைப்பாளி மிகப் பெரிய கடல். இரண்டு மணி நேரத்தில் இதனை நீந்திக் கடக்க முடியுமா? கடலில் என்ன இருக்கிறது எனப் பார்க்க முடியுமா? மடத் தனமாக் கேட்டு சுனாமியாக சுருட்டிப் போட்டுவிடுவாரா என்ற பயம் என் மனதில் இருந்து கொண்டேயிருந்தது.இதே போல் பயம் சுரேச்கண்ணனிடமும் இருந்ததாக சொன்னார்.


ஆனால் வாழ்நாளில் மறக்க இயலா இரண்டு மணிநேரங்கள். இவருடன் பேசியது இரண்டு மணிநேரம் என்றாலும் பேசியதை இரண்டு நாட்களாக பலருடனும் சொல்லிக் கொண்டிருக்கிறேன் இதை கேட்டாயா? அதைக் கேட்டாயா? என ஆளுக்காள் இன்னும் பல கேள்விகளை முன் வைக்கிறார்கள். அவற்றிலிருந்து இக்கலைஞன் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் பிரமிக்கவைக்கிறது. இன்னும் நிறைய பேரிடம் சுஜாதா சாரை பார்த்து விட்டேன் என்று சொல்ல வேண்டும். அவர்களது வயிற்றெரிச்சலையும் கொட்டிக் கொள்ள வேண்டும்.


கோடானு கோடி நன்றிகள் தேசிகன்.வாழ்க வளமுடன்.

Wednesday, June 1, 2005

சாரி, பெஸ்ட் ஃபிரண்ட்

Image hosted by Photobucket.com "சாரி, பெஸ்ட் ஃபிரண்ட்". இது புத்தகத்தின் பெயர். இந்த புத்தகத்தை எவ்வளவு பேர் படித்திருப்பார்கள் என்று தெரியாது. ஆனால் நான் சமிபத்தில் படித்த ஒரு நல்ல சிறுகதை தொகுப்பு இது. ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தின் ஆங்கில பதிப்பு சில பள்ளிகளில் துணைப்பாடமாக இருக்கிறது.


இதில் பத்து சிறு கதைகள் மிக நேர்த்தியாக எழுதப்பட்டுள்ளது. அவை -


பாம்புப்பட்டிக்கு என்ன ஆச்சு - சாய் விடேகர்
மாறிய விளக்குகள் - போய்லி சென்குப்தா
சுரங்கப்பாதை - ஷமா ஃபியூட்டேஹல்லி
சிங்கத்துக்கு புத்துயிர் - கிதா ஹரிஹரன்
வெல்லும் அணி - சாவித்திரி நாராயணன்
பாட்டுக்கெல்லாம் ஒரு பாட்டு - ஸ்வப்னா தத்தா
சாரி, பெஸ்ட் ஃபிரண்ட் ஹேமாங்கினி ராணடே
ரிஷபனின் ராமன் - கீதா ஹரிஹரன்
பொம்மை - சாவன் தத்தா
மாங்கா மடையர்களும் தேங்கா மடையர்களும் - ஷமா ஃபட்டேஹல்லி


இக்கதைகளை கீதா ஹரிஹரன் மற்றும் ஷாமா ஃபியூட்டேஹல்லி தொகுத்துள்ளார்கள். தமிழில் அழகாக மொழிபெயர்த்தவர் அ.குமரேசன். ஓவியங்கள் ரஞ்சன் தே. பாரதி புத்தகாலயம். 80 பக்கங்கள், விலை 25/= ( சரவணபவன் ஒரு மசால் தோசை + மினி காப்பியின் விலை )


ஒவ்வொரு கதையின் ஆரம்பமும் நம்மை கதைக்குள் இழுத்துச்செல்கிறது. (உத)["நீங்க இந்த கதையை நம்பமாட்டீங்க. ஆனால் இது நிஜமா நடந்த கதைன்னு என்னால் நிச்சயமாக சொல்லமுடியும். ஏன்னா, நான் பாம்புபட்டிக்கு போயிருக்கிறேன். ... " - பாம்புப்பட்டிக்கு என்ன ஆச்சு]["ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபத்து ஐந்தாம் ஆண்டில் அலிபாக் நகரின் வயல்வெளிகளில் நீங்கள் நடந்து சென்றிருந்தால் ஒரு விநோதமான காட்சியைக் கண்டிருப்பீர்கள். ஒல்லியான உருவம் ஒன்று வெள்ளைக் குறுந்தாடியுடன் கண்ணாடி அணிந்துகொண்டு அந்த வயல்களில் நடைபோடுவதை பார்த்திருப்பீர்கள்...." - மாங்கா மடையர்களும் தேங்கா மடையர்களும் ]


இந்த தொகுப்பில் உள்ள கதைகள், குழந்தைகள் வாழ்க்கையின் அடிப்படை விதியை புரிந்து கொள்ளவும் அதனுடன் இணைந்து வாழவும் அதனை அனுபவித்து மகிழவும் செய்கிற ஒரு முயற்சி. இந்தியாவில் குழந்தைகளுக்காக வெளியிடப்படுகிற பல புத்தகங்களுக்கு தற்போது இந்த புத்தகம் பாப்புலராக இருக்கிறது.


அத்தொகுப்பில் உள்ள ஒரு சிறுகதையை இங்கு தந்துள்ளேன். படித்துப்பாருங்களேன்.மாறிய விளக்குகள் - போய்லி சென்குப்தா


முதலில் அதை நான் விளையாடாகத்தான் எடுத்துக்கொண்டேன். தில்லி நகரின் ஜன்பாத் சாலைச் சந்திப்பில் தினமும் பத்திரிக்கை விற்கிற ஒரு பறட்டைத்தலை பையனோடு விளையாடுவதாகத்தான் எடுத்துக்கொண்டேன். அந்த வழியாக நான் சைக்கிளில் போகிறபோதெல்லாம் அவன் என் பின்னால் ஓடி வருவான். கையில் ஒரு ஆங்கிலப் பத்திரிக்கையை எடுத்து நீட்டிக் கொண்டு ஆங்கிலமும் இந்தியும் கலந்த வார்த்தைகளில் அன்றைய மாலைப் பொழுதின் செய்தித் தலைப்புகளைக் கூவுவான். இந்த தடவை நான் சைக்கிளை நடைபாதை அருகில் நிறுத்திவிட்டுஅவனிடம் ஹிந்திப் பேப்பரைக் கொடுக்குமாறு கேட்டேன்.


அவன் வாயைத் திறந்தபடி என்னையே பார்த்தான். "அண்ணா, உங்களுக்கு ஹிந்தி தெரியுமாண்ணா" என்று கேட்டான்.


பத்திரிக்கைக்கான காசை அவனிடம் கொடுத்துக்கொண்டே "தெரியுமே. ஏன் நீ என்ன நினைச்ச" என்று கேட்டேன்.


அவன் கொஞ்ச நேரம் சும்மா இருந்தான். அப்புறம் "உங்களப் பார்த்தா வெள்ளைக்காரரு மாதிரி இருக்கீங்க, அதான் கேட்டேன்" என்றான். " உங்களுக்கு ஹிந்தி படிக்க கூட தெரியுமாண்ணா?"


"நல்லாத் தெரியும்" என்று நான் பதில் சொன்னபோது கொஞ்ம் பொறுமை இழந்திருந்தேன்" என்னால் ஹிந்தி பேச முடியும், படிக்க முடியும், எழுதவும் முடியும். நான் பள்ளிக் கூடத்தில் படிக்கிறபாடங்கள் ஹிந்தி ஒரு சப்ஜெக்ட்" என்றேன்.


"சப்ஜெக்டா, அப்படீன்னா," என்று அவன் கேட்டான். பள்ளிக்கூடத்துக்கே போகாத ஒருவனிடம் சப்ஜெக்ட் என்றால் என்னவென்று எப்படி புரிய வைப்பேன்?" அது வந்து.." என்று நான் சொல்ல ஆரம்பித்தபோது சிக்னல் விளக்கு மாறியது. பச்சை விளக்கு எரிந்ததும் என் பின்னால் இருந்த வண்டிகளின் ஆரன் ஒலி நூறுமடங்காக அதிகரித்தது மற்ற வாகனங்களின் போக்குவரத்துடன் நானும் சேர்ந்து கொண்டேன்.


மறுநாள் அதே இடத்தில் அவன் நின்று கொண்டிருந்தான். கையில் ஒரு ஹிந்திப் பத்திரிக்கையை வைத்துக்கொண் என்னைப் பார்த்து புன்னைகைத்தான் "பய்யா, ஆப்கா அக்பார்..அப் பதாயியே யஹ் சப்ஜெக்ட் க்யா சீஸ்ஹை?" அவனுடைய உச்சரிப்பில் அந்த ஆங்கில வார்த்தை வித்தியாசமாக ஒலித்தது. அதற்கு ஆங்கிலத்தில் இன்னொரு பொருள் உண்டல்லவா, மற்றவரால் அடக்கி ஆளப்படுபவர் என்று அந்த பொருளைத் தருவதுபோல் அவன் உச்சரித்தான்.


"அதுவா, படிக்கிறதுக்கான பாடம்னு அர்த்தம்" என்று நான் சொன்னேன். அப்போது சிக்னலில் சிவப்பு விளக்கு வந்துவிட்டதால் தொடர்ந்து நான் அவனுடன் பேசினேன். "நீ எப்பவாவது ஸ்கூலுக்கு போய்யிருக்கியா?"


"இல்லீங்கண்ணா" , என்றான் அவன். அதற்கப்புறம் பெருமிதத்துடன், "நான் இவ்வளவு உசரம் இருக்கப்பவே வேலை செய்ய ஆரம்பிச்சிட்டேன்" என்று கூறியவன், என் சைக்கிள் ஸீட் உயர அளவைக் காட்டினான்" ஆரம்பத்திலேயேல்லாம் என் கூட அம்மா வருவாங்க இப்ப நானே தனியா வேலை செய்ய முடியும்"


"உன்னோட அம்மா இப்ப எங்க இருக்காங்க" என்று கேட்ட போது சிக்னல் பச்சை விளக்குக்கு மாறிவிட்டது. நானும் கிளம்பிவிட்டேன். ஆனாலும் அவன் எனக்கு பின்னால் எங்கேயோ இருந்தபடி"அவங்க இப்போ மீரட்டுலே இருக்காங்க, யார் கூட இருக்காங்க தெரியுமா.." என்று சொல்லிய மீதி வார்த்தைகள் காற்றில் கரைந்துவிட்டன.


அதற்கடுத்த நாள் அவன் "பய்யா என் பேர் சமீர்", என்றான் அப்புறம் மிகவும் வெட்கப்பட்டுக்கொண்டு உங்க பேர் என்ன" எனக் கேட்டான்.


அவன் சொன்னது வியப்பை எற்படுத்தியது. என் சைக்கிள் கூட சற்று ஆடிவிட்டது. "என் பேரும் சமீர்தான்" என்றேன். "அப்படியா!" அவன் கண்களில் மின்னல்
"ஆமா" என்று அவனைப் பார்த்து ஒரு மாதிரியாக சிரித்தேன். "சமீருங்கிறது அனுமாருக்கு இன்னொரு பெயர் தெரியுமா?"


"அப்ப நீங்க ஓண்ணாவது சமீர், நான் ரெண்டாவது சமீர்" என்று அவன் ஒரு வெற்றிக் களிப்புடன் சொன்னான்.


"அப்படியே வெச்சிக்கலாம்" என்று கூறிய நான் என் கையை நீட்டினேன். "கைகொடு ரெண்டாம் சமீர்!"


அவனுடையகை என் கைக்குள் ஒரு சின்னப் பறவைபோல அமர்ந்து கொண்டது. அப்புறம் நான் சைக்கிளில் போய்க் கொண்டிருந்த போது கூட அவனுடைய கையின் வெப்பத்தை என்கைக்குள் உணர்ந்து கொண்டேதான் இருந்தேன்.


அதற்கு அடுத்த நாள் அவனுடைய முகத்தில் வழக்கமாக என்னைப் பார்த்துக் புன்னகைகப்பானே அந்த புன்னகையைக் காணோம். "பய்யா, மீரட்டுல கலவரமாம் பய்யா. அங்கே நிறைய முஸ்லீம்களைக் கொன்னுட்டாங்களாம்"


அவன் கையில் இருந்த பத்திரிகையின் தலைப்புச் செய்தியைப் பார்த்தேன். "மதக் கலவரம்" என்று சுட்டெரித்தது அந்த செய்தி.


"ஆனா சமீர்.." என்று ஏதோ சொல்ல ஆரம்பித்தேன்.


"நான் ஒரு முஸ்லீம் சமீர் பய்யா எங்க சொந்தக்காரங்க எல்லாம் மீரட்டுலதான் இருக்காங்க" அவன் கண்களில் கண்ணீர் நிரம்பியிருந்தது. அவன் தோளை நான் தொட்ட போது அவன் நிமிர்ந்து பார்க்கவில்லை.


அடுத்த நாள் அவனை அந்த சாலைச் சந்திப்பில் காணவில்லை. அதற்கடுத்த நாளும் காணவில்லை. அதற்கப்புறம் ஒரு நாள் கூட அவனைக் காணவில்லை. எந்த பத்திரிகையாலும், இங்கிலீஷ் பத்திரிகையோ, ஹிந்திப் பத்திரிகையோ எதனாலும் என்னுடைய இரண்டாம் சமீர் எங்கே போனான் என்று சொல்ல முடியவில்லை.


[ பாரதி புத்தகாலயம்2, குயவர் வீதி, ஜோன்ஸ் சாலை, சைதை, சென்னை-600 015. போன்: 24332424 இணையத்தளம்: www.tamizhbooks.com மின்னஞ்சல்: info@tamizhbooks.com ]Old Comments from my previous Blog


சிறுகதையின் ஒரு தொகுப்பு தாங்கள் தந்தது மிகவும் நன்றாக இருந்தது.


-ஸ்ரீனிவாசன்


By ஸ்ரீனிவாசன், at Wed Jun 01, 10:09:33 AM IST  


Sorry, Best Story!


mitra


By மித்ரா, at Wed Jun 01, 10:40:05 AM IST  


சாரி, பெஸ்ட் ஃபிரண்ட் கதையை படித்திருக்கிறேன். மற்ற கதைகளையும் படிக்க வேண்டும்...


நன்றி தேசிகன்


ரவியா


By Anonymous, at Wed Jun 01, 02:37:51 PM IST  


தேசிகன், ஆசிரியர்களின் பெயர்களை ஆங்கிலத்தில் கொடுத்தால் வசதியாக இருக்கும்.


ரவியா


By Anonymous, at Wed Jun 01, 02:41:35 PM IST  


கதையின் முடிவு என் இதயத்தை கலங்க வைத்து விட்டன. நன்றி தேசிகன்.


By Sivakumar, at Wed Jun 01, 03:23:54 PM IST  


thanks for the story.rommbhha touchingaa errundadhu.i will try to find this book.


By Viji, at Wed Jun 01, 05:49:10 PM IST