Thursday, April 7, 2005

என் பேர் ஆண்டாள்-0 2

என் பேர் ஆண்டாள் - 2


 

"நேற்று GPS பற்றி எழுதினது நன்றாக இருந்தது, டையம் கிடைக்கும் போது அதை தமிழில் மொழிபெயர்க்கலாம் என்று இருக்கிறேன்" என்றது வேதாளம்
"நான் தமிழில்தானே எழுதியிருந்தேன்" என்றான் விக்கிரமாதித்தன்.
"அதில் உள்ள் ஆங்கில வார்த்தைகளை பார்த்தால் அப்படி தெரியவில்லை.."
"என்ன நக்கலா ? சரி இன்று என் பெண் எழுதப்போறா" என்ற விக்கிரமாத்தித்தன் தன் மகளை எழுதச் சொன்னான்.


* - *
என் பேர் ஆண்டாள் - 2


Image hosted by Photobucket.com


 


Image hosted by Photobucket.comஎனக்கு பர்த்டே முடிஞ்சு ஆறு மாசம் ஆச்சு. அப்பா சைக்கிள் வாங்கித்தர்றேன்னு சொன்னா ஆனா, இன்னும் வாங்கித்தரல. எனக்கு பிடிச்ச ரைம் "Rain Rain go away". அப்பா சொல்ரா மெட்ராசில மழையே இல்லை இதை எதுக்கு பாடரன்னு.


 


Image hosted by Photobucket.com எனக்கு பிடிச்ச toy ஆப்பாவோட லாப்டாப் தான். அப்பா அதை தரமாட்டேங்கிறா. ஒரு நாள் அப்பா துங்கரப்ப நைஸா எடுக்கப்போறேன். இப்போ எனக்கு லீவ் அதனால கார்த்தால பல்தேச்சிட்டு Mulan படம் பாப்பேன், அப்பறம் Nemo, அப்பறம் Tom & Jerry, அப்பறம் ராத்திரி Pogoல Mr.Bean, அப்பறம் தூங்கிடுவேன்.


 


 


 


Image hosted by Photobucket.comஇப்போ "அ ஆ இ ஈ" எல்லாம் நல்லா வரையறேன். அப்பா சொல்லித்தந்தா. 'ஃ' எனக்கு ரொம்ப ஈஸி. மூணு டாட் வெச்சா போறும். 'இ' ரொம்ப கஷ்டம் தெரியுமா?. அம்மா பாட்டு சொல்லிதருவா. இன்னும் சுருதி சரியா சேரலைன்னு சொல்லரா. என்னால அவ்வளவு தான் முடியும்னு அம்மாவுக்கு தெரியலை.


Image hosted by Photobucket.comபோன வாரம் டிரெயின்ல பெங்களூர் போனேன். ரொம்ப குளிர்ன்னு அப்பா சொன்னா. லைட்டா சில்லுனு இருந்தது அவ்வளவுதான். ஒரு நாள் morning என்னை டிரஸ் பண்ணி Ryan ஸ்கூல சாக்கிலேட் தருவா வான்னு அப்பா, அம்மா கூட்டிண்டு போனா. அங்கே ஒரு மிஸ் என்னை ஒரு கிளாஸ் ரூமுக்கு அழைச்சுண்டு போனா.
"What is your name?"
"Andal"
"Nice Name"
"What is this ?"
"Apple"
"This ?"
"Elephant"
சாக்லேட் கொடுத்தா வாங்கிண்டு வந்தேன். தாங்க்ஸ் சொல்ல மறந்துட்டேன்.


Image hosted by Photobucket.com UKG இந்த ஸ்கூல்ல தான் சேரப்போரேன். என் கிட்ட அப்பா ஒரு வார்த்தை பிடிச்சிருக்கான்னு கேட்கவேயில்லை. பழைய ஸ்கூல்ல எனக்கு நிறைய friends இருக்கா. அப்பாவுக்கு இதெல்லாம் தெரியல. ஹம்சினின்னு ஒரு ஃபிரண்டு இருக்கா. எனக்கு ஒரு சூப்பர் ரைம் சொல்லி குடுத்தா..அதை சொல்லட்டுமா ?
பாலாஜி பஜ்ஜி
ஃபிரிட்ஜ் குள்ள ஐஸ்
ஐஸ் குள்ள தண்ணி
தண்ணி குள்ள நுரை
விட்டான் பாரு அரை.


 


Image hosted by Photobucket.com எனக்கு பிங்க் கலர் ரொம்ப பிடிக்கும். பிங்க் கிரேயான்ல வீட்டு wallல் நல்லா வரைஞ்சியிருக்கேன். ஆத்துக்கு வந்தா காமிக்கிறேன். ஆனா அம்மா wallல கிறுக்கக் கூடாதுனு சொல்ரா.
மைலாப்பூரில ஒரு கோயில் இருக்கு எனக்கு ரொம்ப பிடிக்கும். அப்பாவோட weekendல போவேன். கேசவா உம்மாச்சி இருக்கு. அங்கே ஒரு மாடு இருக்கு பிளாக் கலர். நா அதுக்கு கிரை கொடுப்பேன். சமத்தா சாப்புடும். நான் சாப்பிடர சீட்டோஸ் அதுக்கு பிடிக்காது. சொல்ல மரந்துட்டேனே அதுக்கு ஒரு பேபி மாடு இருக்கு அதுவும் பிளாக் கலர்.
இன்னும் இரண்டு மாசத்தில பெங்களூர் வந்துடுவேன் அப்பறம் நிறைய பேசரேன். பை.
(நான் ரிசண்டா வரஞ்ச பிக்சர்ஸ். நல்லாயிருக்கா ?)


* - *
"சரி, பிறந்த நாள் முடிஞ்சு ஆறு மாசம் ஆச்சு நீ எப்போ ஆண்டாளுக்கு சைக்கிள் வாங்கித்தரப்போற ?" என்றது வேதாளம்
"என்ன கேட்ட, காதில் சரியா விழவில்லை" என்று விக்கிரமாதித்தன் பொய் சொன்னான்.Old comments from my previous Blog


ஆண்டாளின் - மனசில் தோன்றியதை அப்படியே சொல்லி விட்ட - செல்லப் பேச்சு நல்லாயிருக்கு.


By Chandravathanaa, at Thu Apr 07, 10:38:43 AM IST  


ரொம்ப சூட்டிகையான குழந்தை.. சீக்கிரமே சைக்கிள் வாங்கி கொடுத்து விடுங்கள்.


By சுரேஷ் (penathal Suresh), at Thu Apr 07, 10:48:17 AM IST  


//பாலாஜி பஜ்ஜி
ஃபிரிட்ஜ் குள்ள ஐஸ்
ஐஸ் குள்ள தண்ணி
தண்ணி குள்ள நுரை
விட்டான் பாரு அரை.//


இந்த ரைம்தான் சூப்பர்.
படங்களும் சூப்பர் என்று உங்கள் பெண்ணிடம் சொல்லுங்கள்!


By Thangamani, at Thu Apr 07, 10:48:22 AM IST  


தேசிகன்: ஆண்டாளுக்கு கொரியன் மாமாவின் அன்பு முத்தங்கள். உங்கள மிஞ்சுறா இப்பவே :-) நேற்று பிரெஞ்சு-தமிழ் மொழி பெயர்ப்பு பற்றிப் பேசும் போது குட்டி இளவரவசன் பற்றிச் சொல்ல வேண்டுமென நினைத்தேன். எவ்வளவு அபாரமான மொழிபெயர்ப்பு! ஆண்டாளின் படங்களைப் பார்த்தவுடன் குட்டி இளவரசன் ஞாபகம் வந்தது. இந்தக் குட்டி இளவரசியை வைத்து ஒரு 'படம் பார்த்து கதை சொல்' கொண்டு வாருங்கள். முன்பு ஐயர் மலரில் எழுதினேன், குழந்தை இலக்கியம் என்பது குழந்தைகளுக்காகவும், பெரியவர்களுக்காகவும் குழந்தைகள் எழுவது என்று. இது குழந்தைகளுக்காக பெரியவர்கள் எழுதுவதற்கான மாற்று. இந்த ஆண்டாளைப் பார்த்தால் 'அந்த ஆண்டாள்' பொய்யில்லை என்றுதான் தோன்றுகிறது!


By N.Kannan, at Thu Apr 07, 02:20:51 PM IST  


ஆஹா,அருமையான பதிவு.


ஆண்டாள்-3 க்குக் காத்திருக்கிறேன்


By காசி (Kasi), at Thu Apr 07, 06:51:55 PM IST  


Would love to see Andal's photo.:)
'Thayai pola pillai' madhiri 'Thandhaiyai pola pillai' , Ippove padam varaiyarale!!


By Kika Gops, at Thu Apr 07, 09:34:57 PM IST  


Thanks Desigan,
I used hello+picasa


By Kika Gops, at Thu Apr 07, 09:36:31 PM IST  


அன்புள்ள தேசிகன்,
ஆண்டாள் கலக்கலா பேசறா...
எல்லாம் ரொம்ப நன்னாயிருந்ததுன்னு கொழந்தைட்ட சொல்லுங்கோ :)
- அன்புடன் அருண்


By Anonymous, at Fri Apr 08, 12:26:45 AM IST  


The previous post is by me
http://arunhere.com/pathivu


By Anonymous, at Fri Apr 08, 12:27:38 AM IST  


ஆண்டாளை ஒரு தடவை நேர்ல பார்த்தா சொல்லணும், "உங்க அப்பா வரைஞ்ச படம் எல்லாம் நீ வரையற மாதிரியே தத்ரூபமா இருக்கே!"ன்னு.


By S Krupa Shankar, at Fri Apr 08, 05:05:07 AM IST  


ஆண்டாளுக்கு வாழ்த்துகள். அருமையான பதிவு.
என்றென்றும் அன்புடன்,
சீமாச்சு


By Anonymous, at Fri Apr 08, 05:52:54 AM IST  


ச்சோஓஓஓஓஒ க்யூட் ! ஆண்டாள் இப்பவே இந்தப்போடு போடறாளே,.. இனிமே ஆண்டாளே எழுதட்டும். ஒரு ப்ளாக் தெறந்துகுடுத்துடலாம். எல்லா நலமும் பெற்று இனிது வாழ்க குட்டி ஆண்டாள் ! ¡µµµ´ ìäð ! ¬ñ¼¡û þôÀ§Å þó¾ô§À¡Î §À¡¼È¡Ç¡ !
þÉ¢§Á ¬ñ¼¡§Ç ±Ø¾ðÎõ,. : )
¬ñ¼¡û ú¢¨¸,..¡µµµ´ ìäð ! ¬ñ¼¡û þôÀ§Å þó¾ô§À¡Î §À¡¼È¡Ç¡ !
þÉ¢§Á ¬ñ¼¡§Ç ±Ø¾ðÎõ,. : )
¬ñ¼¡û ú¢¨¸,..¡µµµ´ ìäð ! ¬ñ¼¡û þôÀ§Å þó¾ô§À¡Î §À¡¼È¡Ç¡ !
þÉ¢§Á ¬ñ¼¡§Ç ±Ø¾ðÎõ,. : )
¬ñ¼¡û ú¢¨¸,..


By ஜெயந்தி சங்கர், at Fri Apr 08, 07:06:50 AM IST  


வாவ் அருமையா இருக்கு குழந்தையோட பேச்சு மாதிரியான பதிவு. ரொம்ப புதுசா வேற இருக்கு. இறுக்கமாக எந்த பதிவு பார்த்தாலும் வேதனை தான் மிஞ்சும் இந்த சமயத்துல மனசுக்கு சந்தோஷமா ஒரு பதிவு....


குழல் இனிது யாழ் இனிது என்பர் மழலைச் சொல் கேளாதவர்.


இதான்யா இன்பம்..


By அல்வாசிட்டி.விஜய், at Fri Apr 08, 08:38:58 AM IST  


//UKG இந்த ஸ்கூல்ல தான் சேரப்போரேன். என் கிட்ட அப்பா ஒரு வார்த்தை பிடிச்சிருக்கான்னு கேட்கவேயில்லை. பழைய ஸ்கூல்ல எனக்கு நிறைய friends இருக்கா. அப்பாவுக்கு இதெல்லாம் தெரியல.//


நம்முடைய கனவுகளை, நம் குழந்தையின் கண்களில் காண விழைகிறோமா? :-(


By Wordsworthpoet, at Fri Apr 08, 09:03:30 AM IST  


தமிழ் வாத்தியார் யாரும் Bloggerஆக இல்லையா? நல்லவேளை தப்பிச்சீர் விஜய்! இல்லாட்டி குறளை ஒழுங்கா சொல்லாததுக்கு 200 முறை Imposition எழுத வேண்டி நேர்ந்திருக்கும். மறுபடியும் திருக்குறள் புத்தகத்தை எடுத்து இடையில் எதை விட்டீர்கள் என்று பார்த்து எனக்கு தனி மெயில் போடுங்கள்! இது Deputtationல் வந்த 'இந்த' தமிழ் வாத்தியார் கொடுத்த Punishment. யாரப்பா, இது? குறுக்கே பேசக் கூடாது! அதோட தமிழ் வாத்தியார் இடத்துல வந்துட்டு Englishல எல்லாம் பேசக்கூடாதுன்னு கமெண்ட் எல்லாம் அடிக்கக்கூடாது.


ஆண்டாள் குழந்தை....! அப்பா, உன்னை கேக்காம ஸ்கூல் மாத்திட்டாரா? எங்க தமிழ் வாத்தியாரு வந்து பாக்கச் சொன்னாருன்னு சொல்லி எங்கிட்ட அனுப்பி வைம்மா! நான் Advice பண்றேன், 'பொண்ணை இப்டி வாயாடியாவ வளர்து வைக்கறதுன்னு!'
இப்படிக்கு
Temp. தமிழ் வாத்தியார் சந்திரன்
(அந்த குறளை முழுக்கா சொல்லச் சொல்லி வாத்தியாரை கேக்காத Studentsக்கு ஜே!)


By நாலாவது கண், at Fri Apr 08, 10:34:46 AM IST  


சார் சார் சந்திரன்(தமிழ்) சார்.. நான் சொன்னது குறள் இல்லேன்னு நினைக்கிறேன் சார். கரெக்டா... ஒ ஓ ஸாரி... சீ... மன்னிச்சிருங்க... ரைட்டா?... திரும்ப மன்னிச்சிருங்க... சரியா?


By அல்வாசிட்டி.விஜய், at Fri Apr 08, 12:32:20 PM IST  


Andaaloda padangal rombha nalla irukku. Enga veetu retta vallu ennoda ATM card eduthu Laptopla pottu cash edukka pathu - oru laptop repair!!! Andallukku vaazhthukkal, thamaraipoo pramaadhama varaijirukkaa


By Uma, at Sun Apr 10, 05:22:46 PM IST  


andal_art_3.jpg படம் (அந்த சின்ன வயசுக்கு) தூள்! :-)


By சு. க்ருபா ஷங்கர், at Mon Apr 11, 01:28:11 AM IST  


தேசிகன்,


நேற்று இங்கு சிங்கைத்தொலைக்காட்சியில் தமிழ் பெயர் தொடர்பாக ஒரு விஷ்யம்
வந்தது. நண்பர் (பனசை நடராஜன்) ஒருவரும் கலந்துகொண்டு கருத்து
தெரிவித்திருந்தார்.


அது தொடர்பில், இங்கு நண்பர்களிடம் பகிர்ந்துகொண்ட விஷயம், உங்களுக்குத்
தொடர்பிருப்பதால் இங்கே:


குழந்தைகளுக்கு பெயர்வைப்பது தொடர்பிலான உங்களுடைய கருத்தை நேற்றிரவு
(பதிவு செய்ததை) பார்த்தேன். ஆம் நீங்கள் சொல்வது ஏற்றுக்கொள்ளக்
கூடியதுதான். பிச்சை... பொன்ற - குழந்தைளை ஏளனப்படுத்துவது போன்ற
பெயர்கள் தவிர்க்கப்படவேண்டும் என்பது உண்மை. ஆனால், இப்போதெல்லாம்
மக்கள் தங்களுடைய குழந்தைக்குப் பெயர் வைப்பதில்(லாவது) மாடர்னாக
இருக்கவேண்டும் அடையாளத்தை மறக்கிறார்கள்.


நேற்று தொலைக்காட்சியில் பேசியவர்கள் கூடக் கூறிய கருத்து, பல்லின
சமுதாயத்தில் வாழும் நாம் அனைவரும் கூப்பிடும்படி பெயர் வைப்பது
நல்லதுதானே... தமிழ்பெயர்தான் வேண்டும் என்று சிலர் அடம்பிடிப்பது தவறு
என்றார்கள். நான் 96ல் இருந்து சிங்கப்பூரில் இருக்கிறேன், எனக்கு
கூப்பிடுவதற்கு வசதியாக, அன்பு என்றோ நடராஜன் என்றோ குறைந்த பட்சம்
பீட்டர், ஹீசேன் என்று கூட வைப்பதில்லை. சீனர்கள் பெரும்பாலும் Ng Guan
Kuang Goh என்றுதானே வைக்கிறார்கள். இன்றும் பலர் பெயர் சொன்னாலும்,
ஞாபகம் வைத்துக்கொள்ள அவர்கள் அணிந்திருக்கும் அடையாள அட்டையை உற்றி
நோக்கித்தான் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது (அங்கு (பெயரைப்பார்க்க)
உற்றி நோக்க சிலர் முறைத்த அனுபவமுண்டு என்பது தனிக்கதை:). இப்போதும்,
தொலைபேசியில் அழைத்து பெயர்கூறி அறிமுகப்படுத்திக்கொண்டவர்கள் பலர் பெயர்
தெரியவில்லைதான்.


Huyndai, Daewoo, Samsung, Toyota, TSunami, Panasonicலாம் இப்போ தமிழ்
பெயராகிவிட்டதால். கவின், எழில், இனிய தென்றல், பூங்குழலி, அமுது,
வெண்ணிலா, கவியன் எல்லாம் அன்னியமாகிப்போயிடுத்து (ஆனால் இங்கு
குறிப்பிட்ட பெயர்கள் எல்லாம் எனக்குத்தெரிந்த சில நண்பர்களின்
குழந்தைகள் பெயர்கள்தான், அந்த வகையில் திருப்தி).


எங்கள் மகளுக்கு, பெயர் வைக்கும்போது - மனைவி சொன்ன முக்கிய குறிப்பு,
பெயரில் ஷி - வரவேண்டும். சரியென்று எனக்கும் பிடித்த தர்ஷிணி பின்னர்
முழுதாக பிரியதர்ஷிணி. ஆனால், அவள் அடையாளத்தைச்சொல்ல "எழில்
பிரியதர்ஷிணி" என்று வைத்தோம். பெயர் நீளம் என்றார்கள், அப்போ எழில் -
மட்டும் வைத்துக்கொள்வோம் என்றேன். பிறர் மறுக்க எங்கள் மகள்:
இப்போது "எழில் பிரியதர்ஷிணி அன்புச்செழியன்" பலரும் கூப்பிடுவது பிரியா,
சிலர் தர்ஷிணி, எழில் ஆனால்... நன் கூப்பிடுவது பாப்பு, மனைவி பாப்பா...


மலர் விழி (மாதவி கூப்பிடு பெயர்)
அன்புச்செழியன் (பாஸ்கர் - அன்பு என்றால் நான் கல்லூரி செல்லும்வரை
யாருக்கும் ஊரில் தெரியாது, இப்போதும் பலருக்கு அப்படியே:),
கனிமொழி (சாந்தி)


என்று வைத்த எனது தந்தைகூட இந்தக்காலத்துல ஏன் இவ்ளோ நீளப்பெயர் என்றார்கள்.


நண்பர் தேசிகன், தனது மகள் கூறுவதாக எழுதியிருந்த
ஆண்டாள் - பதிவுகள் படித்தீர்களா?
http://desikann.blogspot.com/2004_06_01_desikann_archive.html


மற்றவை பிறகு.


என்றென்றும் அன்புடன்,
அன்பு


By அன்பு, at Thu Apr 14, 12:23:55 PM IST  


இப்பதான் படிச்சேன். மன்னிக்கவும். 2-அ படிச்சிட்டு கீழ உள்ள சுட்டிய பாக்காம 1-அ தேடிட்டு இருந்தேன்.


பதிவு அருமை. ஆண்டாளிடம் படங்களும் அறுமை என கூறுங்கள். ஆண்டாள் அழகான பெயரென்பதில் ஐயமில்லை.


By Halwacity.Shummy, at Thu Apr 14, 01:29:54 PM IST  


 

No comments:

Post a Comment