Thursday, February 24, 2005

பெரியார் & ©


என் அப்பாவிற்கு பிரபந்தத்தில் எவ்வளவு ஈடுபாடோ அதே போல் பெரியாரிடத்திலும் ஈடுபாடு உண்டு. எனக்கு பெரியாரின் கருத்துக்கள் மீது மதிப்பு வர காரணம் என் அப்பா தான். ஒரு முறை என்னிடம் "ஒரு பெரியார் படம் வரையேன்டா" என்றார். வரைந்தேன்(பார்க்க படம்). அந்த பெரியார் படத்தை வீட்டு வரவேற்பரையில் ஸ்ரீரங்கநாதருடைய படத்தின் பக்கத்தில் மாட்டினார். எங்கள் வீட்டுக்கு வந்த பலர் இதற்கு ஆட்சேபம் தெரிவித்தார்கள். ஆனால் என் அப்பா அதை கண்டுகொள்ளவில்லை.


சமீபத்தில் கலைஞன் பதிப்பகத்திற்கு சென்றிருந்தேன். அங்கு பி.சி.கணேசன் எழுதிய
"பெரியார் ஒரு சகாப்தம்" என்ற புத்தகத்தில் நான் வரைந்த ஓவியம் அட்டைப்படமாக
இடம்பெற்றிருந்ததைகண்டேன். நம்முடைய ஒரு படைப்பை யாருடையதைப் போன்றோ சந்திக்கும் 'இன்ப அனுபவத்தை' வாழ்க்கையில் முதன்முதலாகக் கண்டேன். உள்ளே "அட்டை படம்" என்று வேறு யாருடைய பெயரோ இருந்தது. அங்கு உள்ள மேனேஜரிடம் இதை பற்றி கேட்டேன். என்னை ஒரு முறை உற்றுப் பார்த்துவிட்டு, தலையை ஒரு முறை ஆட்டிவிட்டு ஏதோ கணக்கு எழுத ஆரம்பித்துவிட்டார்.


நான் வரைந்த படத்தை ஒருவர் உபயோகிப்பதில் எனக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால் எங்காவது ஒரு மூலையில் அதை வரைந்த ஆளின் பெயரைப் போடுவதில் என்ன மனச் சிக்கல் இருக்கிறது என்று எனக்குப் புரியவில்லை.


காலேஜில் இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருக்கும் போது, ஆசிரியர் எங்களுக்கு Text Bookகை பார்த்து நோட்ஸ் கொடுத்துக்கொண்டிருந்தார். எல்லோரும் அமைதியாக நோட்ஸ் எழுதிக்கொண்டிருந்தோம். என் பக்கத்து மாணவன் நோட்ஸ் எழுதாமல் இருந்தான். ஆசிரியர் அவனை பார்த்து "ஏம்பா நீ நோட்ஸ் எழுதவில்லை ?" என்று கோபமாக கேட்டார். அதற்கு அந்த மாணவன் அந்த புத்தகத்தை அவரிடம் வாங்கி இரண்டாம் பக்கத்தில் கீழே பொடிசு எழுத்தில் உள்ளதை படித்துக் காண்பித்தான். ஆசிரியர் அதற்கு பிறகு எங்களுக்கு நோட்ஸ் கொ

Old comments from my previous Blog


Desikan,


do you remember the artist name from the book? My friend Pugazhenthi had a series of Periyar line drawings (kOttOviyam) published a few years back and they look similar to yours. Please check out:


http://www.oviarpugazh.com/gallery/view_album.php?set_albumName=thisaimugam


Is it possible that you saw one of these pictures?


Thanks.


By Srikanth, at Thu Feb 24, 10:13:29 PM IST  


Srikanth,


Thanks for the links. It is a pleasure to look the various potraits.


If you see my art is slightly ameturish. My pen sketch is alomst 13 years old :-)


thanks


By Desikan, at Thu Feb 24, 10:39:02 PM IST  


தேசிகன் ஏன் பேசாமல் விட்டு விட்டீர்கள். தங்கள் படம்தான் என்று உறுதியாகத் தெரிந்து அதனை உறுதிப்படுத்தினால் அவர்கள் நஷ்ட ஈடு தரவேண்டும் தெரியுமா?
அண்மையில் அமெரிக்காவில் இதே போன்று ஒரு வழக்கு இடம்பெற்றது.
மக்ஸ்வெல் எனும் ஒரு கோப்பி நிறுவனம் ஒரு ஆணின் முகத்தை அவருக்குத் தெரியாமல் தமது போத்தலில் பல வருடங்ளாக உபயோகித்து வந்தது. ஒரு நாள் அந்த மனிதர் கோப்பி போத்தலில் இருப்பது தான் தான் என்று அடையாளம் கண்டு தான் முன்பு வேலை செய்த விளம்பரக் கொம்பனியில் போய் கதைத்து அந்தக் கோப்பி கொம்பனி தனக்குத் தெரியாமல் தனது அனுமதியில்லாமல் தனக்கு நஷ்ட ஈடு வழங்கவேண்டும் என்று எட்டு மில்லியன் டொலர்களை கேட்டிருக்கின்றார் அவர்கள் அதற்கு மறுப்புத் தெரிவிக்கவே அந்த நபர் வழக்குப் போட்டு வென்று இப்போது அவருக்கு 15 மில்லியன் டொலர்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இது இந்தியாவில் எவ்வளவு சாத்தியம் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் தாங்கள் வழக்குப் போட முடியும் என்றே நம்புகின்றேன்.


By கறுப்பி, at Fri Feb 25, 03:25:59 AM IST  


தேசிகன்,
படம் உங்களுடையதுதான் என்று உங்களுக்கு உறுதியாகத் தெரியும்படசத்தில் அதை உரிய முறையில் எதிர்கொள்ளுவது உங்களின் உரிமை மட்டுமல்ல, ஒரு வகையில் அது ஒரு சமுதாயக் கடமை என்று சொன்னால் அது தவறல்ல. அது தமிழ் பதிப்புலகம் ஒரு சரியற்ற வழியில் செல்வதை முழுவதும் தடுத்து நிறுத்தாவிட்டாலும், தொழில்முறைக் கலைஞர்களின் உழைப்பு அவர்களுக்குத் தெரியாமல் மற்றவர்கள் பயன்படுத்திக்கொள்வதைக் கொஞ்சமாகவாகது தடுக்க இயலும்.


குறைந்த பட்சம் இதை உரியவர்களுக்குத் தெரியப்படுத்தவாவது வேண்டும் என்பது எனது சிறிய அபிப்பிராயம்.


By Muthu, at Fri Feb 25, 05:00:09 AM IST  


ஸ்ரீகாந்த் எழுதியதை சரியாய் படிக்காமல் தேசிகன் பதிலளித்திருப்பதாய் தெரிகிறது.


ஸ்ரீகாந்த் சுட்டிய தளத்தில் இந்த ஒரு ஓவியம் தேசிகனின் ஒவியத்துடன் ஒப்பிடகூடியதாய் இருக்கிறது- http://www.oviarpugazh.com/gallery/view_photo.php?set_albumName=thisaimugam&id=aar
ஒரு வேளை இதைத்தான் அந்த புத்தகத்தில் பார்தாரா என்பதையும், அங்கே குறிப்பிடபட்ட பெயர் புகழேந்தியா என்பதையும் தேசிகன்தான தெளிவுபடுத்த வேண்டும்.


By ROSAVASANTH, at Fri Feb 25, 09:26:06 AM IST  


அன்புள்ள ROSAVASANTH,
சுட்டிகாட்டியதற்கு நன்றி. அந்த புத்தகத்தில் புகழேந்தியின் பெயர் குறிப்பிடப்படவில்லை.


முத்து, கறுப்பி,
அந்த புத்தகத்தில் உள்ளது என்னுடைய ஓவியம் தான் அதில் எனக்கு எந்த விதமான ஐயமும் இல்லை
தேசிகன்.


By Desikan, at Fri Feb 25, 10:59:37 AM IST  


Rozavasanth,


I saw the pics in pugazendhi's website. None of them seems to be similar to the one drawn by Desikan. Which one are you referring to?


enRenRum anbudan
BALA


By Anonymous, at Fri Feb 25, 02:33:55 PM IST  


தேசிகன்,
உங்களின் தந்தைக்கு பெரியார் மீதான மரியாதை குறித்த வலைப்பதிவு மிகுந்த நம்பிக்கை யை தருவதாக அமைந்திருக்கிறது. வைதீக முறையில் வாழ்ந்து வருவோர் பெரியார் குறித்தான சில கருத்துக்களை முன்வைக்கும் போது அவை நல்ல மதிப்பினை பெறும்.நீங்கள் இடைவேளையின் போது பாப்கர்ன் தேடுபவர் என்றால்,நான் சிந்துபாத்-தில் கூட ஓவியத்தினை கவனிக்காதவன்.
தங்களின் ஓவியம் அமடெஉரிஷ் என்பதனை அறிந்து கொள்ள இயலவில்லை.படைப்பாளி யின் மிகப்பெரிய ஏமாற்றம்,எவ்வித பலனுமின்றி அவனது படைப்பினை தாரை வார்ப்பதுதான்.நீங்கள் ஏதாவது செய்யலாம்.எது என்று சொல்லத்தெரியவில்லை


By Vaa.Manikandan, at Fri Feb 25, 02:54:47 PM IST  


பாலா, நீங்கள் சொல்வது சரி. எதுவும் இதை போல இல்லை. ஸ்ரீகாந்த் சொன்னதால் ஓரளவு ஒப்பிடகூடியதாய் ஒன்றை குறிப்பிட்டேன்.(அதன் முகவரியை தந்துள்ளேன்). நான் இதை போல இருக்கிறது (அதாவது அருகில் வைத்து பார்தால்) என்று சொல்ல வரவில்லை. ஸ்ரீகாந்த் இதில் ஒன்றை பார்த்து தவறாக கருதிய்ருக்க கூடுமோ என்று கேட்டதால் ஓரளவு 'ஒப்பிடகூடியதாய்' ஒன்றை குறிப்பிட்டேன்.


By ROSAVASANTH, at Fri Feb 25, 03:23:36 PM IST  


புகழேந்தியின் இந்தக் கோட்டோவியங்கள் புத்தகமாக வந்த்போது அதை வாங்கினேன். அதை என்னுடைய சொந்த உபயோகத்துக்காக ஸ்கேன் பண்ணவேண்டுமென பல நாளாய் (மாதங்களாய்)நினைத்திருந்தேன். ஸ்ரீகாந்தின் சுட்டி அதை தேவையற்றதாக்கிவிட்டது. நன்றி உங்களுக்கும், ஸ்ரீகாந்துக்கும், புகழேந்திக்கும்.


By Thangamani, at Sun Feb 27, 06:30:44 AM IST  


i have not seen the picture in "periyar oru sagapatham". but i looked at pugazhanthi's arts on periyar. there is a immense difference between the two. the style of desikan and pugazhanthi are totally different. people can have a closer lookup.


By kicha, at Wed Mar 02, 03:30:03 PM IST  


திருடராய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது!!!


By Moorthi, at Thu Mar 03, 08:20:43 AM IST  


Apart from the copyright issue of your work, I really liked the way ur friend's reply to ur teacher. I did the same once in my college, where my lecturer literally repeating the book's contents as notes, He asked me whether I am taking his notes r not. I replied that "I have that book with me".
First time visit to ur blog and not the last time.


By REFLEX, at Mon Mar 28, 06:54:19 PM IST  


 

No comments:

Post a Comment