Tuesday, April 5, 2005

நானும் ஒரு டஜன் பெண்களும்

"நேற்று காமிக்ஸ் பற்றி எழுதி ஏதோ காமெடி பண்ணிட்டே இன்று என்ன எழுதப் போற" என்றது வேதாளம்.
விக்கிரமாதித்தன் மௌனமாக இருந்தான்.
"நீ எப்போதும் எனக்கு பதில் சொல்லிடுவே இன்னிக்கு என்ன ஆச்சு?"
"யோசிக்கிறேன்.. இன்று ஒரு Sci-Fi-Short எழுதலாம் என்று இருக்கிறேன்"
"சுலபமாக எதையாவது எடுத்துக்கொண்டு தப்பிக்கலாம் என்று மற்றும் நினைக்காதே, பின்னூட்டத்தில் உன் தலை வெடித்து சுக்கு நூறாகும்" என்று எச்சரித்தது வேதாளம்.
"இதே டயலாக்கை எத்தனை முறை சொல்வே" என்று விக்கிரமாதித்தன் Sci-Fi-Shortடை எழுத ஆரம்பித்தான்.


 


நானும் ஒரு டஜன் பெண்களும்
சந்தேகமே இல்லை. இன்றோடு நான் தொலைந்து நான்கு நாட்கள் ஆகிறது. கடைசியாக குமுதம் பக்தியில் இலவச இணைப்பாக கொடுத்த சின்ன சொம்பில் உள்ள கங்கை நீரை எடுத்து தலையில் தெளித்துக்கொண்டேன். அப்புறம் என்ன நடந்தது என்று தெரியவில்லை. இப்போது அடர்ந்த காட்டுக்குள் இருக்கிறேன். "Born In USA" என்ற பனியன். முழங்கால் பெர்முடா என்று அப்படியே இந்த காட்டுக்குள் வந்துவிட்டேன். கையில் அந்த இலவச குமுதம் சொம்பும் இருக்கிறது.


'கீச் கீச்' பறவைகள், தூரத்தில் அருவியின் சத்தம், பச்சை நிறத்தில் செடி கொடிகள், பூக்கள், வண்டுகள், முயல்கள், சற்று முன் நின்ற மழையினால் மரத்திலிருந்து சொட்டும் மழைத்துளி சற்றே மெலிதான குளிர் காற்று ....கவிதை எழுத வேண்டும் போல் இருக்கிறது. எழுதினால் எதாவது பசித்த புலி வந்து வந்து சாப்பிட்டுவிமோ என்ற பயம். மூன்று நாட்களாக தேடிவிட்டேன் இந்த காட்டில் யாருமே இல்லை. ராத்திரி கொஞ்சம் பயமாக இருக்கிறது. சாப்பாட்டுக்கு கஷ்டம் இல்லை. பழங்கள் நிறைய கிடைக்கிறது. முன்பே தெரிந்திருந்தால் இரண்டு செட் ஜட்டி, பனியன் கொண்டு வந்திருப்பேன். ஒன்றையே துவைத்து..கொஞ்சம் கஷ்டமாக தான் இருக்கிறது.


அருவிக்கு இடது பக்கம் இன்னும் தேடி பார்க்கவில்லை. அங்கேயும் யாரவது இருப்பார்களா என்று சந்தேகம் தான். பழங்களை சாப்பிட்டுவிட்டு மரத்தடியில் கண்ணயர்ந்த நேரத்தில், சிரிப்போலி கேட்டு திடுக்கிட்டு எழுந்தேன். பக்கத்தில் சரியாக ஒரு டஜன் பெண்கள். எல்லோருக்கும் 18 அல்லது மிஞ்சிபோனால் 19 வயதுதான் இருக்கும். நடுவில் அந்த பெண் மட்டும் கொஞ்சம் வயதானவள் போல் தோற்றமளித்தாள் அவளுக்கு 22 வயது இருக்கும். எல்லோரும் ஒருவிதமான டிரஸ் அணிந்திருந்தார்கள். மேலே துப்பட்டா போல் துணியும், கீழே துடை தெரியும் படி டென்னிஸ் பாவடையும் அணிந்திருந்தார்கள்.


நான் தயங்கி "ஹலோ" என்றேன். எல்லோரும் கோரஸாக சிரித்தார்கள். எனக்கு கொஞ்சம் வெட்கமாக இருந்தது. அந்த 22 வயது பெண் தான் என் முன் வந்து என்னை மேலும் கிழும் பார்த்தாள்
"நீ ஆணா ?" என்றாள்
அவள் கொஞ்சுகிறாளா கெஞ்சுகிறாளா என்று கண்டுபிடிப்பது கடினமாக இருந்தது.
"நீங்களே கண்டு பிடியுங்களேன்"
"'கிளுக்' என்று சிரித்துவிட்டு "மீசையிருக்கிறது அதனால் ஆணாகத்தான் இருக்க வேண்டும்" என்றாள்.
புன்னகைத்தேன்.
"சில வருடங்கள் முன் பெரிய நரிக்கூட்டம் வந்து எல்லா ஆண்களையும் ..." என்று லேசாக விசும்பத் தொடங்கினாள்.
அவள் கண்களை துடைத்துவிட, பாக்கெட்டில் கர்ச்சீப் இருக்கிறதா என்று பார்த்தேன், இல்லை.
"அதற்கு மேல் கேட்காதீர்கள்..." என்றாள்
"கவலைப்படாதீர்கள் நான் இருக்கிறேன் இனிமேல்" என்று அவள் கண்களை துடைத்து ஆறுதல் கூறினேன்.
அவள் மூக்கு அதற்குள் சிகப்பாகியிருந்தது.
"பல வருஷங்களாக குழந்தைகளுக்காக ஆண்களை தேடிக்கொண்டிருக்கிறோம்" என்றாள்.
"இனிமேல் நான் இருக்கிறேன், கவலை படாதீர்கள்" என்று அவள் கைகளை பற்றினேன். அவள் அதற்கு ஆட்சேபிக்கவில்லை.
"நான் காண்பது கனவா ?" என்றேன்.
'கிளுக்' என்று சிரித்துவிட்டு "கிள்ளிப்பாருங்கள் என்று அவள் துடையை காண்பித்தாள்"
மெதுவாக கிள்ளினேன். மன்னிக்கவும் தொட்டேன்.
"ஆ.." என்று செல்லமாக என்னை அடிக்க வந்தாள்.
"சரி எப்ப ஆரம்பிக்கலாம்" என்றேன்.
ஓரத்தில் இருந்த அந்த உசரமான பெண் "உங்களுக்கு சம்மதம் என்றால் இப்பவே" என்றாள்.
"சரி" என்று சட்டையை பித்தான்களை ....
"குழந்தைகள் அங்கே இருக்கிறார்கள்" என்றாள்
"என்ன?" என்றேன் குழப்பமாக
"ஆமாம், எங்களுக்கு நிறைய அழகான காட்டு வாசி ஆண்கள் இருக்கிறார்கள். அவர்கள் எங்களுக்கு ...(தமிழ்மணத்தில் என் வலைப்பதிவு நீக்கப்படும் அபாயம் இருப்பதால் மேற்கொண்டு விவரிப்பது உத்தமம் இல்லை) ஆகவே நாங்கள் எப்போதும் பிசியாக இருக்கிறோம்! அதனால் எங்களுக்கு குழந்தைகளை பார்த்துக்கொள்ள தான் நேரம் இல்லை!" என்றாள்.


முதலில் நின்று கொண்டிருந்த பெண் என் கையை பற்றி "கவலைப்படாதீர்கள் எங்கள் குழந்தைகளுக்கு நேப்கின் மாற்றினால் உங்களுக்கு சுலபமாக பொழுது போகும்" என்றாள். எனக்கு குழப்பமாக இருந்தது.
மீண்டும். "நான் காண்பது கனவா ?" என்றேன்
அந்த பெண் என் அருகே வந்து என் தொடையை வலிக்கும் அளவிற்கு கிள்ளினாள்
"ஆ.." என்று அலரினேன்.
ஒரு உசரமான பெண் என் கையை பற்றி அருவிக்கு இடது பக்கத்தில் அழைத்து சென்றாள். என் காதருகே வந்து கண்சிமிட்டி "தப்பிக்க மட்டும் நினைக்காதே" என்று சொல்லி "கிளுக்" என்று சிரித்தாள்.


SF கதை கரு உதவி : Paul O'Neill
டிஜிடல் ஓவியம் உதவி : http://www.dtm2002.3d.pl/


"நீ ஏதோ பிரபந்தம் எழுதும் ஒரு நாமம் போட்ட ஆசாமி என்று நினைத்துக் கொண்டிருந்தேன் இவ்வளவு மோசமாக எழுதுகிறாயே ?" என்றது வேதாளம்.
விக்கிரமாதித்தன் பதில் சொல்ல முடியாமல் அசடுவழிந்தான்.Old Comments from my previous Blog


என் நண்பன் (அவன் பெயரும் தேசிகன், சிறீனிவாச தேசிகன்) கண்ட சோகமானக் கனவை நான் இங்கே கூறுகிறேன். ஒரு நாள் கலவரமாக என்னிடம் வந்தான். "டேய் ராகவா, நீதாண்டா எனக்கு ஏதாவது சொல்லணும்" என்றான். "அப்படியே நண்பா, என்னப் பிரச்சினை, ஊழ்வினை வந்துத் துரத்துகிறதா" என்று செந்தமிழில் கேட்க அவன் என்னை ஒரு அடிப்பட்டப் பார்வை பார்த்தான். பிறகு ஆரம்பித்தான். "ஒண்ணுமில்லைடா, கடந்தப் பத்து நாட்களாக ஒரு கனவு வந்துப் படுத்துகிறது. என்னைச் சுற்றிப் பத்துப் பெண்கள். ஒவ்வொருத்தியும் என்னை எங்கெங்கோ உரசுகின்றனர். இந்தக் கனவை எப்படி நிறுத்துவது?" நான்: " அடப்பாவி, இம்மாதிரிக் கனவு வராதா என்று அவனவன் கையில் பிடித்துக் கொண்டு அலைகிறான். உனக்கு என்னக் கேடுகாலம்?" என்றேன். "அக்கனவில் நானும் ஒரு பெண்ணாக இருப்பதுதான் பிரச்சினை." என்றான் தோழன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்


By dondu(#4800161), at Tue Apr 05, 10:11:47 AM IST  


வேதாளம் அடுத்து உங்களை எங்கே சந்திக்கப் போகிறது, விக்ரமாதித்தா? ஆனால், இந்த கதைமூலம் உங்களுக்குப் பிடித்தது 'மோர்குழம்பு' என்று பொய் சொல்லியிருக்கிறீர்கள். நிஜத்தில், காட்டுவாசிகள் விரும்பும் கருவாடு+கத்திரிக்காய் காரக் குழம்புதான் உங்களுக்குப் பிடித்தது என்று தெரிந்து கொண்டேன். வேதாளத்தை நம்பாதீர்கள்... இன்னும் உங்கள் வேஷம் எதெதை.... தோலுரித்து உப்பு தடவப் போகுதோ! - சந்திரன்.


By நாலாவது கண், at Tue Apr 05, 10:49:24 AM IST  


தேசிகன்,
நல்லாருக்கு, கொஞ்சம் "A" வாடை தூக்கலா! இப்படி வேற ஓர் ஆசை இருக்கா ? எனக்கும் தான் ;-)


டோண்டு Sir,
//"அக்கனவில் நானும் ஒரு பெண்ணாக இருப்பதுதான் பிரச்சினை."//
இந்த காலத்துலே, பெண்ணா இருந்தா மட்டும் என்னவாம் ? ;-))


எதுக்கு வம்பு!! என்னை தமிழ்மணத்திலிருந்து தூக்கிட போறாங்க :-(


என்றென்றும் அன்புடன்
பாலா


By enRenRum-anbudan.BALA, at Tue Apr 05, 01:57:46 PM IST  


Good example for a mis communication. I intend to say something and you tend to think it in a different way. Story is good.


By REFLEX, at Tue Apr 05, 03:43:27 PM IST  


கதை ரொம்ப சீக்கிரம் முடிச்ச மாதிரி இருக்கு.


தமிழ்மணத்திலிருந்து தூக்குவாங்கன்னு ஏன் சும்மா பீதியைக் கிளப்பறீங்க?
இங்க பாருங்க:


தமிழ்மணத்தில் தெரியும் ரெண்டு வரியில் பிரச்னைக்குரிய எதையும் எழுதாமல் இருந்தால் சரி. அவங்கவங்க வீட்டில் என்ன எழுதுறாங்கன்னு யாரும் போலீஸ் வேலை பாக்கமுடியுமா?


By காசி (Kasi), at Tue Apr 05, 08:27:49 PM IST  


காசி, பெங்களூரில் உள்ள ஒரு ப்ரபல மருத்துவமனையில் தேசிகன் அட்மிட் ஆகியிருப்பதாகத் தகவல் வந்துள்ளது. சென்னையில் இருந்து பறந்து வந்த ஏதோ ஒரு தோசைக்கரண்டி அல்லது சப்பாத்திக்கட்டை தாக்கி, விலா எலும்பு முறிந்து இருக்கலாம் என்று புலனாய்வுத்துறை தெரிவிக்கிறது. எதற்கும் நாளைக்கு தற்காலிக நட்சத்திரம் ஒன்றை ஏற்பாடு செய்து வைக்கவும்.


(ஆகட்டும் பாக்கறேன், ஒரு நாள் ஒருநாள் இல்லாட்டி ஒரு நாள் தேசிகன் சென்னைக்கு வராமலேயேவா இருந்துட முடியும்)


:-)


By S Krupa Shankar, at Wed Apr 06, 02:51:08 AM IST  


Desikan,
please let me know what software to use to upload pics to my blog, which is good and does not cause spyware kind of issues. sorry for deviating from the topic.
thanks
kika


By Kika Gops, at Wed Apr 06, 08:38:46 AM IST  


அன்புள்ள தேசிகன்,


'ச்சிக்'ன்னு இருக்கு கதை!
அருமை!


என்றும் அன்புடன்,
துளசி.


By துளசி கோபால், at Wed Apr 06, 09:23:57 AM IST  


டோண்டு ராகவன்,
என்னுடைய பதிவைவிட உங்களின் பின்னூட்டம் அருமை.


சந்திரன்,
நாலாவது கண் உங்களுக்கு பொருத்தமான பெயர்தான்.


பாலா,
பயப்படாதிங்க, காசியுடைய பதிலை பாருங்கள். என்ன வீட்டில் தெரிந்தால் உங்களுக்கு கிடைக்கும் பல்லவி/சரணங்களை அடுத்த பதிவில் நீங்கள் போடலாம்.


க்ருபா,
அடுத்த பதிவை மருத்துவமனையிலிருந்து தான் எழுதினேன். எங்கேயும் ஒன்னும் கெட்டுபோகலை, நல்லா தான் இருக்கு என்ன ஒன்னு பக்கத்திலேயே மனைவி இருக்கா இல்லாட்டி...


Reflex,
தொடர்ந்து படித்து, அதற்கு பின்னூட்டம் எழுதுவதற்கு நன்றி.


காசி,
நல்லது, I have noted the work around :-)
If I extend it further, then it would have not got that punch. A story is successful, if the reader feels that the author should have written some more ( tip courtesy - Sujatha ).


Kika Gops,
I Use Photobucket, also check for Picasa in Blogger page.


துளசி,
கருத்துக்கு நன்றி.


By Desikan, at Wed Apr 06, 11:14:15 AM IST  


போங்க தேசிகன்... நோண்டி நொங்கெடுத்திருக்க வேண்டிய கதையை, காட்டை தளமா வச்சு எழுதியதினால், இலைமறை, காய்மறையா எழுதியிருக்கிறீங்களே... இதுக்கு பேசாம நீங்க கவிதை எழுதி உங்களை பசித்த புலி தூக்கிட்டு போயிருக்கலாம் ! : ))))))))))


By பாலு மணிமாறன், at Wed Apr 06, 03:16:16 PM IST  


'சாது மிரண்டால்' எப்படியெல்லாம் கனவு வரும் என்பது இப்போது தெரிகிறது. ஏதாவது பலித்தால் சரி;-)


-லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்


By LA_Ram, at Thu Apr 07, 06:33:53 AM IST  


 

No comments:

Post a Comment